Sri Lanka Tamil News | Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் செய்திகள் - IBC Tamil
பாலியல் அத்துமீறல் செய்ததாக பெண்ணொருவர் புதுக்குடியிருப்பு காவல்துறைக்கு அளித்த
முறைப்பாட்டின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் கைது
செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் செல்ல
அனுமதிக்கப்பட்டதோடு 17.11.2026 ற்கு வழக்கு தவணையிடப்பட்டுள்ளது
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்
புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளரது வீட்டிற்கு அருகில் வசிக்கும்
பெண்ணொருவரினால் புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் தவிசாளர் தனக்கு
பாலியல் அத்துமீறல் செய்ததாக அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில்
புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளரை விசாரணைக்காக அழைத்த காவல்துறையினர்
16.10.2026 அன்று தவிசாளரை கைது செய்தனர்
முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் முன்னிலை
இந்நிலையில் 16.10.2026 அன்றைய தினமே தவிசாளரை இலங்கை தண்டனைச் சட்டக்
கோவையின் 345 ஆம் பிரிவின் கீழ் வார்த்தைகள் அல்லது செயல்கள் மூலமாக பாலியல்
ரீதியான மன உளைச்சலையோ அல்லது துன்புறுத்தலையோ ஏற்ப்படுத்தல் என்ற
அடிப்படையில் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி ரி கெங்காதரன்
முன்னிலையில் முன்னிலைப்படுத்தினர்
இதன்போது தவிசாளர் தரப்பு சட்டத்தரணி அவர்களது வாதங்களை கேட்ட பதில் நீதிபதி
தவிசாளரை இரண்டு இலட்சம் பெறுமதியான இரண்டு ஆள்பிணையில் செல்ல அனுமதித்ததோடு
வழக்கினை எதிர்வரும் 17.11.2026 ற்கு தவணையிட்டார்
ச
ம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌சவிற்கு எதிரான விசாரணைகள் தொடர்பான வழக்குக் கோவைகள் மற்றும் ஆவணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு  அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்‌சவை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கும், நிலுவையில் உள்ள விசாரணைகள் தொடர்பில் சர்வதேச கைது பிடியாணையினைப் பெறுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பசில் ராஜபக்‌சவைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டது.
இன்டர்போல் சிவப்பு அறிவித்தல்
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்குக் கொழும்பு கோட்டை நீதிவான் பசன் அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.
அத்துடன், பசில் ராஜபக்‌சவுக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு அறிவித்தலைப் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு நீதவான் கட்டளையிட்டார்.
இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த கருத்துக்களைத் தொடர்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
அம்பாறை - சாய்ந்தமருது மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நீண்டகாலமாகக் கைத்தொலைபேசி
ஊடாகக் குறுஞ்செய்திகளை அனுப்பி ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த
சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
35 வயதுடைய குறித்த சந்தேக நபர் சனிக்கிழமை (17) மாலை சாய்ந்தமருது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு உத்தியோகத்தருக்குக்
கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இச்சுற்றிவளைப்பு
முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
சம்பவ தினத்தன்று மாவடிப்பள்ளிப் பகுதியில் இருந்து சாய்ந்தமருது பகுதி நோக்கி மோட்டார் சைக்கிளில் போதைப்பொருள் கடத்தப்பட்ட போது குறித்த  சந்தேகநபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைத்தொலைபேசி ஊடாக மின்னல் வேகத்தில் குறுஞ்செய்திகளைப் பரிமாறி, மிகவும்
நுணுக்கமான முறையில் இச்சட்டவிரோத வியாபாரம் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட
சந்தேகநபரிடமிருந்து ஒரு தொகை ஐஸ் போதைப்பொருள், கடத்தலுக்குப்
பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் கைத்தொலைபேசி என்பன காவல்துறையினரால்
கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதான சந்தேகநபரைச் சான்றுப் பொருட்களுடன் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான மேலதிக விசாரணைகளை இன்று(18) சாய்ந்தமருது காவல்துறையினர்
முன்னெடுத்து வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
மன்னார் மடு பிரதான வீதியில் இன்று (18) அதிகாலை 5.45 மணியளவில்
இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர்
காயமடைந்துள்ளனர்.
