தேர்வுசெய்யுங்கள்

உங்கள் விருப்பமான ராசியை

சிம்மம்

நேற்றைய ராசி கணிப்புகள் (23 November,2017)

Leo

குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

சிம்மம்

உங்களின் இன்றைய ராசி கணிப்புகள் (24 November,2017)

Leo

எதிர்பாராத பண வரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்களால் பயனடைவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

சிம்மம்

இந்த வாரத்திற்கான உங்கள் ராசி கணிப்புகள்

Leo

இந்த வாரத்திலே உங்களுக்கு உங்களுடைய உழைப்பு கடமையுணர்வு நீங்கள் நடந்துகொள்ளக்கூடிய நேர்மையான நடவடிக்கை இதுவே உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கும். ஊக்கத்தோடு இருக்க வேண்டியது அவசியம்.

மனக் கட்டுப்பாட்டை கைக்கொள்ள வேண்டியது அவசியம். ஒவ்வொரு நாளையும் திட்டமிட்டு தொடங்க வேண்டும். பெரியவர்களுடைய ஆலோசளையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

எங்கு சென்றாலும் அந்த இடத்திலே நல்ல அனுகு முறையைக் கைக்கொள்ள வேண்டும். அவசரம் கோபம் பதட்டம் உணர்ச்சிவசப்படுதல் இவை எல்லாம் அறவே கூடாது. இப்படியாக நீங்கள் கட்டுப்பாட்டுடன் இருக்கும் போது கடுமையாக உழைக்கும் போது அதற்கு உண்டான பலன்களை அடைவீர்கள்.

நாவடக்கம் தேவை. மனதிலே விரக்தி வெறுப்பு இதற்கு இடம் தரக்கூடாது. தீயவர்களிடத்திலிருந்து விலகி இருக்க வேண்டியது அவசியம்.

கல்வி பயிலக்கூடியவர்கள் இந்த வாரத்திலே கல்வியிலே கண்ணாக இருக்க வேண்டும். உத்தியோகம் செய்பவர்கள் கொடுக்கப்பட்ட பெறுப்புக்களை சரியாக செய்ய வேண்டும்.


சுய தொழில் வியாபாரம் செய்பவர்கள் வாடிக்கையாளர்களிடத்திலே நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். புது ஒப்பந்தங்கள் செய்வது பற்றி சிந்திப்பீர்கள்.

இந்த வாரத்தில் உங்களுக்கு அதிஸ்டமான எண்கள் 2 மற்றும் 7 உங்களுக்கு அதிஸ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் வெளிர்சிவப்பு.

சிம்மம்

இந்த மாதத்திற்கான உங்கள் ராசி கணிப்புகள் (November 2017)

Leo

மனோபலம் அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிட்டும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும்.

எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். வேற்றுமதம், மொழி, இனத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

பால்ய நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். உறவினர்களின் அன்புத் தொல்லைகள் குறையும். தவணை முறையில் பணம் செலுத்தி சிலர் புதிதாக வாகனம் வாங்குவீர்கள். தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது.

வழக்கில் அலட்சியம் வேண்டாம். தாயார் கோபத்தில் ஏதேனும் பேசினாலும் அவரிடம் எதிர்விவாதம் செய்து கொண்டிருக்க வேண்டாம். யதார்த்தமாகப் பேசுவதைக் கூட சிலர் வேறு அர்த்தத்தில் புரிந்துக் கொள்வார்கள்.

உடன்பிறந்தவர்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். பல் வலி, பார்வைக் கோளாறு வரக்கூடும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம்.

கன்னிப் பெண்களே! பெற்றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் அறிவித்து இலாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். வாடிக்கையாளர்களின் கருத்தைக் கேட்டு கடையை இடமாற்றம் செய்வீர்கள்.

உத்யோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டி வரும். அதிகாரிகள் உங்களை நம்பி புது பொறுப்பை ஒப்படைப்பார்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள். அனுபவ அறிவாலும், ஆன்மிக பலத்தாலும் முன்னேறும் மாதமிது.

சிம்மம்

இந்த வருடத்திற்கான உங்கள் ராசி கணிப்புகள் (2017)

Leo

சிம்மம் ராசிக்காரர்களின் கவனத்திற்கு

மகம், பூரம், உத்திரம் 1

வெற்றி சிகரத்தை குறிக்கோளாக கொண்ட சிம்மராசி அன்பர்களே!

