தேர்வுசெய்யுங்கள்

உங்கள் விருப்பமான ராசியை

துலாம்

நேற்றைய ராசி கணிப்புகள் (17 March,2018)

Libra

மற்றவர்களை நம்பி எந்த வேலைகளையும் ஒப்படைக்க கூடாது என்ற முடிவுக்குவருவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.

துலாம்

உங்களின் இன்றைய ராசி கணிப்புகள் (18 March,2018)

Libra

வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் இதமாகப் பேசி வேலை வாங்குவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

துலாம்

இந்த வாரத்திற்கான உங்கள் ராசி கணிப்புகள்

Libra

விருப்பங்கள் நிறைவேறும். சிரமமான சூழலை சந்திக்க நேரிடும். அநாவசிய பிரச்னைகள் வரும். மனதில் தோன்றும் ஆசைகள் பேச்சில் வெளிப்படும். எங்கே யாரிடம் எப்படிப் பேசவேண்டும் என்பதை உணர்ந்து செயல்படுவது நல்லது.

குடும்பத்தில் சலசலப்புகள் தோன்றும். உடன்பிறந்தவர்களால் சிரமத்தை சந்திக்க நேரிடும். முக்கியமான நேரத்தில் தகவல் தொடர்பு சாதனங்களில் கோளாறுகள் தோன்றி இழப்புகள் ஏற்படும்.

வாகனங்கள் பிரயாணங்களால் செலவுகள் கூடும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண கடும் உழைப்பை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். உடல்நிலையில் தீவிர கவனம் செலுத்துவது நல்லது. சம்பந்தமில்லாத விஷயங்களில் முன்நிற்பதைத் தவிர்க்கவும்.

கலைத்துறையினர் கடுமையான போட்டியினை சந்திப்பர். தொழில் முறையில் எதிர்பார்க்கும் தனலாபம் அடைய சிறிது காலம் காத்திருக்க வேண்டியது அவசியம். சரிசமபலனைத் தரும் வாரம் இது.

வழிபாடு:

பிரத்யங்கிரா தேவியை வழிபட்டு வாருங்கள்.

துலாம்

இந்த மாதத்திற்கான உங்கள் ராசி கணிப்புகள் (March 2018)

Libra

பணவரவு நன்றாக இருக்கும். கொடுக்கல் வாங்களில் இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும். பேச்சாற்றலில் சிறந்து விளங்குவீர். எடுத்துக்கொண்ட பணிகள் சிறப்பாகவும் விரைவாகவும் செய்து முடிப்பீர். அனைவரையும் அவைனைத்து செல்வீர்.

சிந்தித்து செயல்பட்டு சிக்கலை தீர்ப்பீர். சொத்துக்கள் வழியில் இருந்த வில்லங்கம் தீரும். நோய்நொடியில் இருந்துமீண்டு நல்ல ஆரோக்கியம் பெறுவீர்.

சோம்பல் கவனமின்மை இவற்றில் பின்னடைவு ஏற்பட்டிருந்தால் அவை விலகி உற்ஷாகம் உறுதி உங்கள் தகுதி திறமையை எதற்கு பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து செயல்படும் பக்குவம் பெற்று உயர்வீர்.

அடங்கிப் போவது அடக்க நினைப்பது இரண்டுமே பலன் தராது. சூழ்நிலைக்கு தக்கவாறு செயல்பட வளர்வீர்.

வழிபட வேண்டிய தெய்வம் - முருகபெருமான்

பிடிக்க வேண்டிய விரதம் - விஷாக நட்ஷத்திரம்.

துலாம்

இந்த வருடத்திற்கான உங்கள் ராசி கணிப்புகள் (2018)

Libra

இராசியில் குரு, மூன்றில் சனிஇ, நான்கில் கேது, பத்தில் ராகு, இவற்றில் மூன்றாம் இடத்தில் இருக்கும் சனி பகவான் யோக பலன் தரப்போகிறாா்.

மூன்றில் சனி நிற்பதால் முயற்சி கைகொடுக்கும்.எடுத்த பணிகள் யாவும் இனிதே நிறைவேறி நற்பலன் கிடைக்கும். சகோதர ஒற்றுமை உண்டாகும்.

துணிவும் உறுதியும் கிடைக்கப்பெற்று வெற்றி, முன்னேற்றம் காண்பீா்.தகவல் தொடா்பு சம்பந்த காரியங்கள் இலாபம் தரும். கடமைகளை செவ்வனே நிறைவேற்றுவீா்.

வாகன யோகம் உண்டு.அனுபவ ரீதியான முடிவுகள் எடுத்து பெரிய விஷயங்களை சாதிப்பீா்கள்.

இராசியில் குரு நிற்பதால் அதிக பயணங்கள், அலைச்சல் ஏற்படும்.செலவுகள் அதிகரிக்கும்.நன்னடத்தை உள்ளவா் பெயரை காப்பாற்றி கொள்வீா்.விரோதம் இவற்றை வளா்க்க கூடாது.

எனினும் பெரியோா், பெற்றோா், ஆசி அனைத்தையும் சமாளிக்கம் வல்லமை தரும்.நான்கில் கேது நிற்பதால் சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும்.சுகம், ஓய்வு, குறையும்.

சொத்துக்கள் வாங்குவது விற்பதில் அவசரம் கூடாது.நல்ல புத்தகங்கள் வாசிப்பது சித்தா் வழிபாடு தெளிவு தரும்.

பத்தில் ராகு நிற்பதால் அரசு காரியங்களில் மிகுந்த கவனம் எச்சரிக்கை இருந்தால் பிரச்சனை ஏற்படாது.கொடுக்கப்படும் பொறுப்பு வேலைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஸ்தல யாத்திரை நோ்த்திக்கடன் நிறைவேற்றுதல் சாத்தியமாகும்.

கல்வி பயில்வோா் - சோம்பல் தவிா்த்து உற்சாகம் கொள்ளவும்.நல்லவா் படிப்பாளியுடன் சேர நன்மை அடைவீா்.எதிா்கால பணி, தொழிலை முடிவு செய்து படிக்க கூடுதல் பலன் கிடைக்கும்.போட்டிகளில் பங்குபெற வாய்ப்பு வரும்.

உத்தியோகஸ்தா் - இலக்கை அடைய உற்சாகத்துடன் பணியாற்றுவீா்.உங்கள் பணிகளை பிறரிடம் விடாதீா். பயபக்தியுடன் பணியாற்றுவீா்.கிடைக்க வேண்டிய சலுகைகளை கேட்டு பெறுவீா்.தகுதி திறமையை வளா்த்துகொள்வீா்.

சுயதொழில் வியாபாரம் செய்வோ் - முக்கிய பொறுப்பை பிறரிடம் விடாதீா்.தேவையற்ற கூடுதல் செலவை தவிா்ப்பீா். இயன்றவரை நோ்வழியில் செல்ல முடிவு கொள்வீா்.இலாபத்தில் தா்மம் செய்வீா்.

பரிகாரம் - பிரதோஷ விரத வழிபாடு

மேலும்

ஐபிசி செய்திகளிலிருந்து

மேலும் விளையாட்டுச்செய்திகள்


Loading, Please Wait for a while...