நீர்கொழும்பு பகுதியில் இருந்து நான்கு பேர் கார் ஒன்றில் மடுத் தேவாலயம்
நோக்கி பயணித்த நிலையில், மடு தேவாலயத்தில் இருந்து சில கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு முன்பு, வீதியை விட்டு விலகி மரத்தில்
கார் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பெண் ஒருவர் உயிரிழப்பு
இந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்த நிலையில், அருகில் உள்ள பெரிய
பண்டிவிரிச்சான் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை பெண் ஒருவர்
ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து காயமடைந்த மூன்று பேரையும் மேலதிக சிகிச்சைக்காக
பெரியபண்டிவிரிச்சான் பிரதேச வைத்தியசாலையில் இருந்து நோயாளர் காவு வண்டி
மூலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்,
சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மடு காவல்துறையினர் மேலதிக விசாரணை
உயிரிழந்த சிரோமி லக்சிகா மாரி பெர்னாண்டோ ( வயது - 55) என்ற பெண்ணின்
சடலம், பெரியபண்டிவிரிச்சான் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சாரதியின் தூக்கக்கலக்கத்தில் இந்த விபத்து இடம் பெற்றிருக்கலாம் என
கூறப்படுகிறது.சம்பவம் தொடர்பாக மடு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
இலங்கையின் மிகவும் பிரபலமான தந்தம் கொண்ட காட்டு யானைகளில் ஒன்றான 'அக்போ'வைக் கண்டுபிடிக்க, சுற்றுச்சூழல் அமைச்சருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் இடையிலான கலந்துரையாடலைத் தொடர்ந்து, ஒரு சிறப்பு இராணுவக் குழு களமிறக்கப்பட்டுள்ளது.
இந்த யானையைக் கண்டு பிடிக்கும் முயற்சிகளை விரைவுபடுத்தவும், அதன் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த இராணுவக் குழுவை உடனடியாக ஈடுபடுத்துமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உத்தரவிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்போ தற்போது எங்கே இருக்கிறது
தற்போது நடைபெற்று வரும் தேடுதல் நடவடிக்கையை மேலும் வலுப்படுத்துவது குறித்து சுற்றுச்சூழல் அமைச்சரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் கலந்துரையாடியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
தொடர்புடைய அரச நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அக்போ தற்போது எங்கே இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதைப் பாதுகாப்பதற்கான அவசியமான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அனுராதபுரத்தின் திரப்பனே பகுதியில் அடிக்கடி காணப்படும் 'அக்போ' எனும் இந்த யானை, 2023-ஆம் ஆண்டில் அதன் இடது முன் காலில் துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட கடுமையான காயத்தினால் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது.
வேட்டைக்காக வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியால் (trap gun) காயமடைந்த இந்த யானை, நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டது. இதற்காக பல மாதங்களாக தீவிர கால்நடை மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
மீண்டும்  துப்பாக்கிச் சூடு
மருத்துவர் தாரக பிரசாத் மற்றும் மருத்துவர் சந்தன ஜயசிங்க உள்ளிட்ட வனவிலங்கு கால்நடை மருத்துவர்கள் இந்த யானைக்குச் சிகிச்சை அளித்தனர். உள்ளூர் மக்களும் வனவிலங்கு ஆர்வலர்களும் அதன் உடல்நிலை தேறி வருவதை மிகுந்த அக்கறையுடன் கவனித்து வந்தனர்.
சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும், 2023 ஒக்டோபரில் மீண்டும் இந்த யானை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இது காட்டு யானைகளின் பாதுகாப்பு குறித்த பெரும் கவலையை ஏற்படுத்தியது.
இந்த யானைக்கு நீண்ட காலம் அளிக்கப்பட்ட சிகிச்சைகளும், அதன் உடல்நிலை தேறி வந்த நிகழ்வும் இலங்கையில் வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பான ஒரு முக்கிய செய்தியாகப் பேசப்பட்டது.
