மஹிந்த அணியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் இவரா?

39shares

ஸ்ரீலங்காவில் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தம்மை நியமித்துள்ளதாக வெளியான தகவலை கோட்டாபய ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் இது குறித்த போலியான ஊடக அறிக்கை வெளியாகிவருவதாகவும் தனது பேஸ்புக் பக்கத்தில் கோட்டாபய ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்காவில் 2020 ஆம் ஆண்டு நடத்தப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தரப்பில் அவரின் சகோதரரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ச நிறுத்தப்படலாம் என ஊகங்கள் வெளியிடப்பட்டுவருகின்றன.

இதன் உச்சக் கட்டமாக தற்போது ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்சவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நியமித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் இந்த தகவலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் அவரது சகோதரரான கோட்டாபய ராஜபக்சவும் நிராகரித்துள்ளனர்.

தாம் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியான ஊடகத் தகவல்களில் எந்தவொரு உண்மையும் இல்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார்.

மக்களையும் அரசியல் தரப்பினரையும் குழப்பும் வகையிலும் தவறாக வழிநடத்தும் வகையிலும் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சில அரசியல் தரப்பினரே இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஊடகங்களில் போலியான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பிரிவின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்டவின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பெயரிடப்பட்டு, 2020 ஆம் ஆண்டின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் நேற்றுமுதல் தகவல் வெளியிடப்பட்டுவருகின்றமை தமது கவனத்திற்கு வந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

இந்தப் போலி அறிக்கையில், பொதுஜன பெரமுனவின் உத்தியோகபூர்வ ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்சவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நியமித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது எனவும் ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் பொதுஜனப் பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை மஹிந்த ராஜபக்ச இதுவரை தீர்மானிக்கவில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சிங்கப்பூர் பயணமாகியுள்ள நிலையில், இவ்வாறான போலியான அறிக்கை சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன மற்றும் கூட்டு எதிர்கட்சி சார்பான ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை ஊடக அறிக்கையொன்றின் மூலமாக மஹிந்த ராஜபக்ச நியமிக்க மாட்டார் எனவும் தனிப்பட்ட முறையில் பொதுநிகழ்வொன்றில் வைத்தே ஜனாதிபதி வேட்பாளரை அவர் அறிமுகப்படுத்துவார் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டின் ஜனாதிபதி என சிங்களத்தில் தலைப்பிடப்பட்டுள்ள இந்த ஊடக அறிக்கை வெளியிடப்பட்டிருந்தாலும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறாது என மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் 2019 ஆம் ஆண்டில் நடைபெறும் எனவும் அரசியலமைப்பின் பிரகாரம் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?