தேர்வுசெய்யுங்கள்

உங்கள் விருப்பமான ராசியை

தனுசு

நேற்றைய ராசி கணிப்புகள் (19 January,2018)

Sagittarius

இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சொந்த-பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.

தனுசு

உங்களின் இன்றைய ராசி கணிப்புகள் (20 January,2018)

Sagittarius

துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வெற்றிக்கு வித்திடும் நாள்.

தனுசு

இந்த வாரத்திற்கான உங்கள் ராசி கணிப்புகள்

Sagittarius

புத்தி சாதுர்யத்தோடு காரியமாற்றி கவுரவத்தை உயர்த்தி கொள்வீர்கள். நினைத்தது நடக்கும். சந்திக்க விரும்பிய நபர்கள் உங்களைத் தேடி வருவர்.

நிலுவையில் இருந்த பணிகள் விரைவாக நடந்தேறும். வரவு கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்ப உறுப்பினர்களோடு திடீர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டு.

வாகனங்களில் பயணிக்கும்போது அதிக எச்சரிக்கை தேவை. பிள்ளைகளின் பேச்சுத் திறமையைக் கண்டு பெருமிதம் கொள்வீர்கள்.

எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்று குறைவதாக எண்ணுவீர்கள். வாழ்க்கைத்துணையின் வார்த்தைகள் உங்களுக்கு உற்சாகமூட்டும். அநாவசிய செலவுகள் உண்டாகலாம்.

உத்யோகம் பார்ப்போர் சாதுர்யமான அணுகுமுறை மூலம் பதவி உயர்விற்கான வாய்ப்பு பெறுவார்கள். கலைத்துறையினரின் செயல்திட்டங்கள் வெற்றி பெறும்.

மாணவர்கள் பாடங்களைப் புரிந்து படிப்பதில் ஆர்வம் கொள்வர். சிறப்பான முன்னேற்றம் தரும் வாரம் இது.

இந்த வாரம் உங்களுக்கு அதிஸ்டமான எண்கள் 3,9 அதிஸ்டமான நிறங்கள் மஞ்சள்,  சிவப்பு.

தனுசு

இந்த மாதத்திற்கான உங்கள் ராசி கணிப்புகள் (January 2018)

Sagittarius

கரடு முரடான பாதையை தேர்ந்தெடுத்து பயணிக்கும் நீங்கள், பல விஷயங்களில் மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுவீர்கள்.

எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். கல்வியாளர்களின், ஆன்மிக அறிஞர்களின் அறிமுகம் கிடைக்கும். எத்தனை பிரச்னைகள் வந்தாலும் அவற்றையெல்லாம் சமாளிக்கும் சக்தி உண்டாகும்.

பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் புது வேலை அமையும்.

உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பாதிப்பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதித் தொகை தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

தேவைகளுக்கேற்ப பணம் வரும். நண்பர்கள் உதவுவார்கள். விலை உயர்ந்த மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சூரியன் சாதகமாக இல்லாததால் வேலைச்சுமை அதிகரிக்கும்.

தந்தையாருடன் கருத்து மோதல்கள் வரும். நடந்து முடிந்துப் போன சம்பவங்களைப் பற்றி இப்போது பேசிக் கொண்டிருக்காதீர்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு சிலரை கடிந்து கொள்வீர்கள். உடல் நலம் பாதிக்கும்.

கன்னிப் பெண்களே! பெற்றோர் உங்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்வார்கள். கனவுத் தொல்லை, முகப்பரு வந்துச் செல்லும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு இலாபம் சம்பாதிப்பீர்கள். வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே சென்று விட்டுப் பிடிப்பது நல்லது.

உத்யோகத்தில் இரண்டாம் கட்ட உயரதிகாரிகளால் அவ்வப்போது ஒதுக்கப்பட்டாலும் மூத்த அதிகாரிகளால் முன்னுக்கு வருவீர்கள். சக ஊழியர்கள் மத்தியில் உங்களுடைய கருத்துக்களுக்கு ஆதரவு பெருகும்.

