எடப்பாடி அரசுக்கு துணை நிற்கிறது பாஜக - டிடிவி தினகரன் விமர்சனம்.!

30shares

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியிலிருந்து மாற்றக்கோரி ஆளுநரிடம் மனு அளித்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர் தனபால். ஆனால், தங்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என நீதிமன்ற கதவை தட்டியது தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் குழாம்.

நெடு நாட்களாக நடைபெற்று வந்த மேற்கண்ட வழக்கு விசாரணையில் இன்று தீர்ப்பு வழங்கப்படுமென அறிவித்திருந்தது சென்னை உயர் நீதிமன்றம். அதன் படி, மேற்கண்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இரு நபர் அமர்வு வழங்கிய தீர்ப்பில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சபாநாயகர் முடிவுக்குள் தாம் தலையிட வேண்டுமெனவும், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என அவர் தெரிவித்தார். அதே சமயம், மற்றுமோர் நீதிபதியான சுந்தர், அதிமுக கொறடா எவ்வித உத்தரவும் பிறப்பிக்காத நிலையில் 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது தவறு எனவும் தீர்ப்பளித்தனர்.

இரு நீதிபதிகளும் வேறு வேறு கருத்துக்களை தெரிவித்தமையினால் மேற்கண்ட வழக்கு 3வது நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள டிடிவி தினகரன், "நியதிப்படி 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ததது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல ; மத்திய பாஜக அரசு எடப்பாடி அரசுக்கு துணை நிற்கிற காரணத்தினாலேயே நீதிமன்றங்கள் இவ்வாறான தீர்ப்பினை அளிக்கின்றன" என தெரிவித்துள்ளார்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
திருகோணமலையில் செல்ஃபி எடுத்தவர்களுக்கு நேர்ந்த கதி!

திருகோணமலையில் செல்ஃபி எடுத்தவர்களுக்கு நேர்ந்த கதி!

மன்னார் கழுதைகளுக்கு அடித்த யோகம்!

மன்னார் கழுதைகளுக்கு அடித்த யோகம்!

2000 வருடங்களுக்கு முன்னய கொம்பியூட்டர் கண்டுபிடிப்பு- வேற்றுக்கிகவாசிகள் பாவித்ததா?

2000 வருடங்களுக்கு முன்னய கொம்பியூட்டர் கண்டுபிடிப்பு- வேற்றுக்கிகவாசிகள் பாவித்ததா?