ஈஸ்வரங்களை புனித தலங்களாகபிரகடனம் செய்ய வேண்டும்!

12shares
Image

ஸ்ரீலங்காவிலுள்ள திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம் ஆகிய தலங்கள், இந்துக்களின் புனித தலங்களாக பிரகடனம் செய்யப்பட வேண்டும் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற, இந்து மத விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் அமைச்சரவையில் சமர்ப்பிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சுமார் 400 ஆண்டுக்கால வரலாறு கொண்ட மன்னார் மடு தேவாலயம் புனித பிரதேசமாக அறிவிக்கப்பட கோரும் அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்பித்திருந்தார்.

இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதுடன் இதுவே நாட்டில் பிரகடனம் செய்யப்பட்டுள்ள முதலாவது கத்தோலிக்க புனித தலமாகும்.

இந்நிலையில் ஸ்ரீலங்காவிலுள்ள திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம் ஆகிய தலங்கள், இந்துக்களின் புனித தலங்களாக பிரகடனம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி அமைச்சர் மனோ கணேசன், அமைச்சர் சுவாமிநாதனுக்கு அதிகாரபூர்வமாக கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில் திருஞானசம்பந்தரால் பாடப்பட்டு, தென்கைலாயம் என கொண்டாடப்படும் கிழக்கு கரையில் அமைய பெற்ற திருக்கோணேஸ்வரம், மேற்கு கரையில் அமையப்பெற்ற திருக்கேதீஸ்வரம் ஆகிய தலங்களையும், வட கோடியில் அமைந்துள்ள நகுலேஸ்வரம் தலத்தையும், புனித தலங்களாக பிரகடனம் செய்ய வேண்டுமென இந்துக்கள் தன்னிடம் கோரியுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதனால் இந்து மத விவகார அமைச்சர் என்ற வகையில் டி.எம். சுவாமிநாதன் மூன்று தலங்களையும் புனித தலங்களாக அறிவிக்க கோரும் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என வலியுறுத்திய அமைச்சர் மனோ கணேசன், அதற்கான ஒத்துழைப்புகளை வழங்க தான் தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்