தேர்வுசெய்யுங்கள்

உங்கள் விருப்பமான ராசியை

கன்னி

நேற்றைய ராசி கணிப்புகள் (17 March,2018)

Virgo

கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். தொட்டது துலங்கும் நாள்

கன்னி

உங்களின் இன்றைய ராசி கணிப்புகள் (18 March,2018)

Virgo

கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஆதரவுக் கிட்டும். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

கன்னி

இந்த வாரத்திற்கான உங்கள் ராசி கணிப்புகள்

Virgo

எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தேக்கத்தில் இருந்த பணிகள் விரைவாக நடந்தேறும். பொருளாதார நிலையில் சிரமம் இருக்கும். குடும்பத்தில் சலசலப்புகள் தோன்றும்.

உங்கள் பேச்சு மற்றவர்கள் மனதைப் புண்படுத்தக் கூடும். அந்நியப் பெண்களால் பிரச்னைகளை சந்திக்க நேரும். உடன்பிறந்தோர் உதவிகரமாய் செயல்படுவார்கள்.

எதிர்பாராத பிரயாண வாய்ப்பு உண்டு. வாகனங்கள் ஆதாயம் தரும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி சேமிப்பில் ஈடுபடுவீர்கள்.

வாழ்க்கைத்துணையின் செயல்பாடுகள் உங்களுக்கு மிகுந்த பக்கபலமாகவும்இ ஆலோசனைகள் இக்கட்டான நேரத்தில் மிகுந்த பயனுள்ளதாகவும் அமையும். கலைத்துறையினர் கூட்டு முயற்சியில் வெற்றி பெறுவார்கள்.

பெற்றோரின் உடல்நிலையில் கவனம் தேவை. தொழில் ரீதியாக சிறப்பாக செயல்பட்டு நற்பெயர் காண்பீர்கள். சரிசம பலனைக் காணும் வாரம் இது.

வழிபாடு:

சூரியநாராயணனை வழிபடவும்.

கன்னி

இந்த மாதத்திற்கான உங்கள் ராசி கணிப்புகள் (March 2018)

Virgo

கல்வி கேள்விகளிலே சிறந்து விளங்குவீர். பொறுப்பு கூடும். கடமையை உணர்ந்து செயற்படுவீர். வேலைப்பளு போட்டி என்று அனைத்தைளும் சமாளிக்கும் பக்குவம் கிடைக்கும். உற்சாகத்துடன் இருந்து உயர்வை பற்றி சிந்தித்துக்கொண்டேயிருப்பீர்.

நல்லவர் வல்லவர்களின் துணை கிடைத்து தகுதியை திறமையை மேலும் வளர்த்துக் கொள்வீர்.உடற்பயிற்சி தியானம் என்று உங்கள் மீது அக்கரை அதிகமாகும். தடைப்பட்ட திருமணம் நடந்தே நல்ல சந்தர்ப்பம் அமையும்.

சுயதொழில் தொடங்க உடுக்கும் முயற்சிகள் கைகூடும். உடன் பிறந்தவர்களிடையே விட்டுக்கொடுத்து போக வேண்டியது அவசியம். சக்திக்கு மீறிய கடனை தவிர்ப்பீர். திருமண விசயத்தில் அவசரப்படாதீர். தனித்து செயல்புரிவது முடிவெடுப்பதை விட தக்க துணைணை ஏற்பது நல்லது.

வழிபட வேண்டிய தெய்வம் - அம்பிகை

பிடிக்க வேண்டிய விரதம் - பௌர்ணமி விரதம்.

கன்னி

இந்த வருடத்திற்கான உங்கள் ராசி கணிப்புகள் (2018)

Virgo

ராசிக்கு இரண்டில் குரு நான்கில் சனி ஐந்தில் கேது பதினொன்றாமிட ராகுவும் சாதகமான யோக பலனை தருவீர். ஆண்டு கோள்களில் இரண்டு கோள்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கின்றது.

இரண்டில் குரு நிற்பதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். குத்திரப்பேறு உண்டு. பேச்சு சாமர்த்தியம் வாக்கை நிறைவேற்றுவது. இவை சாத்தியமாகும்.

குடும்ப அமைதி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். படித்த பிடித்த துறையில் வேலை கிடைக்கும். மணவயத்தில் இருப்பவர்க்கு நல்ல வரன் அமையும். சுகவாசியாக காணப்படுவீர்.

பதினொன்றில் ராகு நிற்பதால் ஆதாயம் வாபம் கூடுதலாக கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்குவீர். சமூக அந்தஸ்து மேலோங்கும் பக்தி அதிகமாகும்.

சுயதொழில் தொடங்கும் எண்ணம் ஈடேறும். சுகபோஜனம் நல்ல ஆய்வு கிடைக்கும் வெளிநாடு சம்பந்தமான ஆதாயம் கிடைக்கும்.

நான்கில் சனி நிற்பதால் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டி இருக்கும். திடீர் இடமாற்றம் ஏ்பட வாய்ப்புண்டு. ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வீர்.

எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பீர். தீய பழக்கங்களில் இருந்து அதிகம் விலக வேண்டும். ஐந்தில் கேது நிற்பதால் குழந்தைகள் ஆரோக்கியம் பாதுகாப்பிற்கு முக்கித்துவம் அளிப்பீர்.

புண்ணிய காரியங்களில் ஈடுபடுவது மனநிறைவு தரும். தெளிவுடளும் திறமையுடனும் செயல்பட்டு வெற்றி புகழ் அடைவீர்.

கல்வி பயில்வோர் - முதலிடம் பாராட்டு பெறுவீர். ஈடுபாடுகவனத்துடன் பயில முடியும் விரும்பிய துறை இடம் கிடைத்து மகிழ்வீர். சிலருக்கு வெளியூர் வெளிநாடு சென்று படிக்கும் சூழ்நிலை உருவாகும்.

உத்தியோகஸ்தர் - ஊதிய உயர்வு பெறுவீர். பகுதி நேரத்தில் பணி தொழில் செய்து பொருளீட்டுவீர். சாமர்த்தியமாக செயர்ப்பட்டு நற்பெயர் புகழ் பெறுவீர். தேவையான கடன் வசதியும் எளிதில் கிடைக்கும்.

சுயதொழில் வியாபாரம் செய்வோர் - வாங்கிய கடனை அடைப்பீர். புதிய கிளைகள் தொடங்குவீர். பெரிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஒய்வு குறைந்தாலும். உழைப்பு பலன் தரும்.

பரிகாரம் - மகாலஷ்மி வழிபாடு அஷ்டலஷ்மி வழிபாடு.

மேலும்

ஐபிசி செய்திகளிலிருந்து

மேலும் விளையாட்டுச்செய்திகள்


Loading, Please Wait for a while...