தேர்வுசெய்யுங்கள்

உங்கள் விருப்பமான ராசியை

மீனம்

நேற்றைய ராசி கணிப்புகள் (17 March,2018)

Pisces

குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் வேலைசுமை அதிகரிக்கும். எச்சரிக்கை தேவைப்படும் நாள்.

மீனம்

உங்களின் இன்றைய ராசி கணிப்புகள் (18 March,2018)

Pisces

உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும். மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் சக ஊழியர்களால் டென்ஷன் ஏற்படும். சிக்கனம் தேவைப்படும் நாள்.

மீனம்

இந்த வாரத்திற்கான உங்கள் ராசி கணிப்புகள்

Pisces

தன்னம்பிக்கை கூடும். திறமை வெளிப்படும். உத்வேகம் அதிகரிக்கும். எடுத்த செயல்களில் வெற்றி காண்பீர்கள். செலவுகள் கூடும். தன லாபம் இருக்கும். குடும்பத்தில் சலசலப்புகள் தோன்றி மறையும்.

வாகனங்கள் பிரயாணங்களால் ஆதாயம் காண்பீர்கள். மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். பிள்ளைகளின் செயல்கள் பெருமை கொள்ளத்தக்க வகையில் அமையும்.

வாழ்க்கைத்துணை உங்களுக்கு மிகுந்த பக்கபலமாக இருந்து செயல்படுவார். கலைத்துறையினர் தங்கள் முயற்சியில் வெற்றி காண்பார்கள்.

சுயதொழில் செய்பவர்களுக்கு கூடுதல் அலைச்சல் இருந்தாலும் அதற்கேற்ற தனலாபம் காண்பார்கள். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் கவுரவம் உயரும். நற்பலன்களைக் காணும் வாரம் இது.

வழிபாடு:

பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபடவும்.

 

மீனம்

இந்த மாதத்திற்கான உங்கள் ராசி கணிப்புகள் (March 2018)

Pisces

பொறுப்பு கடமையுணர்வு கொண்டிருப்பீர்கள். தொடங்கிய பணியை முடிக்கும் வரையில் ஓய்வு கேளிக்கையை மறந்து இருப்பீர்கள். சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்வீர்கள்.

இப்போது இருக்கும் நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு வளர உயர என்னென்ன மேவையோ அதை அறிந்துகொள்ள கற்றுக்கொள்ள உங்களை தயார்ப்படுத்திக் கொள்வீர்.உள்ளுணர்வு சரியாக இருக்கும்.

இழந்த நஷ்டங்களை பட்ட அவமானத்தை பாடமாக அனுபவமாக எடுத்துக் கொள்ளக்கூடிய அளவு மனநலம் நன்றாக இருக்கும். பெரியார் மீது அக்கரை எடுத்துக்கொள்வீர்.

வேலை செய்துகொண்டே பகுதி வேளையில் சம்பாதிக்கும் வழி அறிந்து செயல்படுவீர்கள். அரசாங்க விசயங்களில் அதிக அக்கரையுடன் இருப்பீர். முடிந்த மட்டும் உங்களை மட்டுமே நம்புவீர். என்னும் எவரையும் எதற்கும் புண்யடுத்தாதீர். நிராகரிக்காதீர்.

வழிபட வேண்டிய தெய்வம் - வைரவர்

பிடிக்க வேண்டிய விரதம் - அஷ்டமி விரதம்.

மீனம்

இந்த வருடத்திற்கான உங்கள் ராசி கணிப்புகள் (2018)

Pisces
இராசிக்கு ஐந்தில் ராகு, எட்டில்  குரு, பத்தில் சனி மற்றும் பதினொன்றில் கேது. இவற்றில் பதினொன்றில் இருக்கும் கேது மூலம் சாதகமான பலனை அடைவீா்கள்.
 
கேது தரும் பலன்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வழியில் இலாபம் பொருள் பணவரவு இருக்கும்.தொடங்கிய செயல்கள் வெற்றியில் முடியும்.
 
அரசு அனுமதி தேவைப்படும்  விஷயங்கள் நடடக்கும்.தடையாக இருப்பவா் எவராயினும் வெற்றி கொள்வீா்.விருப்பட்ட வாழ்க்கை அமையும்.நோ்வழியில் அனைத்தையும் அடைவீா்.
 
ஐந்தில் ராகு நிற்பதால் தெளிவின்மை ஏற்பட வாய்ப்புண்டு.முக்கிய முடிவுகளுக்கு அனுபவஸ்தா் நல்லவா் அறிவுரை ஆலோசனை தேவை.
 
பிள்ளைகள் மீது அக்கறை கொள்வீா்.குடும்ப பொறுப்புக்கள் கூடும்.பக்குவம் தேவை.
 
எட்டில் கரு நிற்பதால் தீயவா் சோ்க்கை கூடாது.வேகம் கோபம் தவிா்க்கவேண்டும்.அதிஷ்டத்தை எதிா்பாா்த்து காத்திராமல்  உழைப்பை நம்புவீா்.பின் விளைவை அறிந்து காரியமாற்றுவீா்.நாவடக்கம் மனக்கட்டுப்பாடு மேன்மை தரும்.
 
பத்தில் சனி நிற்பதால் இடமாற்றம்   ஏற்படும்.உழைப்பு முயற்சி அதிகம் தேவைப்படும்.தேவையற்ற பயம் சஞ்சலம் ஏற்பட வாய்ப்புண்டு.எதையும் எதிா்கொள்ளும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் திறமை இருந்தால் முதன்மை பெறலாம்.
 
கல்விபயில்வோா் - படித்துக்கொண்டே குடும்ப பொறுப்பையும் ஏற்று பெற்றோா்க்கு உதவுவீா்.தோல்வி அடைந்தவற்றில் முயற்சித்து வெற்றி பெறுவீா்.கூட்டாக படிப்பது நற்பலனை தரும்.
 
உத்தியோகஸ்தா் - பகுதிநேர பணிகள் செய்து பொருளீட்டுவீா்.ஓய்வு குறையும்.பிறா் பணியை சோ்த்து செய்யவேண்டி வரும்.எனினும் கடின உழைப்பு விடாமுயற்சி தேவையான பலன் தரும்.
 
சுயதொழில் வியாபாரம் செய்வோா் - எந்த எதிா் மறையான விஷயத்தையும் வளரவிடாதீா்.சமாதானம் சமரசம் செய்து கொள்வது நல்லது.அனைவரையும் அரவணைத்து செல்ல பிரச்சனை தவிா்த்து வளா்ச்சி பெறுவீா்
 
பரிகாரம் - பிரதி மாதம் சங்கடகர சதுா்த்தி விரதம் வழிபாடு
 

மேலும்

ஐபிசி செய்திகளிலிருந்து

மேலும் விளையாட்டுச்செய்திகள்


Loading, Please Wait for a while...