ஜெர்மனி தம்பதிகளுக்கு கனடாவில் காத்திருந்த அதிர்ச்சி; விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!

233shares

கனடாவில் காரில் தனது குடும்பத்தினருடன் சென்று கொண்டிருந்த ஜேர்மனி சுற்றுலாப் பயணி ஒருவர், சுடப்பட்ட விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜேர்மனியைச் சேர்ந்த 60 வயது சுற்றுலாப்பயணி ஒருவர், கனடாவிற்கு தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.

அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் தனது மனைவி, மகன் மற்றும் அவனது மகனின் தோழி ஆகியோருடன் காரில் பயணம் செய்துகொண்டிருந்தார்.

அவரது கார் அல்பெர்டாவின் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து, மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இது ஒரு விபத்தாக இருக்கலாம் என்று ஆரம்பத்தில் கருதப்பட்டது.

ஆனால், பொலிசார் விசாரணை நடத்தியதில் குறித்த நபரின் தலை குண்டு பாய்ந்திருந்தது தெரிய வந்தது. அவர் காரில் சென்று கொண்டிருந்தபோது மற்றொரு காரில் வந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். அதன் காரணமாக ஜேர்மனிய சுற்றுலாப்பயணியின் கார் விபத்துக்குள்ளாகியுள்ளது என்பதை பொலிசார் கண்டுபிடித்தனர்.

துப்பாக்கியால் சுடப்பட்டதால் சுற்றுலாப் பயணி பலியானார். அத்துடன் கார் மரத்தில் மோதியதால் அவரது குடும்பத்தினர் படுகாயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்கள் நலமுடன் இருந்தாலும், விபத்து நடந்த அதிர்ச்சியில் இருந்து அவர்கள் மீளவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், பொலிசார் ஒருவரை கைது செய்து அவரது வாகனத்தை கைப்பற்றியுள்ளனர். மேலும், அந்நபர் ஏன் துப்பாக்கியால் சுட்டார் என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க
கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!