போக்குவரத்து காவலர் தாக்கி முதியவர் பரிதாப பலி.!

0shares

சென்னையில் போக்குவரத்து காவலர் தாக்கி முதியவர் ஒருவர் மரணமடைந்துள்ள சம்பவம் பரபரப்பினை கிளப்பியுள்ளது.

காவல்துறையினர் உங்கள் நண்பன் என பொதுவெளியில் சொல்லப்பட்டுவந்தாலும், சில காவல்துறையினரின் சமீபத்திய செயற்பாடுகள் அப்பாவி பொதுமக்களின் உயிரை காவு வாங்கிவருகிறது. இன்று சென்னை மதுரைவாயலில் போக்குவரத்து காவலர் ஒருவர் தாக்கியதில் சதிஷ் என்ற அப்பாவி முதியவர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தின் காரணமாக அப்பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.

முன்னதாக, சில மாதங்களுக்கு முன்னர் திருச்சியில் போக்குவரத்து காவலர் ஒருவர் தாக்கியதில் உஷா என்ற கர்ப்பிணி பெண் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
உலகிலேயே தமிழின் உறைவிடமாக மிளிரப்போகும் யாழ்ப்பாணம்!

உலகிலேயே தமிழின் உறைவிடமாக மிளிரப்போகும் யாழ்ப்பாணம்!

ரயில் விபத்தினை தடுத்து 2000 பயணிகளின் உயிர்காத்த சிறுமி.!

ரயில் விபத்தினை தடுத்து 2000 பயணிகளின் உயிர்காத்த சிறுமி.!

முல்லைத்தீவில் பதற்றம்: இராணுவமும் விசேட அதிரடிப்படையும் குவிப்பு!

முல்லைத்தீவில் பதற்றம்: இராணுவமும் விசேட அதிரடிப்படையும் குவிப்பு!