ஜம்முவில் நடமாடிய 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: 1 ராணுவ வீரர் வீர மரணம்!

0shares
Image

ஜம்மு காஷ்மீர் வனப்பகுதியில் நடமாடிய இரண்டு பயங்கரவாதிகளை இந்தியா பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவமும், பயங்கரவாதிகளும் அத்துமீறி தாக்குதல் நடத்துவதும், அதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருவதும் வாடிக்கையான ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் பந்திப்போரா மாவட்டத்தில் அமைந்துள்ள பனார் வனப்பகுதில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் ஒரு ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார். இதனையடுத்து அப்பகுதியில் ஏராளமான பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
முல்லைத்தீவில் பதற்றம்: இராணுவமும் விசேட அதிரடிப்படையும் குவிப்பு!

முல்லைத்தீவில் பதற்றம்: இராணுவமும் விசேட அதிரடிப்படையும் குவிப்பு!

ரயில் விபத்தினை தடுத்து 2000 பயணிகளின் உயிர்காத்த சிறுமி.!

ரயில் விபத்தினை தடுத்து 2000 பயணிகளின் உயிர்காத்த சிறுமி.!

உலகிலேயே தமிழின் உறைவிடமாக மிளிரப்போகும் யாழ்ப்பாணம்!

உலகிலேயே தமிழின் உறைவிடமாக மிளிரப்போகும் யாழ்ப்பாணம்!