ஊடகங்களும் பாஜகவுக்கு துணை போகின்றன - ஆளூர் ஷாநவாஸ் விமர்சனம்.!

5shares

பலதரப்பட்ட அழுத்தங்களுக்கு அடிபணிந்து ஊடகங்களும் பாஜகவுக்கு துணை போவதாக விமர்சித்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ்.

சமீபத்தில் முன்னணி செய்தி தொலைக்காட்சி ஒன்று ஒருங்கிணைத்த விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் அமீர் பாஜகவுக்கு எதிராக சில செய்திகளை சுட்டிக்காட்டிய போது, பாஜகவினர் அவரை அடிக்க பாய்ந்ததுடன், நிகழ்ச்சி முடிந்த பின்னரும் அவரை தாக்க முயன்றனர். ஆனால், காவல்துறையோ அமீர் மீதும், குறிப்பிட்ட அந்த தொலைக்காட்சி மீதும் மட்டுமே வழக்கு பதிந்தது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆளூர் ஷாநவாஸ், "விவாத நிகழ்ச்சியில் பிரச்சனைகளை தூண்டிவிட முயன்றவர்கள் பாஜகவினர் தான். கருத்துரிமைக்கு எதிராக அரசோ அமீர் மீதும், தொலைக்காட்சி மீதும் வழக்கு பதிந்துள்ளது. இங்கே நாம் கவனிக்கவேண்டியது விவாத அரங்கினுக்குள் நடைபெற்ற சம்பவங்களை குறிப்பிட்ட அந்த தொலைக்காட்சி ஒளிபரப்ப மறுப்பது தான். ஊடகங்களும் இவ்வாறு செயல்படுவதால் தான் பாஜகவினரின் கொட்டம் தலை விரித்து ஆடுகிறது" என விமர்சித்துள்ளார்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
கிளிநொச்சியில் புலி!! மடக்கிப் பிடித்தார்கள் பொதுமக்கள்(வீடியோ இணைப்பு)

கிளிநொச்சியில் புலி!! மடக்கிப் பிடித்தார்கள் பொதுமக்கள்(வீடியோ இணைப்பு)

2000 வருடங்களுக்கு முன்னய கொம்பியூட்டர் கண்டுபிடிப்பு- வேற்றுக்கிகவாசிகள் பாவித்ததா?

2000 வருடங்களுக்கு முன்னய கொம்பியூட்டர் கண்டுபிடிப்பு- வேற்றுக்கிகவாசிகள் பாவித்ததா?

மன்னார் கழுதைகளுக்கு அடித்த யோகம்!

மன்னார் கழுதைகளுக்கு அடித்த யோகம்!