தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் முன்னரே பாஜகவுக்கு வாழ்த்து கூறிய ஓபிஎஸ்.!

3shares
Image

கர்நாடக தேர்தல் :

கடந்த 12 ஆம் தேதி கர்நாடக மாநிலத்திற்கான சட்டப்பேரவை தேர்தலானதுநடைபெற்றது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் இரு தொகுதிகளை தவிர்த்துமீதமுள்ள அனைத்து தொகுதிகளுக்கும் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்றுஅறிவிக்கப்பட்டன. அதில், பாஜக 104 இடங்களையும், காங்கிரஸ் 78 இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் சுமார் 38 இடங்களிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 2 இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றனர்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதனைதொடர்ந்து தங்கள் தரப்பு ஆட்சியமைக்கவும், எதிர்தரப்பினர் ஆட்சியமைப்பதை தடுக்கவும் காங்கிரஸும், பாஜகவும் பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு செயலற்றிவருகின்றனர்.இதன் காரணமாக பரபரத்து கிடக்கிறது கர்நாடக மாநில அரசியல் களம்.

வெளியாகாத முடிவுகள் ; வாழ்த்திய ஓபிஎஸ் :

அதே சமயம், நேற்றைய வாக்கு எண்ணிக்கையின் போது முன்னிலை நிலவரங்கள்வெளியாகிக்கொண்டிருக்கும் போதே அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓபிஎஸ், கர்நாடக மாநிலத்தில் வெற்றி பெற்ற பாஜகவுக்கு தாம் வாழ்த்துதெரிவிப்பதாகவும், கர்நாடகாவில் வென்றதன் மூலம் தென்னகமாநிலங்களில் தனது வெற்றிக்கணக்கை துவங்கிவிட்டது பாஜக எனவும் தெரிவித்து பாஜகதேசிய தலைவர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியது அரசியல் நோக்கர்களிடத்தில் கடும்விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது.

தொடர்ச்சியாக தமிழகத்தை (நீட், காவிரி) பல்வேறு விவகாரங்களில் வஞ்சித்து வருகிற பாஜகவின் வெற்றியைவாழ்த்துவதுடன், தென்னக மாநிலங்களில் வெற்றிக்கணக்கைதுவங்கிவிட்டீர்கள் என வாழ்த்துவதா எனவும் கேள்வியெழுப்புகின்றனர் பொதுமக்கள்..பதிலளிப்பாரா ஓபிஎஸ்.


ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
மதுபோதையில் நடந்த கொடுரம்! 2 மகன், மனைவி துடிதுடித்துப் பலி..

மதுபோதையில் நடந்த கொடுரம்! 2 மகன், மனைவி துடிதுடித்துப் பலி..

சிங்கள மக்கள் மனங்களில் இடம்பிடித்த தமிழ் இளைஞர்கள்!

சிங்கள மக்கள் மனங்களில் இடம்பிடித்த தமிழ் இளைஞர்கள்!

இயற்கையாக மரணிக்கவில்லையா ஜெயலலிதா ; வெளியாகும் பகீர் உண்மைகள்.!

இயற்கையாக மரணிக்கவில்லையா ஜெயலலிதா ; வெளியாகும் பகீர் உண்மைகள்.!