முள்ளிவாய்காலில் இருந்து தப்பி வந்தவர்களிடம் காசு பறிக்கும் புலம்பெயர் நிறுவனம்

252shares

2009 வரை ஈழத்தமிழ் விடுதலைக்காக கடும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து சொத்தை, சுகத்தை, உறவை ஏன் கை, கால்களை இழந்து, முகாம்களில் சித்திரவதைகளை அனுபவித்து நாடோடிகளாய் உயிரை பணயம் வைத்து ஒரு இனிமையாய் இல்லாவிடடாலும் மீதி காலத்தை வாழவென புலம்பெயர் தேசத்திற்கு வந்த உறவுகளை மேலும் நோகடித்து காசு கறப்பதிலேயே நாட்டைக் கடந்த நிறுவனம் குறியாய் உள்ளது.

இது சமீபத்தில புலம்பெயர்ந்த ஒரு முன்நாள் போராளியின் ஆதங்கம்.

யாருமே எதிர்பார்க்காத வகையில் அதிகாரம் குறைவாக இருப்பினும் வடக்கு மாகாணத்திற்கு தேர்தல் வைத்து சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தியதால், இந்த நாட்டைக் கடந்த அமைப்பின் தேவை எதுவரைக்கும் என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்கு.

அதையும் கடந்து, இலங்கை அரசாங்கத்தால் இதுவரை தடை எடுக்காத காரணத்தால், இவர்களுடன் இணைந்து செயற்படுவதால் அசைலம் கோரி விண்ணப்பிக்கும் இளைஞர்களுக்கு ஒரு வலுவான சாட்சியாக இந்த அமைப்பு இருப்பதனால்இ தஞ்ச கோரிக்கையாளருக்கு பெரும் தேவையான இடமாக இந்த நாட்டைக் கடந்த நிறுவனம் இருக்கின்றது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முள்ளிவாய்காலில இருந்து தப்பி வந்த தம்பிமாரிடம் பணம் பறிக்கும் செயற்பாட்டில் அந்த அமைப்பு ஈடுபட்டுள்ளமை வேதனையானது.

அசைலம் கேட்டு இருப்போர் தமக்கான ஒரு ஆவணமாக ஒரு கடிதம் வேண்டுவதற்கு போனால் கடிதம் வழங்கஇ உறுப்புரிமைக்கு, அடையாள அட்டைக்கு என்று பலதரப்பட;ட விதங்களில் ஏற்கனவே நொந்துள்ளவர்களிடம் பணம் பெறப்படுகின்றது.

ஆனால் அவைக்கு பற்று சீட்டு கொடுப்பதில்லை.

தற்போது நடக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு சைக்கிளோட்டம் ஒன்றை நடாத்த திடடமிட்டுள்ள இந்த நிறுவனம் , அதில் பங்குபற்றுவோர் விசா இல்லாமல் வேலை இல்லாத சந்தர்ப்பத்திலும் கூட, தலைக்கு 35 பவுன்கள் செலுத்தி பங்குபற்றுமாறு வற்புறுத்தி வருகின்றார்கள்.

அதற்கும் பற்றுசீட்டு இல்லை.

காசை மட்டும் பற்றுசீட்டு இல்லாமல் இன்னும் எத்தனை காலத்திற்குதான் கோலோச்ச முடியும் ''நீதி'' மான்களே என்று கேட்கிறார் அண்மையில் புலம்பெயர்ந்து பிரித்தானியா வந்துள்ள ஒரு முன்நாள் போராளி தம்பி.

இதையும் தவறாமல் படிங்க
சிங்கள மக்கள் மனங்களில் இடம்பிடித்த தமிழ் இளைஞர்கள்!

சிங்கள மக்கள் மனங்களில் இடம்பிடித்த தமிழ் இளைஞர்கள்!

மதுபோதையில் நடந்த கொடுரம்! 2 மகன், மனைவி துடிதுடித்துப் பலி..

மதுபோதையில் நடந்த கொடுரம்! 2 மகன், மனைவி துடிதுடித்துப் பலி..

இயற்கையாக மரணிக்கவில்லையா ஜெயலலிதா ; வெளியாகும் பகீர் உண்மைகள்.!

இயற்கையாக மரணிக்கவில்லையா ஜெயலலிதா ; வெளியாகும் பகீர் உண்மைகள்.!