தேர்வுசெய்யுங்கள்

உங்கள் விருப்பமான ராசியை

மிதுனம்

நேற்றைய ராசி கணிப்புகள் (19 January,2018)

Gemini

சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். சொந்த-பந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். சிக்கனம் தேவைப்படும் நாள்

மிதுனம்

உங்களின் இன்றைய ராசி கணிப்புகள் (20 January,2018)

Gemini

குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

மிதுனம்

இந்த வாரத்திற்கான உங்கள் ராசி கணிப்புகள்

Gemini

எதிலும் சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். உங்கள் பணிகள் மேலும் மெருகேறும். எடுத்த காரியங்களில் நினைத்தபடியே வெற்றி கிட்டும். தனாதிபதியின் சாதகமான நிலையால் வரவு கூடும்.

சேமிப்பு உயர்வடையும். நண்பர்கள் வழியில் நினைவில் நிற்கத் தகுந்த பரிசுப் பொருள் ஒன்று வந்து சேரும். பேச்சில் நகைச்சுவை வெளிப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

முன்பின் அறிந்திராத புதிய செயல் ஒன்றினை கற்றுக்கொள்ள முயற்சிப்பீர்கள். உறவினர்களோடு மனஸ்தாபம் தோன்றலாம். பிள்ளைகளின் செயல்கள் உங்கள் கவுரவத்தை காக்கும்.

வாழ்க்கைத்துணை உங்கள் வேகத்தோடு ஈடுகொடுப்பார். குடும்பப் பெரியோரின் ஆலோசனைகள் பயன் தரும். வேலைக்குச் செல்வோர் தங்கள் அறிவாற்றலின் மூலம் அலுவலகத்தில் முக்கியத்துவம் பெறுவர்.

மாணவர்கள் பொழுதுபோக்கும் மனநிலையைத் தவிர்த்து கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கலைத்துறையினர் அனுபவஸ்தர்களின் ஆலோசனை பெறுவது நல்லது. நற்பலன்களை அனுபவிக்கும் வாரம் இது.

உங்களுக்கு அதிஸ்டமான எண்கள் 5,3 அதிஸ்டமான நிறங்கள் பச்சை, மஞ்சள்.

மிதுனம்

இந்த மாதத்திற்கான உங்கள் ராசி கணிப்புகள் (January 2018)

Gemini

வாதம், விவாதம் என வந்து விட்டால் வளைத்து கட்டிப் பேசும் நீங்கள் பொதுவாக மௌனத்தை விரும்புவீர்கள். இந்த மாத தொடக்கமே கொஞ்சம் சவாலாக இருக்கும். ஓரளவு நிம்மதி உண்டாகும்.

பிரபலங்களால் உதவிகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக போக நினைத்த வெளிமாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மனைவிவழியில் ஆதரவு பெருகும். சுக்ரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் மனத்தெளிவு உண்டாகும்.

குடும்பத்தில் அமைதி நிலவும். விபத்துகளிலிருந்து மீள்வீர்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். கணவன்-மனைவிக்குள் ஈகோப் பிரச்னை வரும். மனைவியின் ஆரோக்யத்திலும் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள்.

கல்யாண முயற்சிகள் சற்று தாமதமாகி முடியும். நண்பர்கள், உறவினர்களுடன் இருந்து வந்த பிணக்குகள் நீங்கி சுமூகமாக சூழ்நிலை உருவாகும். படிப்படியாக அலைச்சல் குறையும். புது வேலை கிடைக்கும்.

வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். கர்ப்பிணிப் பெண்கள் அதிக எடையுள்ள சுமைகளை தூக்க வேண்டாம். பூர்வீக சொத்துப் பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

உடன்பிறந்தவர்களை நினைத்து கவலைப்படுவீர்கள். எதிர்ப்புகள் குறையும். ஆரோக்கியம் சீராகும். வீடு, மனை வாங்குவது, விற்பது சுலபமாக முடியும். அடிக்கடி கோபப்படுவீர்கள், டென்ஷனாவீர்கள், உணர்ச்சிவசப்படுவீர்கள். வீண் விவாதங்களும் வரக்கூடும்.

கன்னிப் பெண்களே! உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். தொழில் சம்பந்தப்பட்ட ரகசியங்களை பாதுகாப்பது நல்லது. வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள்.

உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள்.

கலைத்துறையினரே! விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். சிக்கனமும், நாவடக்கமும் தேவைப்படும் மாதமிது.

மிதுனம்

இந்த வருடத்திற்கான உங்கள் ராசி கணிப்புகள் (2018)

Gemini

ராசியில் இரண்டில் ராகு எட்டில கேது ஐந்தில் குரு சாதகமாக இரு்பார். அறிவும் தெளிவும் கொண்டு சிறப்பாக செயல்படுவீர். புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு திருப்தி அடைவீர்.

அரசாங்க சலுகை பெறம் வாய்ப்பு உண்டு. கௌரவ பதவி மரியாதை அந்தஸ்து. கிடைக்கும் யோகம் உண்டு. புத்திர பாக்கியம் ஏற்படும் குடும்பத்தில் அமைதி மகிழ்ச்சி இருக்கும்.

சுபகாரியங்கள் தொடங்கி சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். செல்வாக்குள்ள நபர்களின் அறிமுகம் நட்பு கிடைக்கும். திருமண தடை விலகும்.

இரண்டில் ராகு நிற்பதால் தியானம் செய்பவர்கள் தெளிவாக இருப்பீர். வீண்பயம் சஞ்சலம் தவிர்க்க அறை வழிபாடு செய்வீர்கள். வாழ்க்கைத்துணை மூலம் சமயத்திற்கு உதவி ஆறுதல் கிடைக்கப் பெறுவீர்கள்.

ஏழில் சனி நிற்பதால் எதிர்பாராத பயணம் இட மாற்றம் ஏற்படும். பணியாட்கள் கிடைப்பது கட்டுப்பட்டு நடப்பது சிரமம். நன்னடத்தை நல்லவர் துணை அவசியம் அனுபவம் பக்குவம் கை கொடுக்கும்.

கல்வி பயில்வோர். - பெரிய விரும்பிய துறைகளை படிக்க வாய்ப்பு வரும். முடும்பத்தை விட்டு பிரிந்து சென்று படிக்க நேரிடலாம். ஆராய்ச்சி மருத்துவ துறைபளில் பயில்வோர் சிறப்பாக செயல்படுவீர்கள்.

உத்தியோகஸ்தர்- கிடைத்த வேலையை ஏற்றுக்கொள்வீர். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வீர். கடமையே கண்ணாக இருப்பீர். தாமதம் விடுப்பு தவிர்த்து நேர்மை உழைப்பை கைக்கொள்வோர். ஏற்றம் பெறுவீர்கள்.

சுயதொழில் வியாபாரம் செய்வோர் - கூடுதல் கடன்களை தவிர்ப்பீர். வேலையாட்கள் மீது அன்பு அக்கறை கொள்வீர். தேவையற்ற செலவுகளை குறைப்பீர். தொர்ந்து உங்கள் தொழிலை பிள்ளைகள் செய்யும் வண்ணம் நிரந்தரத்தன்மை அடைவீர்.

பரிகாரம் - லஷ்மி நரசிம்மர் யோக நரசிம்மர் வழிபாடு.

மேலும்

ஐபிசி செய்திகளிலிருந்து

மேலும் விளையாட்டுச்செய்திகள்


Loading, Please Wait for a while...