மஹிந்த அணியை தேடிச்செல்லும் தேர்தல்கள் ஆணைக்குழு, காரணம் இது தான்!

17shares
Image

முன்னாள் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

மாகாண சபைத் தேர்தலை துரிதப்படுத்துமாறு எதிர்க்கட்சிகளின் அழுத்தம் வலுப்பெற்றுள்ள நிலையிலேயே தேர்தல்கள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற அதிகாரத்தை நடைமுறைப்படுத்தி தேர்தல் சட்டம் உடனடியாக அமுல்படுத்தப்பட்டால் மாகாண சபை தேர்தல் எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதத்ததில் நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் ஆண்டு ஜனவரி 05 திகதி முதல் 10 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் நடத்துவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மாகாண சபைத் தேர்தலை நடத்தி உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான சுற்றறிக்கை இதுவரையில் பூர்த்தி செய்யப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மாகாண சபைத் தேர்தலை துரிதப்படுத்துமாறு எதிர்க்கட்சிகளின் அழுத்தம் வலுப்பெற்றுள்ளமையினால் தேர்தல்கள் ஆணைக்குழு கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க தீர்மானித்துள்ளது.

தேர்தல் பிற்போடப்படுவதற்கான காரணம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் வகையிலேயே இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது, தேர்தல் முறை மாற்றம் தொடர்பாக புதிய சட்டத்தை இயற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமதமே தேர்தல் பிற்போடப்படுவதற்கு காரணம் என்பதை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய விளக்கவுள்ளார்.

எனினும் மாகாண சபை தேர்தலை கூடிய விரைவில் நடத்துமாறும் ஒன்றிணைந்த எதிரணியினர் அரசாங்கத்திற்கு தொடர் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றனர்.

எனவே தேர்தலை பழைய முறையிலோ அல்லது புதிய முறையிலோ நடத்த முடியாத சட்ட சிக்கல்களுக்கு அரசாங்கம் உள்ளாகியுள்ளமையே தேர்தல்கள் பிற்போடுவதற்கான காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த பெண்னுக்கு நேர்ந்த அதிர்ச்சி; மக்களே எச்சரிக்கை!

வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த பெண்னுக்கு நேர்ந்த அதிர்ச்சி; மக்களே எச்சரிக்கை!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!