இது, சட்டவிரோத துப்பாக்கிகளாலும், மனித-யானை மோதல்களாலும் காட்டு யானைகள் எதிர்கொள்ளும் ஆபத்துகளை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
துப்பாக்கிச் சூட்டுக் காயத்திற்குச் சிகிச்சை பெற்று வந்த 'கவந்திஸ்ஸ' எனும் மற்றொரு புகழ்பெற்ற காட்டு யானை, ஒக்டோபர் 16 அன்று உயிரிழந்த சில நாட்களிலேயே, அக்போவைத் தேடும் இந்த புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
யாழ்ப்பாணம் - பலாலி பகுதியில் இராணுவம் கையகப்படுத்திவைத்துள்ள தமது பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் குறித்த நிலமீட்பு போராட்டம் இன்று (18.10.2026) 18ஆவது
வாரமாகவும் முன்னெடுக்கப்பட்டது.
பலாலி பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தமது காணிகளை மீளவும்
தங்களிடம் கையளிக்க வேண்டும் என வலியுறுத்தி, மக்கள் தொடர்ந்தும் போராட்டத்தில்
ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் கோரிக்கை
நீண்டகாலமாக தமது சொந்த நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில்,
வாழ்வாதாரத்தையும் பூர்வீக உரிமைகளையும் மீட்டெடுப்பதற்கான தீர்வு வழங்கப்பட
வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தநிலையில் பலாலி பகுதியை சேர்ந்த மக்கள் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் தமது
காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் , இன்றைய
தினம் ஞாயிற்றுக்கிழமை 18ஆவது வாரமாக போராட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
கனடாவின் அல்பர்டா மாகாணம் வைன்ரைட் நகரில் அமைந்துள்ள இராணுவ தளத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த இராணுவ தளத்தில் இராணுவ வீரர்களுக்கு பயிற்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குறித்த இராணுவ தளத்தில் இன்று (18) பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்தததோடு 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தீவிர விசாரணை
குண்டு வீச்சு பயிற்சியின்போது இயற்கை எரிவாயுக்குழாய் மீது வெடிகுண்டு விழுந்ததால் இந்த வெடி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளை, இந்த வெடி விபத்து குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
இலங்கையிலே அரசாங்கம் பௌத்த பேரினவாதத்தை அனுசரித்து செல்ல வேண்டியவர்களாகத்தான் எப்போதும் இருக்கின்றார்கள் என்பதற்கான உண்மைகள் அண்மைய நாட்களிலே வெளிவரத் தொடங்கி இருப்பதாக வலி கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்துள்ளார்.
பௌத்த துறவிகளுடைய போராட்டத்திலே அரசாங்கம் எடுக்கப் போகின்ற முடிவு பௌத்த பேரினவாதத்திற்குள் கட்டுண்டுதான் இந்த நாட்டிலே அரசாங்கம் பயணிக்க முடியும் என்ற ஒரு விடயம் துலாம்பரமாக வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக அமைந்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தையிட்டியில்
நான், வேலன் சுவாமிகள் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டோம்.
சமயம் சார்ந்த ஒருவரான வேலன் சுவாமி அவர்கள் கைது செய்யப்படும்போது அவர் மீது குற்றச்சாட்டை முன்வைத்துதான் கைது செய்கின்றார்கள்.
நீதிமன்ற தீர்ப்புகள் எதுவும் அளிக்கப்பட்டு கைது செய்யப்படவில்லை. குற்றச்சாட்டை முன்வைத்து அதன் பின்னர்தான் நீதிமன்றத்திலே காவல்துறையினர் முன்னிலைப்படுத்துகின்றார்கள்.
அவ்வாறான சந்தர்ப்பத்திலே வேலன் சுவாமி அவர்கள் கைது செய்யப்பட்டபோது அவருடைய ஆடை இழுக்கப்பட்டது, நான் கண்களால் கண்ட சாட்சியாக இருக்கின்றேன்.
எங்களை கைது செய்து அதாவது காவல்துறையினர் தாங்கள் ஒரு தடுப்பு போட்டு வைத்திருந்த வலயத்துக்குள் கொண்டு சென்ற பிறகு அவருடைய கழுத்திலே செப்பு கம்பியிலே மாட்டப்பட்டிருந்த உருத்திராட்ச மாலை இழுத்து அறுக்கப்பட்டது.
