குருபெயர்ச்சி பலன்கள் 2017-2018 மேஷராசி

குருப் பெயர்ச்சி பலன்கள்

குருபெயர்ச்சி பலன்கள் 2017-2018 மேஷராசி

உங்களுடைய ராசியிலே ஆறாம் இடத்தில் இருந்த குருபகவான் ஏழாம் இடத்திற்கு பெயர்ச்சியாகி வந்துள்ளார். ஏழாம் இடத்தில் இருந்து உங்களுடைய ராசியை பார்த்துக்கொண்டு இருக்கப்போகின்றார்.

இப்போது நீங்கள் தர்ம வழியில் நடக்கவேண்டும். இதன் மூலம் குரு பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பலனை தரும். தர்மம் நீதி நியாயம் நேர்மை இந்த விசயங்களை எல்லாம் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். இதற்கு எதிரான செயல்கள் குணங்கள் உங்களிடத்திலே இருந்தால் நீங்கள் அதை கைவிட வேண்டும் இதனை நினைவில் கொண்டால் போதுமானது.

வாழ்க்கைத்துணை, நண்பர்கள், உடன் பிறந்தவர்கள், உங்களுடன் பணிபுரியக்கூடியவர்கள், படிக்கக்கூடியவர்கள், பயணத்தின்போது சக பயணி இவர்களில் ஒருவர் நம்முடன் பேசினாலும் கூட அவர் ஏழாமிடம் தான் இவர்களிடத்திலே கவனமாக இருக்கவேண்டும். எக் காரணம் கொண்டும் இவர்களிடத்திலே நாம் பகையை ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது.

குறிப்பாக வாழ்க்கைத்துணையை புரிந்து கொண்டு நடக்க வேண்டும். அவசரப்பட்டு நீங்களாகவே வாழ்க்கைத்துணையை தெரிவு செய்யக்கூடாது. இவை எல்லாம் கவனத்தில் எடுத்துக்கொண்டால் பிரச்சனை ஏற்படாது.

குரு பார்க்கக்கூடியது பதினொராமிடம் என்று செல்லும் போது உங்களுடைய ஆசைகள் நிறைவேறும். தேவையான நல்ல இலாபங்கள் உங்களுக்கு கிடைக்கும். மூத்தவர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார் நல்லவர்களுடைய அறிமுகம் துணை உங்களுக்கு கிடைக்கும். எப்படிப்பட்ட நோய்கள் இருந்தாலும் அனைத்தும் நிவர்த்தியாகும் நல்ல ஆரோக்கியம் உங்களுக்கு கிடைக்கும். நல்லதெளிவு நல்ல எண்ணங்கள் கொண்டு இருப்பீர்கள்.

மூன்றாம் இடத்தை குரு பார்க்கும் போது நீங்கள் எடுக்கக்கூடிய நல்ல காரியங்களுக்கு உண்டான முயற்சிகளும் கைகூடும். சகோதர ரீதியாக உறவு பலப்படும். உங்களுக்கு இருக்கக்கூடிய பயம் பலவீனம் இவை எல்லாம் அகன்று நல்ல துணிவு தைரியம் பிறக்கும்.

குரு பெயர்ச்சியிலே நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம் என்று பார்க்கும் பொழுது நல்ல வழியில் நடக்க வேண்டும். நான் பொய் கூறமாட்டேன் அநீதியான வழியிலே பொருளீட்டமாட்டேன் இப்பிடிப்பட்ட சங்கல்பத்தை எடுத்துக்கொண்டால் போதுமானது. இவற்றை செய்து கொண்டால் குருபெயர்ச்சி இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு நற்பலங்களை அளிக்கும்.

ஐபிசி ஜோதிடத்திலிருந்து

மேலும்

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யுங்கள்!

தினசரி ராசி பலனை மின்னஞ்சல் மூலம் நேரடியாக பெறுங்கள்


Loading, Please Wait for a while...