தேர்வுசெய்யுங்கள்

உங்கள் விருப்பமான ராசியை

கும்பம்

நேற்றைய ராசி கணிப்புகள் (23 November,2017)

Aquarius

குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். புது வேலை கிடைக்கும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். சகோதரங்கள் மதிப்பார்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். இனிமையான நாள்.

கும்பம்

உங்களின் இன்றைய ராசி கணிப்புகள் (24 November,2017)

Aquarius

கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரக்கூடும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாக பேசுங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். போராடி வெல்லும் நாள்.

கும்பம்

இந்த வாரத்திற்கான உங்கள் ராசி கணிப்புகள்

Aquarius

இந்த வாரத்திலே உங்களுக்கு கடமையுணர்வு அதிகமாகும். பெறுப்பு அதிகமாகும். நல்ல பழக்கவழக்கங்கள் உங்களுக்கு உண்டாகும். உங்கள் மீது இருந்து வந்த கட்டுப்பாடுகள் விலகும்.

சுயமாக முடிவெடுக்கும் பக்குவம் பெறுவீர். தந்தைக்கும் உங்களுக்குமிருந்த கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். தகுதி திறமையை வளர்த்துக் கொள்வீர்.

பிறருக்கு வழிகாட்டியாக நடந்து கொள்வீர். கீழ் இருப்பவர்கள் கட்டுப்பட்டு நடப்பார்கள். உயரதிகாரிகள் சலுகை தந்து உயர்த்துவார்கள். தொழில் தொடங்க தேவையான கடன் கிடைக்கப்பெறுவீர்.

வேகத்தை குறைத்து விவேகம் கொள்வீர் கடமையுணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் குழப்பம் சந்தேகம் கைவிட்டு தியானம் யோகம் மேற்கொள்வீர்.

கல்வி பயிலக்கூடியவர்கள் இந்த வாரத்திலே உங்களுடைய முழுமையான திறமையை வெளிப்படுத்த வேண்டும். உத்தியோகம் செய்பவர்கள் உங்களுடைய பணியினை ஈடுபாட்டுடன் செய்யவேண்டும்.

சுயதொழில் வியாபாரம் செய்பவர்கள் உங்களுடைய பணியிலே நம்பகமானவர்களை வைத்துக்கொள்ள வேண்டும்.

அதிஸ்டமான எண்கள் 5 மற்றும் 8 உங்களுக்கு அதிஸ்டமான நிறங்கள் கருநீலம் மற்றும் பச்சை.

கும்பம்

இந்த மாதத்திற்கான உங்கள் ராசி கணிப்புகள் (November 2017)

Aquarius

உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். மறைமுக எதிரிகளை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள்.

பழைய வீட்டை சிலர் இடித்துக் கட்டுவீர்கள். வழக்கு சாதகமாகும். ஆரோக்கியம், அழகு, இளமை கூடும். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்குவீர்கள்.

அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படுவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும்.

பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள். பழுதாகி கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வெளிநாட்டிலிருப்பவர்கள், வேற்றுமொழி பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். வீடு கட்டுவதற்கு அரச அனுமதி கிடைக்கும்.

இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். மாறுபட்ட அணுகுமுறையால் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். முன்கோபம், வீண் டென்ஷன், காரியத் தடைகளெல்லாம் வரக்கூடும்.

இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறையக்கூடும். இரத்த அழுத்தமும் அதிகமாகும். உடன்பிறந்தவர்களால் அலைச்சல் இருக்கும். யாரை நம்புவது, நம்பாமல் இருப்பது போன்ற குழப்பங்கள் வரும். எனவே கொஞ்சம் சுற்று வட்டாரத்தைப் புரிந்து கொண்டு இடம், பொருள் ஏவல் அறிந்து பேசுவது, பழகுவது நல்லது.

தூக்கமில்லாமல் போகும். பழைய பிரச்னைகள் இப்போது விஸ்வரூபம் எடுத்துவிடுமோ என்ற அச்சம் இருக்கும். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து போகும்.

கன்னிப் பெண்களே! காதல் கனியும். பெற்றோரின் ஆலோசனைக்கு செவி சாயுங்கள். போலியாக பழகியவர்களிடமிருந்து ஒதுங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகளால் இலாபமடைவீர்கள். கடையை மாற்றுவது குறித்து ஆலோசனை செய்வீர்கள்.

உத்யோகத்தில் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். கலைத்துறையினரே! திரையிடாமல் தடைப்பட்டிருந்த உங்களுடைய படைப்பு இப்போது வெளி வரும்.

கும்பம்

இந்த வருடத்திற்கான உங்கள் ராசி கணிப்புகள் (2017)

Aquarius

கும்பம் ராசிக்காரர்களின் கவனத்திற்கு

அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3

குழந்தை உள்ளம் கொண்ட கும்பராசி அன்பர்களே!