அதிலே கழுத்திலே காயம் ஏற்பட்டது. அவர் வைத்தியசாலையிலே அது தொடர்பாக சிகிச்சை பெற்றிருக்கின்ற ஆதாரங்களும் இருக்கின்றது.
அதன் பின்னர் அவர் அந்த உருத்திராட்ச மாலை கொட்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து எண்ணிக் கொண்டிருந்தார். நிலத்திலே விழுந்தவற்றை காவல்துறையினரின் சப்பாத்து கால்களுக்கு இடையிலே சிந்தி கிடந்தவற்றை எண்ணிக் கொண்டிருந்தார்.
அதிலே பலது சிதறிவிட்டது. கிடைத்தவற்றை தன்னுடைய காவி உடையினுடைய பொக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டு, அங்கே காவல்துறையினருடைய வாகனத்தில் ஏற்றப்பட்டு அங்கே கொண்டு வந்து இறக்கப்பட்டார்.
அப்போது எங்களிடம் இருந்த உடைமைகள் பறிக்கப்பட்டன. அவரும் தொலைபேசி எல்லாவற்றையும் வழங்கிவிட்டு, இந்த உருத்திராட்ச மாலை என்பது ஒரு புலால் உண்கின்ற ஒருவரால் தொடப்பட முடியாதது. இதனை தயவு செய்து என்னிடத்திலே இருப்பிலே விட்டுவிடுங்கள் என்று காவல்துறையினரிடம் கெஞ்சி மன்றாடினார் .
ஆனால் அவர்கள் அதை அனுமதிக்கவில்லை.
ஆகவே அந்த உருத்திராட்ச மாலை என்பது ஒரு அவர் தீட்சை பெற்றதன் பின்பதாக குருத்துவ நிலையை அடைந்த நிலைமையிலே இடப்படுகின்ற ஒரு அடையாளம்.
ஆனால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அது தொடர்பிலே நாங்கள் எவ்வளவு தூரம் பேசினோம், எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டோம், சில சமய அமைப்புகள் கண்டித்தன.
ஆனால் ஜனாதிபதி வாய் திறக்கவில்லை இன்று பௌத்த நிலைமைகள் என்று வரும்போது ஜனாதிபதியினுடைய பிரதானி அங்கே செல்கின்றார், அதுபோன்று பிரதமர் கருத்து தெரிவிக்கின்றார், அரசாங்கம் ஆடிப்போயிருக்கின்றது, பௌத்த துறவிகளில் அரசாங்கம் கை வைக்க கூடாது என்று எதிர்க்கட்சிதலைவரும் சொல்லுகின்றார்.
ஆகவே இவை அனைத்துமே ஒன்றை வெளிப்படுத்துகின்றன.அதாவது இந்த நாட்டிலே பௌத்த பேரினவாதத்துக்கு அப்பால் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் அதற்கு சற்றேனும் ஒரு பாதிப்பை ஏற்படுத்துகின்றவாறு தமிழ் மக்களுடைய உரிமைகள் ஒருபோதும் நிலைநாட்டப்படாது.” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான வாய்ப்பை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க முற்றாக நிராகரித்துள்ளார். தனது அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மதிக்கும் என்றும், நீதித்துறை நடவடிக்கைகளில் தலையிடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை ( 18) பதுளையில் நடைபெற்ற 'தேசிய மக்கள் சக்தி' (NPP) மகளிர் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி, நீதித்துறையின் இறுதித் தீர்ப்புகளை அரசாங்கம் ஏற்கும் என்றும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட தரப்பிலிருந்து அந்தத் தீர்ப்புகளை மாற்றியமைக்க யாரும் எதிர்பார்க்க வேண்டாம் என்றும் எச்சரித்தார்.
