சதோசாவுக்குள் யூரியா, இரு பணியாளர்கள் வெளியேற்றம்!

31shares
Image

வவுனியா சதோச விற்பனை நிலையத்தில் நேற்று முன்தினம் விற்பனைக்கு வைக்கப்பட்ட சீனியில் யூரியா கலக்கப்பட்டுள்ள சம்பவத்தினையடுத்து சதோச தலைமை அலுவலகத்தினால் வவுனியா சதோச விற்பனை நிலையத்தின் முகாமையாளர் மற்றும் யூரியாவை நிலையத்திற்குள் எடுத்து வந்த பணியாளர் ஆகிய இருவரையும் நேற்று பணி நீக்கம் செய்துள்ளதாக வவுனியா சதோச விற்பனை நிலையத் தகவல் தெரிவிக்கின்றன.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று முன்தினம் வவுனியா சதோச விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்பட்ட சீனியில் யூரியா கலந்துள்ளதாக சதோசாவில் பணியாற்றும் பணியாளர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டனர். இதையடுத்து பொலிசார் சுகாதாப்பரிசோதகர்களின் கவனத்திற்குக்கொண்டு வந்தனர். அங்கு சென்ற சுகாதாரப்பரிசோதகர்கள் மேற்கொண்ட விசாரணைகளின்போது சதோசா விற்பனை நிலையத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் தனது தேவைக்காக யூரியாவைக் கொள்வனவு செய்து வைத்திருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து பிறிதொரு பணியாளர் அதனை சீனி என நினைத்து, விற்பனை செய்யப்பட்டு வந்த சீனியுடன் விற்பனைக்காக கலந்துவைத்துள்ளார். அன்றைய தினம் சீனியைக் கொள்வனவு செய்த நபர் ஒருவர் மாலை நேரம் கொள்வனவு செய்த சீனியை எடுத்து வந்து கொடுத்துவிட்டு சீனியில் வித்தியாசம் உள்ளதைத் தெரியப்படுத்தியுள்ளார். அனைத்து சீனி மூடைகளையும் பரிசோதனை மேற்கொண்ட பின்னர் சதோச நிலையத்தில் வைக்கப்பட்ட யூரியாவை தேடியபோது சீனிக்குள் யூரியா கலக்கப்பட்ட சம்பவம் தெரியவந்துள்ளது. இதன் பின்னர் சதோச பணியாளர்கள் பொலிஸ் நிலையத்தில் நடந்தவற்றை தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இன்று சதோச நிலையத்திற்குச் சென்ற சுகாதாரப்பரிசோதகர்கள் இரண்டாம் கட்டமாக யூரியா இராசாயனம் கலந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் சீனியை அங்கிருந்து அகற்றிவருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க
கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!