ஜம்முவில் பாகிஸ்தான் அத்துமீறல்: 4 ராணுவ வீரர்கள் பலி!

28shares
Image

ஜம்மு காஷ்மீர் சம்பா மாவட்டத்தில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவத்தை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் வீரமரணம்அடைந்துள்ளனர்.

இந்திய எல்லை பகுதிகளில் போர் ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்துவதும், அதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருவதும் வாடிக்கையான ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் சம்பா மாவட்டத்தில் ராம்கார் பகுதியில் பாபா சம்லியால் அவுட்போஸ்ட்டை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் இந்திய ராணுவத்தை சேர்ந்த, சப் இன்ஸ்பெக்டர் ராஜ்னிஷ்குமார், ஏஎஸ்ஐ ராம் நிவாஸ், ஏஎஸ்ஐ ஜடேந்தர் சிங் மற்றும் கான்ஸ்டபிள் ஹன்ஸ் ராஜ் ஆகியோர் வீரமரணம் அடைந்தனர். மேலும் இதில் படுகாயமடைந்த 3 ராணுவ வீரர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து அங்கு ஏராளாமான இந்திய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகின்றது. முன்னதாக ராம்கர் மாவட்டத்தில் உள்ள பாபா சம்லியால் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் 'உர்ஸ்' திருவிழா நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
முல்லைத்தீவில் பதற்றம்: இராணுவமும் விசேட அதிரடிப்படையும் குவிப்பு!

முல்லைத்தீவில் பதற்றம்: இராணுவமும் விசேட அதிரடிப்படையும் குவிப்பு!

ரயில் விபத்தினை தடுத்து 2000 பயணிகளின் உயிர்காத்த சிறுமி.!

ரயில் விபத்தினை தடுத்து 2000 பயணிகளின் உயிர்காத்த சிறுமி.!

பேய்களை பார்க்கக்கூடிய இடங்கள்!!!

பேய்களை பார்க்கக்கூடிய இடங்கள்!!!