ஜனாதிபதி தனது உரையில் ஞானசார தேரரின் பெயரையோ அல்லது அவரது சிறைவாசத்தையோ நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், இந்த கருத்துக்கள், குறித்த பிக்குவின் சிறைவாசம் மற்றும் அவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளைச் சுற்றியுள்ள சர்ச்சையை நோக்கியே முன்வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயர்
நீதிமன்றத்திடமே இறுதி அதிகாரம்
சட்டங்களை இயற்றும் பொறுப்பு நாடாளுமன்றத்திற்கு உரியது என்றும், காவல்துறை, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு போன்ற நிறுவனங்கள் விசாரணைகளையும் சட்ட அமலாக்கத்தையும் மேற்கொள்கின்றன என்றும் ஜனாதிபதி விளக்கினார்.
இருப்பினும், சட்டத்தை விளக்குவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்குமான இறுதி அதிகாரம் நீதித்துறையிடமே, குறிப்பாக உயர்
நீதிமன்றத்திடமே உள்ளது என்பதை அவர் வலியுறுத்தினார்.
"உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கும்போது, ​​சிலர் அதை நீக்கக் கோரி கூச்சலிடுகிறார்கள். இத்தகைய சூழலில் ஒரு நாடு எவ்வாறு இயங்க முடியும்?" என்று ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.
எங்களிடமிருந்து  எந்த முடிவுகளையும் யாரும் எதிர்பார்க்க வேண்டாம்
நீதிமன்றத் தீர்ப்புகளே சட்டத்தின் அதிகாரபூர்வமான தீர்மானங்கள் என்று கருதும் தனது அரசாங்கம், அந்தத் தீர்ப்புகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் என்று அவர் கூறினார்.
"நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகளுக்கு நாங்கள் கட்டுப்பட்டு நடப்போம். அதைத் தாண்டி, எங்களிடமிருந்து வேறு எந்த முடிவுகளையும் யாரும் எதிர்பார்க்க வேண்டாம்," என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
மேலும், சட்டக் கட்டமைப்பைக் குலைக்கும் முயற்சிகளுக்கு எதிராக எச்சரித்த ஜனாதிபதி, நாட்டின் எதிர்கால சந்ததியினருக்குப் பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்த, அனைவருக்கும் சமமான சட்ட நடைமுறை கொண்ட நாடொன்று அவசியமெனக் குறிப்பிட்டார்.
ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு சில பௌத்த பிக்குகளும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் கோரிக்கைகளை விடுத்து வரும் சூழலிலேயே இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச கொழும்பு நவலோக தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வைத்தியர்களின் ஆலோசனைக்கமைய அவரது உடல்நிலையை கவனத்தில்கொண்டு இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கைது செய்யப்பட்ட ஷிரந்தி ராஜபக்ச, நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தற்காலிக சிகிச்சை
இந்நிலையில் அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தேசிய வைத்தியசாலையில் தற்காலிகமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேலதிக மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காகவே அவர் இவ்வாறு தனியார் வைத்தியசாலையான நவலோக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதமளவில் ஒட்டுமொத்தக் கல்வி கட்டமைப்புக்கும் புதிதாக சுமார் 30,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன் 17,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் நவம்பர் 20ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர் மேலும் சுட்டிக்காட்டினார்.
தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட மகளிர் மாநாட்டில் இன்று (18) கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.
புதிய பாடத்திட்டம் அறிமுகம்
அவர் மேலும் தெரிவிக்கையில், நடப்பு ஆண்டில் தரம் 1க்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் 2 மற்றும் 6 ஆம் தரங்களுக்கான புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
அனைத்துப் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் தற்போதைய அரசாங்கத்தினால் புதிய கல்வி முறைமையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைக்கு மாத்திரம் முகங்கொடுக்கும் பிள்ளைக்குப் பதிலாக, எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்புகளுடன் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளக்கூடிய ஒரு தலைமுறையை உருவாக்குவதே அரசாங்கத்தின் பிரதான எதிர்பார்ப்பு.
விரிவுரையாளர்களை ஆட்சேர்ப்பு செய்தல்
அத்துடன் பல்கலைக்கழக அமைப்புக்கு 2,000 விரிவுரையாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதற்கு மேலதிகமாகப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும்” என்று பிரதமர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
இலங்கை ராமஞ்ஞ பீடத்தின் அனுநாயக்க தேரரும், கெடம்பே ராஜோபவனாராம விகாரையின் விகாராதிபதியுமான கெப்பெட்டியாகொட சிறிவிமல தேரர் காலமானார்.
