அன்றே சொன்னார் பேரறிஞர் அண்ணா.. ஆட்டுக்கு தாடியும், ஆளுநர் பதவியும் தேவையாவென்று.!

3shares
Image

திராவிட முன்னேற்ற கழகத்தின் பிதாமகர் என்று இன்றும் அக்கட்சியினரால் கொண்டாடப்பட்டுவரும் பேரறிஞர் அண்ணா அவர்கள் துவக்கத்தில் திராவிட நாடு கோரியவர். அதன் பின்னர் மாநிலங்களுக்கு சுயாட்சி உரிமை கோரியவர். நடுவண் அரசின் பிரதிநிதிகள் மாநிலங்களில் ஆளுநர் என்ற அலங்காரபதவியில் நியமிக்கப்பட்டு அவர்கள் வாயிலாக மாநில அரசுகளின் அதிகாரங்களில் தலையிடுவதும், மத்திய அரசின் ஏவலாளிகளாக நடந்துகொள்வதும் நிகழ்கிற காரணத்தினாலேயே ஆட்டுக்கு தாடி எப்படி வேண்டாத ஒன்றோ ; அதனைப்போல் நாட்டுக்கு ஆளுநர் பதவியும் வேண்டாத ஒன்று என ஆளுநர்களின் நியமனங்களை எதிர்த்தவர் அண்ணா.

அண்ணாவின் ஆளுநர்கள் குறித்த கூற்று இன்றும் பொய்திடவில்லை என்பதனை தற்போது கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்துவரக்கூடிய சம்பவங்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன என்றால் அதில் மிகையேதுமில்லை. காங்கிரஸ் - மஜத பெரும்பான்மை பெற்றிருந்த போதிலும், ஆட்சியமைக்க அவர்களை அழைத்திடாமல், பாஜகவை அழைத்ததிலிருந்தே நடுநிலையாக செயல்பட வேண்டிய ஆளுநர் பாஜக ஆதரவு நிலையில் செயல்படுகிறார் என்பது புலனாகிறது.

நமது அண்டை மாநிலமான புதுவையிலும் கிரண்பேடி ஆளுநராக மோடி அரசால் நியமிக்கப்பட்டு, காங்கிரஸ் கட்சியை சார்ந்த நாராயணசாமி அரசுக்கு பல்வேறு சிக்கல்களை உண்டாக்கிவருகிறார். நடுநிலையாக செயல்பட வேண்டியவர்கள் நிலை தவறி செயல்படுவதோடு மட்டுமின்றி ஜனநாயகத்தினை சவக்குழியில் தள்ளுகின்றனர் என்பதுவே நிதர்சனம்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?