தேர்வுசெய்யுங்கள்

உங்கள் விருப்பமான ராசியை

கடகம்

நேற்றைய ராசி கணிப்புகள் (17 March,2018)

Cancer

திட்டமிடாத செலவுகளையும், பயணங்களையும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.

கடகம்

உங்களின் இன்றைய ராசி கணிப்புகள் (18 March,2018)

Cancer

கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். விருந்தினர் வருகை உண்டு. வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.  

கடகம்

இந்த வாரத்திற்கான உங்கள் ராசி கணிப்புகள்

Cancer

தர்மஇ ஆன்மிகஇ தத்துவ சிந்தனைகள் மனதை அதிகம் ஆக்கிரமிக்கும். குடும்பத்தில் சலசலப்புகள் இருந்தாலும் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. உடன்பிறந்தோர் நலனில் அதிக அக்கறையுடன் செயல்படுவீர்கள்.

தகவல்தொடர்பு சாதனங்கள் மிகுந்த பயன் தரும். பிரயாணங்களின்போது கூடுதல் கவனம் தேவை. மேலும் வாகனங்களை இயக்கும்போது அதிக எச்சரிக்கை அவசியம்.

பிள்ளைகளால் கூடுதல் செலவுகளை சந்திக்க நேரிடும். மாணவர்கள் அடிக்கடி மாதிரித் தேர்வுகள் எழுதிப் பார்ப்பது நல்லது. வாழ்க்கைத்துணையுடன் லேசான கருத்து வேறுபாடு கொள்வீர்கள்.

கலைத்துறையினரின் வெளியூர் பிரயாணம் ஆதாயம் தரும். செலவுகளைக் கட்டுப்படுத்த இயலாது தடுமாறுவீர்கள். தான தர்மங்களுக்காக அதிகம் செலவழிப்பீர்கள்.

தொலைதூர ஆன்மிகப் பிரயாண வாய்ப்புகள் தேடி வரும். தொழில்ரீதியாக சிறப்பான முன்னேற்றம் காண்பீர்கள். நற்பலன்களைக் காணும் வாரம் இது.

வழிபாடு:

அண்ணாமலையாரை வழிபடவும்.

கடகம்

இந்த மாதத்திற்கான உங்கள் ராசி கணிப்புகள் (March 2018)

Cancer

தடைகள் யாவும் விலக்கப்பெற்று முயற்சிக்கு பலன் கிடைக்கும். மனக்குறைகள் அகன்று எதிர்பார்ப்பவை நடந்தேறும். விடமுடியாத பழக்கங்கள் நீங்கி ஆதவையான ஒழுக்கம் நன்னடத்தை சாத்தியமாகும்.

பிறர் திருத்துமளவு நடந்து கொண்டவரும் கூட வழிகாட்டுமளவு நடந்து கொள்வீர்.குழந்தைகள் சம்மந்தமான கவலைகள் அகலும் கடன் பிரச்சனையில் இருப்பவர் அதிலிருந்து விடுபடத் தேவையான உதவி கிடைக்கும்.

இடமாற்றம் செய்து புதிய இடம் எதிர்பார்த்தவாறு அமையப்பெறாதவர் சொந்த இடத்திற்கு ஊருக்கு திரும்புவீர். எந்த துறையை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் தீரும். வேலைக்கு போகலாமா மேற்கொண்டு படிக்கலாமா என்ற கேள்விக்கும் சரியான பதில் கிடைக்கும்.

குடும்பத்திலே விட்டுக் கொடுத்து போக தவறாதீர். எதிர்மறை எண்ணம் போட்டி இவற்றறை தவிர்ப்பீர் நிதானமான பேச்சு திட்டமிட்ட செயல் இசையே பலன் தரும்.

வழிபட வேண்டிய தெய்வம் - முருகர்.

பிடிக்க வேண்டிய விரதம் - ஷஷ்டி விரதம்.

கடகம்

இந்த வருடத்திற்கான உங்கள் ராசி கணிப்புகள் (2018)

Cancer

ராசியிலே ராகு ஏழில் கேது நான்கில் குரு மற்றும் ஆறில் சனிபகவான் இவற்றில் ஈறில் இருக்கும் சனி சாதகமாக இருக்கிறார். இது நாள் வரை ஏற்பட்ட தடை இடையூறுகள் விலகி முக்கிய காரியங்கள் நடந்தேறும்.

எதிரிகள் மூலம் பட்ட கஷ்டங்களில் இருந்து விடுபடுவீர். தேக ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைகள் எல்லாம் நிவர்த்தியாகும். வீடு கட்டுதல் திருமணம் போன்ற பெரிய காரியங்களை தொடங்கி சிறப்பாக நடத்திக் காட்டுவீர் செல்வாக்கு அந்தஸ்து கூடும்.

ராசியில் ராகு நிற்பதால் எளிதில் ஜீவரணமாகும். உடலுக்கு சக்தி தரும் உணவுகளை மட்டுமே உட்கொள்வீர். வீட்டு வைத்தியம் இயற்கை வைத்தியம் இவற்றை மறவாதீர்.

கடல் கடந்து செல்லும்.முயற்ச்சி பலன் தரும். ஏழில் கேது நிற்பதால் வாழ்க்கைத்துணை மீது அக்கறை எடுத்துக்கொள்வீர். தினமும் ஆலய வழிபாடு சுறுசுறுப்பு ஊக்கம் தரும் எதிர்மறை எண்ணங்களை தவிப்பீர்.

திருமண விசயத்தில் பெற்றோரிடம் முடிவை விடுவீர். நான்கில் குரு நிற்பதால் பங்கு சந்தை முதலீடுகளில் மிகுந்த எச்சரிக்கை தேவை ஆடம்பர செலவு வசதிகளை குறைத்துக்கொள்வீர்கள்.

பெற்றோர் குறிப்பாக தாயார் மகிழும்படி நடந்து கொள்வீர். முன்னேற்றத்திற்கு பாடுபடுவீர்.

கல்விபயில்வோர் - நல்ல சூழ்நிலை இருக்க வேண்டியது அவசியம் படிப்பை விடவோ ஈடுபாடு குறையவோ மனதில் இடம் கொடாதீர். பெரிய இலக்கை நிர்ணயித்து அதற்கான உழைப்பை முயற்சி முழுமனதுடன் செய்வீர்.

உத்தியோகஸ்தர் - பிறர் கைவிட்ட பொறுப்புக்களை ஏற்று நடத்திக் காட்டுவீர். அதிகாரம். அங்கிகாரம் கிடைக்கப்பெறுவீர். தவறு குறைகளை சரி செய்து கொள்வீர்கள்.குறுக்கு வழி பரிந்துரை தவிர்த்து நேர்வழி நடப்பீர்.

சுயதொழில் வியாபாரம் செய்வோர் - போட்டியாளரை சுலபமாக கடந்து முன்னேறுவீர் குறுக்கு வழி கலப்படம் இவற்றிலிருந்து விலகி இருப்பீர். தீய கூட்டாளியை விட தனித்து செயல்படுவது. மேல் என்பதை நினைவில் கொள்வீர்.

பரிகாரம் - முருக பொருமான் வழிபாடு.

மேலும்

ஐபிசி செய்திகளிலிருந்து

மேலும் விளையாட்டுச்செய்திகள்


Loading, Please Wait for a while...