Aries
விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
Aries
நினைப்பது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருந்து மன வருத்தம் உண்டாகும். எதிலும் அவசரப்படாமல் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வரவிற்குக் குறைவிருக்காது. குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் விரயம் தரும். உடன்பிறந்தோரால் சிரமங்களுக்கு ஆளாக நேரிடும். தேவையற்ற பிரயாணத்தைத் தவிர்ப்பது நல்லது. வாகனங்களால் எதிர்பாராத செலவுகள் வரும். பிள்ளைகளின் செயல்கள் எதிர்பார்ப்பிற்கு எதிராக அமையும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு கொள்வீர்கள். மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியது அவசியம். முன்னோர் வழி சொத்துகளில் பிரச்னைகள் தோன்றும். கலைத்துறையினருக்கு செலவுகள் கூடும். தொழில் முறையில் அதிக பட்ச உழைப்பினை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். சுமாரான பலன்களை அடையும் வாரம் இது. வழிபாடு: விநாயகர் வழிபாடு நன்மை தரும்.
Aries
அதிக வரவும் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் முடிவுக்கு வரும். அமைதியும், தெளிவும் கிடைக்கப் பெற்று நினைத்ததை முடிப்பீர். மணவயது வந்தும் வரன் அமையாதவர்களுக்கு உயர்ந்த இடத்திலிருந்து வரன் தேடி வரும். கைவிட்டுப் போன வசதிகள், சொத்துக்கள் திரும்பக் கிடைக்கும். சுயதொழில் தொடங்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்படும். ஏற்கனவே தொடங்கி நடத்திக் கொண்டிருப்பவர் கூடுதல் மூலதனம் செய்து விரிவாக்கப் பணிகளை மேற்கொள்வீர். ஆடம்பர பொருள், வாகனம் வாங்கும் ஆசை பூர்த்தியாகும். பிள்ளைகள் சம்பந்தமான விடயங்களில் குழப்பம் தீர்ந்து தெளிவு பிறக்கும். தீயபழக்கங்களுக்கு ஆட்பட்டு விடும் அபாயமுண்டு. கவனம் தேவை. ஆராயாமல் காரியமாற்றுவது அல்லலுக்கு வழிவகுக்கும். அனுபவமும் ஒழுக்கமும் அத்தியாவசியம். வழிபட வேண்டிய தெய்வம்: சிவபெருமான் பிடிக்கவேண்டிய விரதம்: மாசிமகம்
Aries
ராசிக்கு நான்கில் ராகு பத்தில் கேது ஒன்பதில் சனி மற்றும் ஏழில் குருபகவான் இவற்றில் முழுமையான சுபகிரகமும் உங்கள் ராசிக்கு பாக்கியாதிபதியுமான குருவின் நிலை சாதகமாக உள்ளது. ஏழில் நிற்கும் குரு ஐந்தாம் பார்வையாக பதினொறாமிடத்தை பார்ப்பதால் நல்ல திருப்பங்கள் யாவும் பூர்த்தியாகும் மூத்த சகோதரர் நண்பர் வழியில் உதவி கிடைக்கும் ஏழாம் பார்வையாக ராசியை பார்ப்பதால் ஆயுள் விருத்தி ஆரோக்கியம் கௌரவ பதவி கிடைக்கப்பெறுவீர். ஒன்பதாம் பார்வையாக மூன்றாமிடத்தை பார்ப்பதால் காரியம ஜெயம் சகோதர ஒற்றுடை தன்நம்பிக்கை உண்டாகும். ஒன்பதாமிடத்தில் சனி நிற்பதால் தந்தை மீது அக்கரை எடுத்துக்கொள்வது அவர் சொல்படி நடப்பது. கிடைப்பதை நடப்பதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவை அவசியமாகிறது. நான்கில் ராகு நிற்பதால் எளிமை நன்னடத்தை தேவை தீயவர் தீயபழக்கங்களிலிருந்து விலகியிருக்க வேண்டியது அவசியம் வெளிநாடு முயற்சி கைகொடுக்கும். பத்தாமிடத்தில் கேது நிற்பதால் கடமையில் முழு கவனம் தேவை. பொறுப்புக்களிலிருந்து விலகக் கூடாது. சூதாட்டம் தீய வழி செல்வம் தவிர்க்கவும். குண்ணியஸ்தலங்கள் செல்வீர். கல்வி பயில்வோர் முதலிடம் பிடிக்க வேண்டும். முன்னேற வேண்டுமென்ற எண்ணமிருக்கும். தடை இடையூறுகள் அதிகம் இருந்தாலும் உயர்கல்வி சம்பந்தமாக ஏற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர் - கூடுதல் பொறுப்புக்கள் கொடுக்கப்படும். வேலைப்பளு அதிகமாகும் எனினும் சிறப்பாக செயல்படுவீர் சாமர்த்தியம் புதிய வழிகளை கடைபிடிப்பது சிறந்த யுத்தியால் உயர்வீர். சுயதொழில் வியாபாரம் செய்வோர் - நல்ல கூட்டாளி தேவையான உதவிகள் கிடைக்கப்பெறுவீர். கிடைக்கும் லாபத்தில் அறக்கட்டளை தான தர்மம் செய்வீர். பணியாளர்களுக்கு கூடுதல் சலுகை தருமளவு வளர்வீர். பரிகாரம் - பிரதி மாதம் கிருத்திகை விரதம்.

இன்றைய பலனை அறிந்துகொள்ள, உங்கள் ராசியை தேர்வு செய்யுங்கள்

இன்றைய ஜோதிடம்

ஐபிசி ஜோதிடத்திலிருந்து

மேலும்

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யுங்கள்!

தினசரி ராசி பலனை மின்னஞ்சல் மூலம் நேரடியாக பெறுங்கள்


Loading, Please Wait for a while...