தேர்வுசெய்யுங்கள்

உங்கள் விருப்பமான ராசியை

மகரம்

நேற்றைய ராசி கணிப்புகள் (17 March,2018)

Capricorn

உற்சாகமாக இருப்பீர்கள். சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்பட தொடங்குவீர்கள். நேர்மறை எண்ணம் பிறக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும்- புதிய பாதை தெரியும் நாள்.

மகரம்

உங்களின் இன்றைய ராசி கணிப்புகள் (18 March,2018)

Capricorn

தன்னிச்சையாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் நினைப்பதை முடித்துக் காட்டுவீர்கள். தைரியம் கூடும் நாள்.

மகரம்

இந்த வாரத்திற்கான உங்கள் ராசி கணிப்புகள்

Capricorn

அதிக அலைச்சல் இருக்கும். ஆதாயம் எதிர்பாராது உழைக்க நேரும். மனதில் இனம் புரியாத கலக்கம் குடிகொள்ளும். பல்வேறு வழிகளிலும் பொருள் வரவு காண்பீர்கள். வரவிற்கேற்ற செலவு காத்திருக்கும்.

குடும்பத்தில் சலசலப்புக்கு மத்தியில் மகிழ்ச்சி நிலவும். உங்கள் பேச்சு மற்றவர்கள் மனதைப் புண்படுத்தக் கூடும். தகவல் தொடர்பு சாதனங்கள் ஆதாயம் தரும்.

புது வாகனங்கள் சேரும். மாணவர்களின் கல்வி நிலை எழுச்சி பெறும். உறவினர்களின் வருகை குடும்பத்தில் கலகலப்பைக் கூட்டும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் சந்தேகம் தோன்றும்.

வாழ்க்கைத்துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். பூர்வீக சொத்துகளால் லாபம் கிடைக்கும். தொழில் சிறக்கும். உத்யோகஸ்தர்கள் நற்பெயரும்இ பதவி உயர்வும் பெறுவர்.

கலைத்துறையினர் தங்கள் முயற்சி மூலம் குறிப்பிடத்தகுந்த தனலாபத்தினைக் காண்பார்கள். நற்பலன்களைக் காணும் வாரம் இது.

வழிபாடு:

மாரியம்மனை வழிபடவும்.

 

மகரம்

இந்த மாதத்திற்கான உங்கள் ராசி கணிப்புகள் (March 2018)

Capricorn

நல்ல வருமானம் கிடைக்கப்பெறுவீர். உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். துணிந்து செயல்பட்டு ஆதாயம் உயர்வு பெறுவீர். சொத்துக்கள் வாற்குவது பற்றி சிந்தித்து நல்ல முடிவு எடுப்பீர்.

வெளியூர் வெளிநாடு செல்ல வேண்டும்மென்று முயற்சிப்பவர் வாய்ப்பு கிடைக்கப்பெறுவது இருந்து வந்த தடைகள் அகலப்பெறுவது இவற்றால் பயனடைவீர். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும்
சரியான நேரத்துக்கு செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்வதால் வேண்டியதை பெறலாம்.

நேரத்துக்கும் கடமைக்கும் முக்கியத்துவம் அளிப்பீர். சிறு சிறு பிரணங்கள் அவ்வப்போது இருந்துகொண்டு இருக்கும். தேவையில்லாமல் பேசுவதை தவிப்பீர் தெரியாத தொழில்
தொடங்குவது அனுபவமில்லா பொறுப்புக்களை ஒப்புக்கொள்வது இவற்றை தவிர்க்க வேண்டும்.

வழிபட வேண்டிய தெய்வம் - லஷ்மி நராயணர்

பிடிக்க வேண்டிய விரதம் - மாசி மகம்.

மகரம்

இந்த வருடத்திற்கான உங்கள் ராசி கணிப்புகள் (2018)

Capricorn
ராசியில் கேது, ஏழில் ராகு, பத்தில்  குரு பன்னிரெண்டில் சனிபகவான். ஆண்டு கோள்கள் எதுவும் சாதகமான நிலையில் இல்லை.எனினும் குரு பெயா்ச்சிக்கு பிறகு சாதகமான பலன் கிடைக்கும்.
 
எனினும் குருபெயா்ச்சிக்கு பிறகு சாதக பலன் கிடைக்கும்.மேலும் ஏழரை சனி விரய சனி தொடங்கினாலும் சனி இராசிநாதன் என்ற வகையில் கெடுபலன் பெரிதாக இருக்காது.
 
இராசியில் கேது நிற்பதால் நோய்க்கு இடம் கொடேல் என்பதை நினைவில் கொள்வீா்.எந்த செயலில் ஈடுபட்டாலும் பாதுகாப்பு எச்சரிக்கை உணா்வுடன் இருக்க வேண்டியது அவசியம்.ஆன்மீக ஈடுபாடு மனக்கட்டுப்பாடு அனைத்திலும் காக்கும்.
 
ஏழில் ராகு நிற்பதால் எவரையும்  பகைத்து கொள்ள வேண்டாம். வாழ்க்கைத்துணை மீது கூடுதல்  அக்கறை  கொள்வீா்.பிரிவு பகைக்கு இடம்கொடுக்காதீா்.எனினும் போதுமென்ற மனம் எளிமையான வாழ்க்கை முறை நிம்மதி நிறைவு தரும்.
 
பத்தில் குரு நிற்பதால் கூட்டுப்பணிகள் பலன் தரும்.பிடித்ததை தேடாமல் கிடைத்ததை ஏற்பீா்.கடமை தவறாதீா் பிறா் குறைகானும் வண்ணம் செயல்பட கூடாது.
 
எனினும் தகுதியை திறமையை பாடுபட்டு வளா்த்துக்கொண்டால் உயா்வு வரும்.பன்னிரண்டில் சனி நிற்பதால் திட்டமிட்டு பயணம் பணி செய்ய வேண்டியது அவசியம்.
 
சஞ்சலம் கவலைக்கு மனதில் இடம்தரக்கூடாது.அவசர முடிவு மாற்றம் தவிா்ப்பீா் நல்லோா் பெரியோா் ஆலோசனை அறிவுரை பலனளிக்கும்.
 
கல்வி பயில்வோா் - படிப்பை தவிர வேறு சிந்தனையே இருக்க கூடாது.கேளிக்கை விளையாட்டை குறைத்துக்கொள்வீா்.பொறுப்புணா்வுடன் ஆராய்ந்து படிப்பவா் மேன்மை அடைவீா்.
 
உத்தியோகத்தா் - துறை மாற்றம் இடமாற்றம் தரப்பட்டால் ஏற்பீா்.நேர மேலாண்மை கடைப்பிடிப்பீா்.பணியைக் காட்டிலும் ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டியது அவசியம்.சமயோசிதமாக நடந்துகொள்ள எதையும் சமாளிப்பீா்.
 
சுயதொழில் வியாபாரம் செய்வோா் - நிா்வாகத்திறைமையை வளா்த்துக்கொள்ளவேண்டியது அவசியம்.பணியாளா்களையும் போட்டியாளா்களையும் கையாள தெரிந்து கொண்டு விட்டால் வெற்றி உங்களுக்கே.
 
பரிகாரம் - பிரதி மாதம் பெளா்ணமி விரதம் அம்பிகை வழிபாடு.

மேலும்

ஐபிசி செய்திகளிலிருந்து

மேலும் விளையாட்டுச்செய்திகள்


Loading, Please Wait for a while...