தேர்வுசெய்யுங்கள்

உங்கள் விருப்பமான ராசியை

விருச்சிகம்

நேற்றைய ராசி கணிப்புகள் (23 November,2017)

Scorpio

இங்கிதமாக பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

விருச்சிகம்

உங்களின் இன்றைய ராசி கணிப்புகள் (24 November,2017)

Scorpio

துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்துச் சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

விருச்சிகம்

இந்த வாரத்திற்கான உங்கள் ராசி கணிப்புகள்

Scorpio

இந்த வாரத்திலே உங்களால் அதிகமான செலவுகளை செய்ய முடியும். கற்றுக்கொள்வதிலே ஆர்வம் அதிகமாகும். தனித்திறமைகளை அறிந்து கொள்வது வளர்த்துக் கொண்டு வெளிப்படுத்துவது சாத்தியமாகும்

இதுநாள் வரை தயக்கமோ பயமோ இருந்திருந்தால் இப்போது அகலும். சமயோசித்தமா நடக்க கற்றுக் கொள்வீர். நற்பண்புகளை வளர்த்துக் கொள்வீர்.

தயாள குணம் கொண்டு பிறரை ஏற்றுக் கொள்வது மன்னிப்பது மூலம் நன்மதிப்பை பெறுவீர். மந்த நிலை பிடிவாதம் முரட்டு சுபாவம் இவற்றை தவிர்த்து உற்சாகம் நம்பிக்கையோடு காணப்படுவீர்.

மொத்தத்தில் தீயவை விலகி நல்லவை கூடி ஏற்றம் பெறப் போகிறீர்கள். அதிக செலவு இருக்கும். எனிகும் சமாளிப்பீர். போராடி பாடுபட்டு காரியங்களை சாதிக்க வேண்டி இருக்கும்.

மாற்றங்களும்திருப்பங்களும் உங்களை வளப்படுத்தும். கல்வி பயிலக்கூடியவர்கள் பொழுது போக்கை குறைத்து நன்றாக படிப்பீர்கள்.

உத்தியோகம் செய்பவர்கள் இந்த வாரத்தில் உழைப்பின் மூலமாக நற்பெயர் பெறுவீர்கள். சுயதொழில் வியாபாரம் செய்பவர்கள் நல்ல பணியாளர்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.

அதிஸ்டமான எண்கள் 6 மற்றும் 9 உங்களுக்கு அதிஸ்டமான நிறங்கள் சிவப்பு மற்றும் வெளிர்சிவப்பு.

விருச்சிகம்

இந்த மாதத்திற்கான உங்கள் ராசி கணிப்புகள் (November 2017)

Scorpio

செயற்கரிய காரியங்களையும் முடித்துக் காட்டி எல்லோராலும் பாராட்டப்படுவீர்கள். சவால்களை எளிதாக சமாளிப்பீர்கள். கம்பீரமாகப் பேசுவீர்கள். அதிகாரிகளின் அறிமுகம் கிட்டும். பணப்புழக்கம் அதிகமாகும்.

உடன்பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்துகொள்வார்கள். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதித் தொகை கொடுத்து பத்திரப்பதிவு செய்வீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

புது பொறுப்புகளும், வாய்ப்புகளும் தேடி வரும். அவ்வப்போது பெரிய நோய் இருப்பதைப் போல நீங்கள் உணருவீர்கள். நல்ல மருத்துவரை ஆலோசித்து மருந்துஇ மாத்திரை உட்கொள்வது நல்லது.

யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். சமூகத்தில் அந்தஸ்து உயரும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். பிரச்னைகள் வெகுவாக குறையும். வீடு, மனை வாங்க முயற்சி செய்வீர்கள்.

கணவன்-மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். மனைவிவழியில் மரியாதை கூடும். புது வேலைக் கிடைக்கும். வேலைச்சுமை இருக்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். தூக்கம் குறையும்.

திட்டமிட்டபடி பயணங்கள் அமையும். பேசாமலிருந்த நண்பர்கள், உறவினர்கள் மீண்டும் வந்து பேசுவார்கள். சுப செலவுகள் அதிகமாகும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம்.யாராக இருந்தாலும் கொஞ்சம் இடைவெளி விட்டு பழகுவது நல்லது. ஆன்மிகத் ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

கன்னிப் பெண்களே! காதல் கைக்கூடும். பள்ளி, கல்லூரி கால தோழியை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் ஒருபுறமிருந்தாலும் ராஜதந்திரத்தால் இலாபத்தை பெருக்குவீர்கள். கொடுக்கல்-வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

உத்யோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும்.

கலைத்துறையினரே! உங்களின் மாறுபட்ட படைப்புகள் பலராலும் பாராட்டிப் பேசப்படும். விவேகமான முடிவுகளால் பழைய பிரச்சனைகள், சிக்கல்கள் தீரும் மாதமிது.

