தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் என்ன வகையான துப்பாக்கி உபயோகிக்கப்பட்டது - நீதிமன்றம் கேள்வி.!

10shares

தூத்துக்குடியில் செயல்பட்டுவந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த மே மாத இறுதியில் 100 வது நாளாக போராட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் சுமார் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், ஏராளமானோர் காயமடைந்தனர்.

தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை கிளப்பிய மேற்கண்ட துப்பாக்கிச்சூடு விவகாரத்தினை சிபிஐ விசாரிக்க வேண்டுமென பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

இந்த சூழலில், துப்பாக்கிச்சூடு தொடர்பாக 15 வழக்குகளை இன்று விசாரித்தது உயர் நீதிமன்ற மதுரை கிளை. அப்போது, துப்பாக்கிச்சூட்டில் என்ன வகையான துப்பாக்கிகள் உபயோக படுத்தப்பட்டது?, துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றபோது ஆட்சியர் ஊரில் இல்லாமல் எங்கு சென்றார் என்பது உள்ளிட்ட பல கேள்விகளை அரசு தரப்பினை நோக்கி எழுப்பியுள்ளது நீதிமன்றம்.

இதையும் தவறாமல் படிங்க
சிங்கள மக்கள் மனங்களில் இடம்பிடித்த தமிழ் இளைஞர்கள்!

சிங்கள மக்கள் மனங்களில் இடம்பிடித்த தமிழ் இளைஞர்கள்!

மதுபோதையில் நடந்த கொடுரம்! 2 மகன், மனைவி துடிதுடித்துப் பலி..

மதுபோதையில் நடந்த கொடுரம்! 2 மகன், மனைவி துடிதுடித்துப் பலி..

இயற்கையாக மரணிக்கவில்லையா ஜெயலலிதா ; வெளியாகும் பகீர் உண்மைகள்.!

இயற்கையாக மரணிக்கவில்லையா ஜெயலலிதா ; வெளியாகும் பகீர் உண்மைகள்.!