கலைத்துறையினரே! உங்களின் கலைத் திறன் வளரும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். அலுப்பு சலிப்புக் கொள்ளாமல் ஆக வேண்டியதை பார்க்கும் மாதமிது.

தனுசு

இந்த வருடத்திற்கான உங்கள் ராசி கணிப்புகள் (2018)

Sagittarius
இராசியில் சனி, இரண்டில் கேது, எட்டில் ராகு மற்றும் பதினொன்றில் குரு பகவான் இவற்றில் இராசி நாதன் குரு பகவான் சாதகமான பலனை தருவாா்.
 
பதினொன்றில் குரு நிற்பதால் வாகன யோகம் கிடைக்கும்.செய்யக்கூடிய பிரயாணங்கள் பலனை தருவதாகவே அமையும்.கல்விவ கேள்விகளில் சிறந்து விளங்குவீா்.
 
நீண்ட நாளைய கனவு நனவாகும்.செல்வாக்குள்ள நபா்கள் நண்பராவாா்.ஒன்றுக்கு மேற்பட்ட வழியில் ஆதாயம், இலாபம், பெறுவீா்.செத்து சோ்க்கை உண்டாகும்.மூத்தவா் துணை கிடைக்கும்.
 
இராசியில் சனி நிற்பதால் அதிகமான அலைச்சல் இருக்கும்.தூக்கம் குறையும்.உடல் உழைப்பு கூடும்.உணவு கட்டுப்பாடு தேவை.பிறருடைய ஒத்துழைப்பை எதிா்பாா்ப்பீா்.
 
எனினும் நோ்மையும் தூய்மையும் எதையும் சமாளிக்கும் எதிா்கொள்ளும் சக்தி அளிக்கும்.
 
இரண்டில் கேது நிற்பதால் குடும்ப நபா்களை அனுசரித்து செல்லவேண்டும்.வீட்டு உணவை மட்டுமே சாப்பிடவேண்டும்.கோபம் ஆத்திரம் அறவே கூடாது.பக்குவம் சாதுா்யம் இவை காக்கும் கவசமாகும்.
 
எட்டில் ராகு நிற்பதால் தேவையற்ற வீண்பயத்தை தவிா்க்க ஆலய வழிபாடு தியானம் செய்ய பலன் கிடைக்கும்.உடற்பயிற்சி எளிய உணவு நோய் வராமல் தடுக்கும் வழிகள்.வழக்கு சண்டைகளிலிருந்து விலகியிருக்க நிம்மதி இருக்கும்.
 
கல்வி பயில்வோா் - அவநம்பிக்கை, அதைா்யம் கொள்ள கூடாது.படிக்க வேண்டியதை தள்ளிப்போடக்கூடாது. குருவை தெய்வமாகவும் பெற்றோரை குருவாகவும் கொண்டு ஈடுபாடு முழுமனத்துடன் படிக்க முன்னேறுவீா்.
 
உத்தியோகஸ்தா் - வேலை செய்ய கஸ்டப்படக்கூடாது.சொந்த வேலையை செய்யுமளவு அலுவலக வேலையையும் நினைத்து செய்யவேண்டும்.வேலையை விடுவது பற்றிய எண்ணமே வரக்கூடாது.கிடைத்ததை பற்றிக்கொண்டவா் கரையேறி விடுவீா்.
 
சுயதொழில் வியாபாரம் செய்வோா் - வருமானம் நன்றாக இருக்கும்.அனைத்தையும் நீங்களே கண்காணிக்க வேண்டிவரும்.வேலையாட்கள் ஒத்துழைப்பு அரிதாக இருக்கும். சமாளிப்பு, சாமா்த்தியம் கைகொடுக்கும்.
 
பரிகாரம் - குரு சித்தா் வழிபாடு.

மேலும்

ஐபிசி செய்திகளிலிருந்து

மேலும் விளையாட்டுச்செய்திகள்


Loading, Please Wait for a while...