அவரது 95ஆவது வயதில் அவர் காலமாகியுள்ளார்.
சிரிவிமல தேரர், இலங்கையின் பௌத்த மதகுருமார்களில் ஒரு முக்கிய நபராகத் திகழ்ந்தார்.
நாற்பது வருட பணி
மேலும், அவர் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக கெதம்பே ரஜோபவனராமயவின் தலைமைப் பீடத் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் காலஞ்சென்ற கெப்பெட்டியகொட சிறிவிமல நாயக்க தேரரின் இறுதிச் சடங்கு, இம்மாதம் 21ஆம் திகதி மாலை 4:00 மணிக்கு கண்டி, கடம்பே மாநகர மைதானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
நாடு முழுவதும் நேற்று (17) பதிவான திடீர் மின் தடை தொடர்பில் முறையான விசாரணை ஒன்று நடத்தப்படும் என்று தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் தனியார் நிறுவனம் (NSO) தெரிவித்துள்ளது.
குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அது தொடர்பான அறிக்கை ஒரு மாதத்திற்குள் பொதுப் பயன்பாடுகள் ஆணையக்குழுவுக்கும் (PUCSL) அமைச்சுக்கும் சமர்ப்பிக்கப்படும் என அந்த நிறுவனத்தின் தலைவர் பிரதீப் பிரியதர்சன தெரிவித்தார்.
அத்துடன், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதைத் தவிர்ப்பதற்கான அவசியமான நடவடிக்கைகளை குறித்த அறிக்கையின் ஊடாகப் பரிந்துரைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மின் விநியோகம்
இதேவேளை மின்சாரப் பரிமாற்ற அமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மை காரணமாக நேற்று (17) காலை 11.45 அளவில் நாடளாவிய ரீதியில் திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டது.
எனினும், பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பின்னர் நேற்றிரவு 09.56 அளவில் மின் விநியோகம் முழுமையாக வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக தேசிய கட்டமைப்புச் செயற்பாட்டாளர் நிறுவனம் அறிவித்துள்ளது.
மின்தடைக்கான காரணம் குறித்து ஆரம்பத்தில் மேல் கொத்மலை மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறே காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்ட போதிலும், மின்சார விநியோகத் தடைக்கான உண்மையான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
இந்தத் திடீர் மின்சாரத் தடையினால் பொதுமக்கள், வர்த்தகர்கள் மற்றும் கைத்தொழில் துறையினர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
(கனகராஜா சரவணன்)
மட்டக்களப்பு நகரில் பூட்டியிருந்த வீடு ஒன்றை உடைத்து அங்கிருந்து சுமார் 30
இலட்சம் ரூபா பெறுமதியான 8 பவுண் தங்க நகைகளை திருடிய ஊறணி பகுதியைச்
சோந்த 56 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அவரிடமிருந்து தங்க நகைகளையும் மீட்டுள்ளதாக மட்டு தலைமையக காவல் பொறுப்பதிகாரி
பண்டார தெரிவித்தார்.
மட்டக்களப்பு செபஸ்தியார் வீதியில் உள்ள வீடு ஒன்றின் உரிமையாளர்கள் கடந்த 14ஆம் திகதி வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளனர்.
சிசிரிவி கமராவில் கண்டுபிடிப்பு
இந்த நிலையில் பூட்டியிருந்த
வீட்டின் மதில் மீது ஏறி குதித்த சந்தேகநபர் வீட்டின் கதவை உடைத்து
அங்கிருந்த மோதிரம், காப்பு, தோடு சங்கிலி உள்ளிட்ட 8 பவுன் தங்கம் மற்றும் கவரிங் நகைகளை திருடிச் சென்றுள்ளார்.
இதையடுத்து காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து மட்டு தலைமையக காவல் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி காவல் பரிசோதகர்
வை.விஜயராஜா தலைமையிலான காவல் குழுவினர்
வீட்டில் பொருத்தியிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகிய காணொளி காட்சியை கொண்டு
விசாரணையினை மேற்கொண்டனர்.
