தேர்வுசெய்யுங்கள்

உங்கள் விருப்பமான ராசியை

ரிஷபம்

நேற்றைய ராசி கணிப்புகள் (19 January,2018)

Taurus

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்யோகத்தில் புதுப் பொறுப்புகள் தேடி வரும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

ரிஷபம்

உங்களின் இன்றைய ராசி கணிப்புகள் (20 January,2018)

Taurus

உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

ரிஷபம்

இந்த வாரத்திற்கான உங்கள் ராசி கணிப்புகள்

Taurus

இந்த வாரம் உங்களுக்கு சவலாக வாரமாக அமையப் போகின்றது. அதிகமான நெருக்கடிகள் ஏற்பட வாய்ப்புண்டு. அப்போது தான் உங்களுடைய திறமைகள் வெளிப்படும்.

யாருக்கு பிறருடைய ஆதரவு கிடைக்காது தனித்து விடப்படுகின்றார்களோ யாருக்கு அதிகமான கஸ்டங்கள் ஏற்படுகின்றதோ அவர் தன்னுடைய அனுபவத்தை அதிகப்படுத்திக்கொள்வார்.

தன்னை மட்டுமே நம்புவார். திறமைகளை அதிகப்படுத்திக்கொள்வார். இப்போது உங்களுக்கு மறைமுகமாக நன்மைகள் நடக்கும். உங்களுடைய ஒய்வு நேரத்தை குறைத்துக்கொண்டு உங்களுடைய துறை சார்ந்த அறிவை இன்னும் தீவிரப்படுத்திக்கொள்வீர்கள். அதன் மூலமாக உங்களால் உயர முடியும்.

உங்களுக்கே தெரியாத உங்களுடைய திறமைகள் உங்களுடைய சக்தி இப்போது நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். சிலருக்கு மிகப்பெரிய அம்சங்களை சாதிக்கக்கூடிய அம்சமும் கூட உண்டு.

கல்வியிலும் கூடி பெயர் சொல்லக்கூடிய அளவுக்கு பாராட்டுக்களை பெற முடியும். உத்தியோகம் செய்யும் போது உயர் பதவிகள் கூடுதல் அதிகாரங்கள் உங்களை தோடி வரும்.

நீங்கள் ஏற்றுக்கொண்டால்உங்களுடைய ஓய்வு நேரம் குறையும் வேலை அதிகமாகும். ஆனால் வருமானம் சிறப்பாக இருக்கும். உங்களுடைய குடும்பரீதியாக நீங்கள் அவர்களுகைளுடன் செலவழிக்கக்கூடிய நேரம் பிள்ளைகளோடு செலவழிக்கக்கூடிய நேரம் உங்களுடைய ஓய்வு நேரம் இது கட்டாயமாக குறையத்தான் செய்யும் ஆனால் அதற்கு  பலனாக உங்களுடைய பொறுப்பு அதிகாரம் போன்ற விசயங்கள் அதிகமாக்கப்படும்.

சிலருக்கு இந்த வாரத்திலே இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு இந்த வாரத்திலே நீங்கள் கிடைக்கக்கூடிய நடக்கக்கூடிய நல்ல விசயங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தவிர்க்கக்கூடியது உதையும் நிராகரிக்கக்கூடிய சுயதொழிலை விட்டு விடலாமா என நினைப்பது போன்ற விசயங்களை தவிர்க்க வேண்டும் .

இந்த வாரத்திலே உங்களுக்கு அதிஸ்டம் தரக்கூடிய எண்கள் 4,9. அதிஸ்டமான நிறங்கள் நீலம், சிவப்பு.

ரிஷபம்

இந்த மாதத்திற்கான உங்கள் ராசி கணிப்புகள் (January 2018)

Taurus

சமூகத்தின் மீது அக்கறை கொண்ட நீங்கள் அநியாயத்தை எதிர்க்கத் தயங்க மாட்டீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை வரும். வெளிநாட்டிலிருப்பவர்கள், வெளிமாநிலத்தில் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

மகிழ்ச்சியான செய்திகள் வரும். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்க திட்டமிடுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும்.

உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது சுலபமாக முடியும். புதிதாக வட்டிக்கு வாங்கி பழைய கடனை பைசல் செய்வீர்கள். அஷ்டமத்துச் சனி தொடர்வதால் எதிலும் கொஞ்சம் முன்யோசனையுடன் செயல்படப்பாருங்கள்.

குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்னைகளை பெரிதாக்கிக் கொள்ள வேண்டாம். முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். பெரிய முடிவுகளெல்லாம் எடுக்க வேண்டாம். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். மற்றவர்களை எளிதில் நம்பி ஏமாறாதீர்கள். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திடாதீர்கள்.

