பாரிசில் இடம்பெற்ற ரயில் விபத்து; பலர் காயம்!

16shares
Image

நேற்று (11.06.2018) பெய்த மழையின் காரணமாக மண் அரிப்பு நேரிட்டதால், பாரிஸ் புற நகர் ரயில் ஒன்றின் மூன்று பெட்டிகள் கவிழ்ந்ததில் ஏழு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

மழை காரணமாக ரயில் பாதையை தாங்கி நின்ற மண் மழை வெள்ளத்தால் அரிக்கப்பட்டதால், பாரிஸ் நோக்கி சென்ற புற நகர் ரயில் ஒன்றின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன.

அது அந்த தடத்தில் முதல் ரயிலானதாழும், ரயிலில் குறைந்தளவிளான நபர்கள் மாத்திரமே இருந்ததாலும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக Gif-sur-Yvette-இன் மேயரான Michek Bournet தெரிவித்தார்.

இன்னும் ஒரு மணி நேரத்திற்கு பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்திருந்தால் ஒரு பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும், ஏனென்றால் ஏராளமான மாணவர்கள் ரயிலில் செல்லும் நேரம் அது என்று அவர் கூறினார்.

ரயில் தண்டவாளத்தின் ஒரு பகுதியில் மரம் விழுந்துள்ளதாக ரயில் ஓட்டுநருக்கு தகவல் வந்ததால் அவர் ரயிலை வழக்கத்தைவிட குறைவான வேகத்தில் ஓட்டி சென்றுள்ளார்.

என்றாலும் ரயில் பயணிக்கும் நேரத்தில் இருட்டாக இருந்ததால் தண்டவாளத்தை தாங்கி நின்ற மண் அடித்து செல்லப்பட்டதை ஓட்டுநர் அவதானிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதையும் தவறாமல் படிங்க
புலம்பெயர் தமிழர்களுக்கு அதிர்சியளித்த நல்லாட்சி!

புலம்பெயர் தமிழர்களுக்கு அதிர்சியளித்த நல்லாட்சி!

கிளிநொச்சியில் புலி!! மடக்கிப் பிடித்தார்கள் பொதுமக்கள்(வீடியோ இணைப்பு)

கிளிநொச்சியில் புலி!! மடக்கிப் பிடித்தார்கள் பொதுமக்கள்(வீடியோ இணைப்பு)

விடுதலைப்புலிகளின் கொடி சீருடை  ஆகியவற்றுடன் இருவர் கைது ஒருவர் தப்பியோட்டம்

விடுதலைப்புலிகளின் கொடி சீருடை ஆகியவற்றுடன் இருவர் கைது ஒருவர் தப்பியோட்டம்