இதன்போது ஊறணி பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபரை கைது செய்ததுடன்  நகைகள் விற்பனை நிலையத்தில் விற்பனை செய்திருந்த நகைகள் மற்றும் மறைத்து
வைக்கப்பட்டிருந்த தங்க ஆபரணங்களையு மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
இலங்கையில் காணப்படும் சட்டத்திட்டங்களுக்கமைய, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வாய்ப்பில்லை என நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எம்பிலிப்பிட்டிய பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் என்ற வகையில் சட்டத்திற்கு உட்பட்டே செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
சாதாரண உடையில் அழைத்து வரப்பட்டமை
சிறைச்சாலைகளுக்கு தேரர்கள் உள்ளிட்ட கைதிகளை அழைத்து வரும் போது ஒரே விதமான சீருடையே அணிவிக்கப்படுகிறது.
அந்த காலத்தில் குறித்த சிறைச்சாலை சட்டத்தை தயாரித்தவர்கள், தேரர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி அதனை தயாரிக்கவில்லை.
ஞானசார தேரர் சாதாரண உடையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டமை பௌத்த மக்களுக்கு மாத்திரமின்றி சகலரையும் வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
தற்போது அவரை ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்குமாறு கோரி தேரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போதைய சட்டத்திட்டங்களுக்கு அமைய, ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வாய்ப்பில்லை“ என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
வெல்லம்பிட்டி, மீதொட்டமுல்ல பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த பியுமி என அழைக்கப்படும் பெண் ஒருவர் ரூ.28 இலட்சம் பெறுமதியான போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுகேகொடை கோட்டை நச்சுப் போதைப்பொருள் பிரிவின் உத்தியோகத்தர்கள் குழுவினால் கடந்த 16ஆம் திகதி வெல்லம்பிட்டி காவல் பிரிவில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து 274 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
பிரதான உறுப்பினர்
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், இவர் நாட்டின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான 'தெமட்டகொடை சமிந்தவின்' பிரதான கூட்டாளியான 'தெமட்டகொட இசுரு' என்பவரின் போதைப்பொருள் விநியோக வலையமைப்பை வெல்லம்பிட்டிப் பகுதியில் முன்னெடுத்துச் சென்ற பிரதான உறுப்பினர் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வெல்லம்பிட்டி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், நேற்று புதுக்கடை இலக்கம் 2 நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் பெறப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில், வெல்லம்பிட்டிப் காவல்துறையினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள்
திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 2 இலட்சம் ஏக்கர் காணிகளை
விடுவிப்பதற்கான பரிந்துரைகள் விரைவில் அமைச்சரவைக்குச்
சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக்க
பட்டபெந்தி தெரிவித்தார்.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (16) நடைபெற்ற காணிகளை
விடுவிப்பது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், 2012ஆம்
ஆண்டு புவியிடங்காட்டித் தொழில்நுட்பத்தைப் (ஜி.பி.எஸ்.) பயன்படுத்தி வடக்கு
மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெருமளவிலான காணிகள் வனவளத் திணைக்களம் மற்றும்
வனஉயிரிகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
அமைச்சரவையின் அனுமதி
அவற்றில் மருத்துவமனைகள், அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான
காணிகள் மற்றும் தனியார் காணிகளும் உள்ளடங்கியுள்ளன.
இக்காணிகளை அடையாளம் கண்டு விடுவிப்பதற்காக 2025ஆம் ஆண்டு அமைச்சரவையின்
அனுமதியுடன் குழுவொன்று நியமிக்கப்பட்டது, அந்தக் குழுவுக்கு ஆறு
மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டபோதும், ஓராண்டு கடந்தும் இறுதி அறிக்கை
அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்படவில்லை.
சில
அதிகாரிகளிடமிருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்காததால் செயன்முறையை
முழுமைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும், ஆய்வுகள் நிறைவடைந்து விடுவிப்பதற்குப் பரிந்துரைக்கப்பட்ட
காணிகளைக்கூட இதுவரை விடுவிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
மேய்ச்சல் நிலங்களை விடுவித்தல்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து சுமார் 2 இலட்சம்
ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான பரிந்துரைகளை விரைவில் அமைச்சரவைக்குச்
சமர்ப்பித்து, அதன் ஒப்புதலுடன் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்படும்.
