யாழ் மண்ணில் தெற்காசியாவின் பிரமாண்ட உதைபந்தாட்ட இறுதிச் சுற்று!! உலகம் முழுவதும் நேரலை

1278shares

IBC தமிழ் பெருமையுடன் நடாத்தும் வடக்கு கிழக்கு பிறீமியர் லீக் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் மாலை 6மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

தெற்காசியாவில் இரண்டாவது அதிக பரிசுத்தொகையை கொண்ட NEPL தொடரின் இறுதிப் போட்டியில் கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய IBC தமிழின் கிளியூர் கிங்ஸ் அணியும் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய 4 அணிகளில் ஒன்றான ரில்கோ கொங்கிரஸ் அணியும் மோதுகின்றன.

கடந்த 3 மாதங்களாக நடைபெற்ற NEPL தொடரில் வடக்கு கிழக்கின் 8 மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 12 அணிகள் பங்குபற்றியிருந்தன.

இதில் யாழ் மாவட்டத்தில் இருந்து நொதேர்ன் எலைட் அணியும், வல்வை FC அணியும், தமிழ் யுனைடட் அணியும், ரில்கோ கொங்கிரஸ் அணியும் பங்குபற்றியிருந்தன.

மேலும் மன்னார் மாவட்டத்திலிருந்து மன்னார் FC அணியும், மாதோட்டம் FC அணியும் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து கிளியூர் கிங்ஸ் அணியும் வவுனியா மாவட்டத்தில் இருந்து வவுனியா வொறியேர்ஸ் அணியும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து முல்லை பீனிக்ஸ் அணியும் பங்குபற்றியிருந்தன.

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து ரிங்கோ ரைரன் அணியும், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து மட்டுநகர் சூப்பர் கிங்ஸ் அணியும், அம்பாறை மாவட்டத்தில் இருந்து அம்பாறை அவெஞ்சர்ஸ் அணியும் பங்குபற்றியிருந்தன.

லீக் போட்டிகளில் அனைத்து அணிகளும் ஒவ்வொரு முறை மற்றைய அணிகளுடன் மோதியிருந்தன.

லீக் போட்டிகளின் முடிவில் ரில்கோ கொங்கிரஸ், கிளியூர் கிங்ஸ், வல்வை FC, மன்னார் FC அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்திருந்தன.

முதலாவது அரையிறுதி போட்டியில் கிளியூர் கிங்ஸ் அணியை எதிர்கொண்ட ரில்கோ கொங்கிரஸ் அணி 00 : 05 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிக்குள் முன்னேறியது.

அடுத்து 21/08/2018 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எலிமினேற்றர் போட்டியில் வல்வை FC அணியும் மன்னார் FC அணியும் மோதியிருந்தன.

இந்த போட்டியில் மன்னார் அணியை வீழ்த்தி வல்வை FC அணி அரையிறுதிக்கு முன்னேறியிருந்தது.

இரண்டாவது அரையிறுதி போட்டியில் கிளியூர் கிங்ஸ் அணியை எதிர்த்து வல்வை FC அணி மோதியிருந்தது.

23/08/2018 வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் கிளியூர் கிங்ஸ் 02 :00 என்ற கோல் கணக்கில் வல்வை FC அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுளைந்தது.

வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (26/08/2018) நடைபெறவுள்ள மாபெரும் இறுதிப்போட்டியில் ரில்கோ கொங்கிரஸ் அணியை எதிர்த்து கிளியூர் கிங்ஸ் அணி மோதவுள்ளது.

மிக பிரம்மாண்டமான யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் வானவேடிக்கைகள் மேள கச்சேரி மற்றும் நடன நிகழ்ச்சிகள் என்பன நடைபெறவுள்ளன.

இந்த இறுதிப்போட்டியை உலகம் முழுவதும் உளள தமிழ் உதைபந்தாட்ட ரசிகர்கள் ஐ.பீ.சி. தமிழ் தொலைக்காட்சி நேரலையில் கண்டு மகிழலாம்.

இதையும் தவறாமல் படிங்க
வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த பெண்னுக்கு நேர்ந்த அதிர்ச்சி; மக்களே எச்சரிக்கை!

வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த பெண்னுக்கு நேர்ந்த அதிர்ச்சி; மக்களே எச்சரிக்கை!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!