குரு பார்வை வந்தாச்சு! குறையெல்லாம் தீர்ந்தாச்சு!

ஆண்டின் தொடக்கத்தில் ராசிக்கு 8-ல் இருக்கும் குரு, செப்.1ல் 9ம் இடமான துலாம் ராசிக்கு செல்கிறார். அங்கிருந்து 2018 பிப்.13ல் 10ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறுகிறார்.

ராசிக்கு 7-ம் இடமான சிம்மத்தில் இருக்கும் ராகு ஜீலை 26-ல் 6-ம் இடமான கடகத்திற்கு மாறுகிறார். ராசிக்கு 1-ல் இருக்கும் கேது, ஜீலை 26-ல் 12ம் இடமான மகரத்திற்கு செல்கிறார்.

ராசிக்கு 10ம் இடமான விருச்சிகத்தில் இருக்கும் சனி டிச.18ல் தனுசு ராசிக்கு மாறுகிறார். இந்த கிரகநிலையின் அடிப்படையில் பலனைக் காணலாம்.

 

ஏப்ரல் 14- ஜீலை 31

குரு சாதகமற்று இருந்தாலும் அவரது 5,7,9 பார்வையால் குறையனைத்தும் விலகி நன்மை உண்டாகும். குடும்பத்தேவை நிறைவேறும். பணியாளர்களுக்கு சலுகை கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.

பணிச்சுமை கூடும். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும்.

போட்டியாளரால் பிரச்சனை தலைதூக்கலாம். புதிய வியாபாரத்தை தவிர்ப்பது நல்லது.

கலைஞர்களுக்கு விருது, பாராட்டு போன்றவை கைநழுவி போகலாம். அரசியல்வாதிகள் பிரதிபலன் எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும். மாணவர்கள் அக்கறை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும்.

குருவின் பார்வையால் சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். விவசாயிகள் மானாவாரி பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும். பெண்கள் ஆடம்பர செலவை தவிர்க்கவும். சகோதரிகள் ஆதரவுடன் இருப்பர்.

 

ஆகஸ்ட் 1-2018 ஜனவரி 31

குடும்ப மகிழ்ச்சி அதிகரிக்கும். தேவைகள் அனைத்தும் நிறைவேறும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும்.

உறவினர் உதவிகரமாக செயல்படுவர். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, வாகன யோகம் கிடைக்கும். பணியாளர்கள் எதிர்பார்த்த சலுகை கிடைக்கப் பெறுவர்.

தொழில், வியாபாரத்தில் சேமிக்கும் விதத்தில் ஆதாயம் கிடைக்கும். ஆனால், கேதுவால் அவ்வப்போது பணவிரயம் ஏற்படலாம். கலைஞர்கள் எளிதில் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர்.

அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்க சற்று தாமதமாகும். மாணவர்கள் கல்வியில் சிறப்படைவர். போட்டியில் பங்கேற்று வெற்றி காண்பர். விவசாயிகள் வளர்ச்சி பாதையில் செல்வர்.

வழக்கு விவகார முடிவு திருப்தியளிக்கும். பெண்கள் குடும்பத்தாரின் அன்பை பெறுவர். வுருந்து, விழா என சென்று மகிழ்வர். சுய தொழில் புரியும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.

 

2018 பிப்ரவரி 1- ஏப்ரல் 13

குடும்பத்தினர் ஆதரவுடன் இருப்பர். ஆடம்பர செலவைத் தவிர்ப்பது நல்லது. சுபநிகழ்ச்சிகள் தடைபடலாம். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு வரலாம்.

பணியாளார்களுக்கு பணிச்சுமை ஏற்பட வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் குருவின் பார்வை பலத்தால் வருமானம் உயரும்.

புதிய தொழில் முயற்சி ஓரளவு வெற்றி பெறும். கலைஞர்கள் விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தம் கிடைக்கப்பெறுவர்.

அரசியல்வாதிகள் சுமாரான வளர்ச்சி காண்பர். பதவி கிடைப்பது அரிது. மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை.

விவசாயிகள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கப் பெறுவர். சொத்து வாங்கும் எண்ணம் தள்ளி போகும். பெண்கள் குடும்ப நலனுக்காக விட்டுக் கொடுத்துப் போகவும். பயணத்தின் போது கவனம் தேவை.

 

பரிகாரங்கள்

ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு. வியாழன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செல்ல வேண்டிய கோவில் சமயபுரம் மாரியம்மன்.

மேலும்

ஐபிசி செய்திகளிலிருந்து

மேலும் விளையாட்டுச்செய்திகள்


Loading, Please Wait for a while...