வடக்கு மாகாணத்தில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களையும் விடுவிக்கப்பட
வேண்டிய காணிகளை அடையாளம் காண வேண்டும்.
மக்களின் வாழ்விடங்கள், வாழ்வாதாரங்கள் மற்றும் அபிவிருத்தித் தேவைகள்
தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், திணைக்களங்களுக்கு இடையிலான
ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
இக்கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், மாகாணப் பணிப்பாளர்கள், வனவளத்
திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களங்களின் உதவிப் பணிப்பாளர்கள், மாவட்ட
அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
போஸ்வெல் பகுதிக்கு அருகிலுள்ள வெள்ளவத்தை கடற்கரைப் பகுதியில் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தெஹிவளைப் பகுதியில் உயிர்மாய்ப்பு செய்துகொள்ளும் நோக்கில் கடலில் குதித்ததாகக் கூறப்படும் மூன்று பிள்ளைகளின் தந்தையான 70 வயதான நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வெள்ளவத்தை கடற்கரையில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிள்ளைகளுடன் நேரம் செலவழிப்பு
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த நபரின் உறவினர்கள் உடலை அடையாளம் கண்டுள்ளனர்.
விசாரணையில் குறித்த நபர் உயிரிழப்பதற்கு முதல் நாள் தனது பிள்ளைகளுடன் சாப்பிட்டு மகிழ்ந்திருந்தது தெரிய வந்தது.
அவர் வெளியே சென்றபோது தனது கைக்கடிகாரத்தையும் ஒரு ஜோடி காலணிகளையும் வீட்டில் விட்டுச் சென்றதாக நெருங்கிய உறவினர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து வெள்ளவத்தை காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
நாட்டுக்குள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 2 கோடி ரூபாய் பெறுமதியான 7
வாகனங்கள் யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவல்களுக்கு
அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
குறித்த
வாகனங்களில் 4 வாகனங்கள் அதிநவீன மோட்டார் சைக்கிள்கள் என்றும் அவை எவற்றுக்கும்
பதிவுப் புத்தகங்கள் இல்லை என்று கூறப்படுகின்றது.
மேலதிக விசாரணைகள்
ஏனைய மூன்று வாகனங்களில்
ஒரு வாகனம் போலிப் பதிவு காரணமாகவும், இரண்டு வாகனங்கள் இலங்கையில்
தடைசெய்யப்பட்ட வாகனங்கள் என்பதாலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,
அவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
இந்தியாவின் - கொல்கத்தாவில் துர்கா பூஜை பந்தல் ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் உயிரிழந்ததுடன் 25 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொல்கத்தாவின் சாரா பார்க் துர்கா பூ​ஜை பந்தலின் வெளியேறும் வாயிலில் நேற்று (17) மாலை இடம்பெற்ற இத்துயரச் சம்பவத்தில் 13 பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் உட்பட 19 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
துர்கா பூஜையின் சப்தமி தினத்தன்று பெய்த பலத்த மழையின் காரணமாக, பந்தலைப் பார்வையிட வந்த பெருமளவான மக்கள் ஒரே நேரத்தில் வெளியேற முற்பட்டபோதே இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலமைச்சரின் அறிவிப்பு
சம்பவத்தையடுத்து காவல்துறையினர், தீயணைப்புப் படையினர் மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் விரைந்து செயற்பட்டு காயமடைந்தவர்களை மீட்டு கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், குறித்த பூஜை ஏற்பாட்டுக் குழுவின் அமைப்பாளர்கள் மற்றும் தனியார் பாதுகாப்பு ஊழியர்கள் உட்பட 12 பேர் விசாரணைகளுக்காக காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாநில அரசு நிவாரணங்களை அறிவித்துள்ளது.அதன்படி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 இலட்சம் ரூபாய் நிதியுதவியும், Group D அரசு வேலைவாய்ப்பும் வழங்கப்படும் என மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
அத்துடன், காயமடைந்தவர்களின் முழு மருத்துவச் செலவையும் அரசே ஏற்பதுடன், அவர்களுக்குத் தலா 5 இலட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!