விருச்சிகம்

இந்த வருடத்திற்கான உங்கள் ராசி கணிப்புகள் (2017)

Scorpio

விருச்சிகம் ராசிக்காரர்களின் கவனத்திற்கு

விசாகம் 4, அனுஷம், கேட்டை

லட்சிய உணர்வுடன் செயலாற்றும் விருச்சிக ராசி அன்பர்களே! சனீஸ்வரர் சோதிப்பார். குரு சாதிக்க வைப்பார்.

ஆண்டின் தொடக்கத்தில் ராசிக்கு 11ல் உள்ள குரு, செப்.1ல் 12ம் இடமான துலாம் ராசிக்கு மாறுகிறார்.

அங்கிருந்து அவர் 2018 பிப்.13-ல் உங்கள் ராசிக்கு வருகிறார். ராசிக்கு 10-ம் இடமான சிம்மத்தில் உள்ள ராகு, ஜீலை 26-ல் 9-ம் இடமான கடகத்திற்கு மாறுகிறார்.

கேது 4- வீடான கும்பத்தில் இருந்து ஜீலை 26-ல் 3ம் இடமான மகரத்திற்கு செல்கிறார். ஜென்ம ராசியில் இருக்கும் சனி, டிச.18-ல்,2-ம் இடமான தனுசு ராசிக்கு மாறுகிறார். இந்த கிரகநிலைகளின் அடிப்படையில் பலனைக் காணலாம்.

 

ஏப்ரல் 14- ஜீலை 31

எழரைச்சனி காலம் என்பதால் பின்னடைவு ஏற்பட்டாலும் குருவால் தடைகளை முறியடித்து சாதனை படைப்பீர்கள்.

உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். வசதியான வீட்டிற்கு குடிபுகும் வாய்ப்புண்டு. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி விடாமுயற்சியால் நடந்தேறும். பணியாளர்களுக்கு சலுகை ஓரளவு கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் சீரான முன்னேற்றம் உண்டாகும். குருவின் பலத்தால் லாபம் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு புகழ், பாரட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தம் தாராளமாக கிடைக்கும். அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்கவேண்டியதிருக்கும்.

மாணவர்கள் முன்னேற்றமான பலன் காண்பர். சிலர் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு பெறுவர். விவசாயிகளுக்கு மொச்சை, கடலை, கேழ்வரகு, நெல், கோதுமை போன்ற தானியங்களில் நல்ல மகசூல் கிடைக்கும். பெண்கள் ஆன்மிக சிந்தனையுடன் செயல்படுவர்.

 

ஆகஸ்ட் 1- 2018 ஜனவரி 31

குடும்பத்தில் அமைதி நிலவும். ஆன்மிக சிந்தனை மேலோங்கும். பிள்ளைகளின் செயல்பாடு பெருமையளிக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாகலாம். அதற்குரிய வருமானம் கிடைக்கும்.

அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் படிப்படியாக உயரும். அரசு வகையில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். போட்டியாளர் வகையில் குறுக்கீடு வரலாம்.

கலைஞர்கள் பலன் எதிர்பாராமல் உழைக்க வேண்டியது இருக்கும். அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் நற்பெயர் பெறுவர்.

மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் அக்கறை தேவை. விவசாயிகள் நெல், கோதுமை, பழ வகைகள், கடலை போன்ற பயிர்களில் வருமானம் காணலாம். புதிய சொத்து வாங்க வாய்ப்புண்டு. பெண்கள் குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவர்.

 

2018 பிப்ரவரி 1- ஏப்ரல் 13

குருவின் பார்வை பலத்தால் நன்மை மேலோங்கும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். திருமணம் போன்ற சுபவிஷயங்களில் தடை குறுக்கிடலாம்.

பணியாளர்கள் பணிச்சுமையை சந்திக்கலாம். ஆனால் வழக்கமான சம்பள உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் அதிக முதலீட்டை தவிர்க்கவும். லாபம் சுமாராக இருக்கும்.

கலைஞர்களுக்கு விடாமுயற்சி இருந்தால் மட்டுமே ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி தாமதமாக கிடைக்கும். மாணாவர்களுக்கு கடின உழைப்பு தேவை.

ஆசிரியரின் அறிவுரையை ஏற்பது நல்லது. விவசாயிகள் அதிக செலவு பிடிக்கும் பயிரைத் தவிர்க்கவும்.

பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை தேவை.

 

பரிகாரங்கள்

பிரதோஷத்தன்று சிவன், வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு. செல்ல வேண்டிய கோவில் மதுரை மீனாட்சியம்மன்.

மேலும்

ஐபிசி செய்திகளிலிருந்து

மேலும் விளையாட்டுச்செய்திகள்


Loading, Please Wait for a while...