பழைய சொந்த-பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். நட்பால் ஆதாயம் உண்டு. பிள்ளைகள் கல்வி அல்லது உத்யோகத்தின் பொருட்டு அயல்நாடு அல்லது வெளிமாநிலம் செல்வார்கள்.

பெற்றோரின் உடல் நிலை பாதிக்கும். கொஞ்சம் அலைச்சலும் இருக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும் போதும், சாலையை கடக்கும் போதும் நிதானம் அவசியம்.

அரசு விஷயங்கள் தாமதமாக முடியும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். கொஞ்சம் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். திடீரென்று அறிமுகமாகுபவரை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம்.

கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் தள்ளியிருங்கள். உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை தெரிந்து கொள்ளுங்கள். புது முதலீடுகள் வேண்டாமே. வேலையாட்கள், பங்குதாரர்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது.

உத்யோகத்தில் உயரதிகாரிகளின் ஆலோசனையின்றி எந்த முடிவுகளும் வேண்டாம்.

கலைத்துறையினரே! தனித்திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு தேடி வரும். தன் பலம், பலவீனம் உணர்ந்து செயல்பட வேண்டிய மாதம்.

ரிஷபம்

இந்த வருடத்திற்கான உங்கள் ராசி கணிப்புகள் (2018)

Taurus

ராசிக்கு மூன்றில் ராகு ஒன்பதில் கேது ஆறில் குரு எட்டில் சனி பகவான் இவற்றில் மூன்றாமிடத்திலிருக்கும் ராகு யேக பலனை தரவல்லது.

ராசிநாதன் சுக்கிரனுக்கு நட்பு கிரகம் ராகு. தொடங்கிய காரியங்கள்யாவும் வெற்றியுடனே முடியும் துணிவு தன்நம்பிக்கை இவையே உங்களின் முன்னேற்றத்திற்கு காரணமாக அமையும்.

நற்பலங்கள் எளிதிலும் விரைவாகவும் சாத்தியமாகும் தன வரவு நல்ல லாபம் பெறுவீர். சகோதர வழியில் உதவி ஊக்கம் கிடைக்கப்பெறுவீர்.

குடும்ப நபர்களின் ஆதரவு ஒத்துழைப்பும் கிடைக்கப் பெற்று முக்கிய கடமைகளை செய்து முடிப்பீர் உங்கள் பலம் ஆற்றல் உணர்ந்து வெளிப்படுத்தி முன்னேற்றம் அடைவீர்.

ஒன்பதாமிடத்தில் நிற்கும் கேதுவால் தந்தைக்கு உதவியாகவும் அவர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம். ஆன்மிக நாட்டம் உண்டாகும்.

நல்லகுரு கிடைக்கப்பெற்று தெளிவும் உயர்வும் அடைவீர். ஆறில் நிற்கும் குருவால் பகைவர் மூலம் நஷ்டம் ஏற்படா வண்ணம் எச்சரிக்கையுடன் இருப்பீர். அரசாங்க காரியங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

எட்டில் சனி நிற்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. ஆடம்பரம் ஆசை இவற்றை தவிர்த்து உழைப்பு அடக்கம் கைக் கொள்வீர். பிறர் மதிக்க வேண்டும் போற்ற வேண்டும் என்பதை விட்டு எதிர்பார்ப்பில்லாமல் செயல்படுவீர்கள்.

கல்வி பயில்வோர் - குடும்ப விசயங்களையோ குறைகளையோ நினைத்து நேர விரயம் செய்யாதீர். நல்ல கல்வியால் உயர்வும் உன்னத நிலையும் சாத்தியம் உன்பதை உணர்வீர்கள். பாடுபட்டு முயற்ச்சியுடன் படிக்க உயர்வீர்.

உத்தியோகஸ்தர் - உயரதிகாரி முதலாளி கூடுதலாக ஆதிக்கம் செலுத்தினாலும் பொறுத்துக்கொள்வீர். பகுதி நேரத்தையும் பயன்படுத்திக் கொள்ளும் வழியை அறிந்து கொள்வீர்கள்.

சுயதொழில் வியாபாரம் செய்வோர். - குருட்டு தைரியம் பிறர் மீது அதீத நம்பிக்கையை தவிப்பீர். திட்டமிட்டு பின்விளைவை தெரிந்து எடுக்கும் முடிவுகள் பலனளிக்கும். எதிரிகள் மீது வழக்கு போடுவதை விட மன்னிப்பது நல்லது.

பரிகாரம் - சக்தி வாய்ந்த உக்கிரமான பெண் தெய்வ வழிபாடு.

மேலும்

ஐபிசி செய்திகளிலிருந்து

மேலும் விளையாட்டுச்செய்திகள்


Loading, Please Wait for a while...