மதச்சார்பற்ற சக்திகள் சிதறிவிடக்கூடாது ; விருது வழங்கும் விழாவில் திருமா பேச்சு.!

2shares
Image

சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் இந்த மண்ணிலே ஏழை - எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட எண்ணற்ற கொடுமைகளை கலைந்திட தம் வாழ்நாள் முழுமைக்கும் அயராது பாடுபட்ட அறிவுலக மேதை, பெண்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சமூகத்திற்குமாய் உரிமைக் களமாடிய புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 127வது பிறந்த நாள் விழாவானது நேற்று சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரால் கொண்டாடப்பட்டது.

விழாவில் புரட்சியாளர். அம்பேத்கர், தந்தை பெரியார், கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத், அயோத்திதாசர் உள்ளிட்ட தலைவர்களின் பெயரால் சமூக முன்னேற்றத்திற்காகபாடாற்றிய சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

நிகழ்வில் பேசிய விசிக நிறுவனர் -தலைவர் தொல்.திருமாவளவன், "கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சி பொருப்பினுக்கு வந்த பிரதமர் மோடிதலைமையிலான மத்திய அரசு தேசத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதனை விடுத்து மதரீதியிலான உணர்வுகளை தேசம் முழுவதும் பரப்பி அதன் வாயிலாக தேர்தல் ஆதாயம் பெறவே துடிக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலிலும் கூடமதச்சார்பற்ற சக்திகள் பிரிந்து நின்ற காரணத்தினாலேயே பின்னடைவைசந்தித்திருக்கின்றன."

"இந்த நிலை நாடாளுமன்ற தேர்தலிலும்தொடராதிருக்க நாடு முழுவதிலுமுள்ள மதச்சார்பற்ற சக்திகள் யாவும் ஓரணியில் திரளவேண்டும்" என அழைப்பு விடுத்துள்ளார்.


ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
சிங்கள மக்கள் மனங்களில் இடம்பிடித்த தமிழ் இளைஞர்கள்!

சிங்கள மக்கள் மனங்களில் இடம்பிடித்த தமிழ் இளைஞர்கள்!

மதுபோதையில் நடந்த கொடுரம்! 2 மகன், மனைவி துடிதுடித்துப் பலி..

மதுபோதையில் நடந்த கொடுரம்! 2 மகன், மனைவி துடிதுடித்துப் பலி..

இயற்கையாக மரணிக்கவில்லையா ஜெயலலிதா ; வெளியாகும் பகீர் உண்மைகள்.!

இயற்கையாக மரணிக்கவில்லையா ஜெயலலிதா ; வெளியாகும் பகீர் உண்மைகள்.!