உத்திரபிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 17 பேர் பலி!

4shares
Image

உத்திரபிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் தடுப்பு மீது மோதி விபத்து ஏற்பட்டதில் 17 பேர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ப்பூரிலிருந்து உத்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள பெர்குபாபாவிற்கு அதிவேகமாக சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று, மெயின்புரி மாவட்டத்தில் கிரெட்புர் அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனையடுத்து சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததோடு, விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட ஆரம்பித்தனர்.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 17 பேர் பலியாகியுள்ளதாகவும், 35 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
கேரளாவுக்கு உதவ வேண்டாமென பதிவிட்ட நபர் ; வேலையைவிட்டு தூக்கிய ஓமன் நிறுவனம்.!

கேரளாவுக்கு உதவ வேண்டாமென பதிவிட்ட நபர் ; வேலையைவிட்டு தூக்கிய ஓமன் நிறுவனம்.!

26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

கருணாநிதிக்கு ஓர் நியாயம்.. வாஜ்பாய்க்கு ஒரு நியாயமா - தமிழிசை ஆவேசம்.!

கருணாநிதிக்கு ஓர் நியாயம்.. வாஜ்பாய்க்கு ஒரு நியாயமா - தமிழிசை ஆவேசம்.!