வளர்ச்சி வந்தாச்சு! வசந்தம் பிறந்தாச்சு!

ஆண்டின் தொடக்கத்தில் ராசிக்கு 2-ம் இடமான கன்னியில் உள்ள குரு, செப்.1ல் 3ம் இடமான துலாம் ராசிக்கு செல்கிறார். இங்கிருந்து அவர் 2018 பிப்.13ல் 4ம் இடமான விருச்சிக ராசிக்கு செல்கிறார்.

ராசியில் உள்ள ராகு, ஜீலை 26-ல் இடம் மாறி 12ம் இடமான கடகத்திற்கு செல்கிறார். 7-ம் இடமான கும்பத்தில் உள்ள கேது, ஜீலை 26-ல் 6ம் இடமான மகரத்திற்கு மாறுகிறார்.

தற்போது 4-ம் இடத்தில் இருக்கும் சனி, டிச.18ல் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார்.

 

ஏப்ரல் 14-ஜீலை 31

குருவால் பொருளாதாரம் சிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். கணவன் – மனைவி இடையே அன்பு நிலைக்கும்.

வாழ்வில் வசந்தம் வீசும் வளர்ச்சியான காலகட்டமாக அமையும். பிள்ளைகளின் செயல்பாடு பெருமையளிக்கும். வீட்டுக்கு தேவையான ஆடம்பர வசதிகள் கிடைக்கும். திருமணம் சுப நிகழ்ச்சிகள் விரைவில் கைகூடும். பணியாளர்களுக்கு பணிச்சுமை குறையும்.

விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ஆனால் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறுவர். மாணவர்கள் சிறப்பான பலனை காணலாம். கல்வியில் சிறப்பு கிடைக்கும். மேற்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். விவசாயிகள் முன்னேற்றம் காண்பர்.

சிலர் முயற்சி எடுத்து புதிய சொத்து வாங்குவீர்கள். வழக்கு, விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும். பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். பிறந்த வீட்டில் இருந்து உதவி கிடைக்கும்.

 

ஆகஸ்ட் 1-2018 ஜனவரி 31

பொன், பொருள் சேரும். கணவன், மனைவி இடையே அன்பு நீடிக்கும். பணியாளார்களுக்கு பணிச்சுமை ஏற்பட வாய்ப்புண்டு.

அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். தொழில். வியாபாரத்தில் வளர்ச்சி சீராக இருக்கும். அரசு வகையில் சலுகை எதிர்பார்க்க முடியாது. பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் அதிக வளர்ச்சி பெறும்.

கலைஞர்கள் எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகள் கவுரவத்திற்காக பணம் செலவழிப்பர்.

மாணவர்களுக்கு விடாமுயற்சி தேவைப்படும். விவசாயிகள் நிலக்கடலை, கிழங்கு வகைகளில் நல்ல மகசூல் காண்பர்.

கைவிட்டு போன சொத்து மீண்டும் கிடைக்கும். பெண்கள் குடும்ப முன்னேற்றத்திற்கு பாடுபடுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.

 

2018 பிப்ரவரி1 – ஏப்ரல் 13

குடும்பத்திற்கு தேவையான வசதி கிடைக்கும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும்.

உறவினர் வகையில் பிரச்சனை உருவாகலாம். சுபவிஷயத்தில் தாமதம் உண்டாகும். பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர்.

தொழில், வியாபாரத்தில் மந்தநிலை உண்டாகும். புதிய வியாபாரம் தற்போது தொடங்க வேண்டாம். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்காது. அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி தாமதமாக கிடைக்கும். மாணவர்களுக்கு ஆசிரியர் அறிவுரை பயன் உள்ளதாக அமையும். விவசாயிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் காண்பர். பெண்கள் கணவரிடம் விட்டு கொடுத்து போகவும்.

 

பரிகாரங்கள் 

பிரதோஷத்தன்று நந்தீஸ்வரர் வழிபாடு. பவுர்ணமியன்று கிரிவலம். செல்ல வேண்டிய கோவில் திருக்கடையூர் அபிராமி அம்மன்

மேலும்

ஐபிசி செய்திகளிலிருந்து

மேலும் விளையாட்டுச்செய்திகள்


Loading, Please Wait for a while...