விமானம் ஓட்டும் சாதனைத் தமிழ்ப் பெண்ணின் வியப்படையும் வாழ்க்கைக் கதை

174shares

மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்றான் தமிழ்ப்பழங்கவிஞன் ஒருவன். ஆம், பெண்மை போற்றுதலுக்குரியது.

ஆணுக்கு நிகரான - ஆண்களை விட அதிகளவிலான ஆற்றல்களை தன்னுள்ளே கொண்டுள்ள போதிலும், இங்குள்ள சமூக கற்பிதங்களின் காரணமாக தங்களது ஆற்றல்களை வீடுகளுக்குள்ளாகவே முடக்கிக்கொள்கின்றனர் பெரும்பாலான பெண்கள்.

ஆனால், ஒரு சிலரே எல்லா சிக்கல் மற்றும் தடைகளையும் கடந்து தங்களது லட்சியத்தினை அடைந்து இதர பெண்களுக்கும் முன்னுதாரணமாக உள்ளன.

அப்படியானதோர் சாதனைப்பெண்ணாக மிளிர்கிறார் மதுரை பழங்காநத்தம் பகுதியை சார்ந்த காவ்யா.

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியில் வசித்து வருபவர் ரவிக்குமார். அரசுப் பேருந்து ஓட்டுநரான இவருக்கு 2 மகள்கள்.

இதில் மூத்த மகள் காவ்யாவுக்கு பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே விமானத்தின் மீது அளவு கடந்த காதல்.

விமான ஓட்டியாக வானில் வலம் வர வேண்டும் என்று தன் மனதில் நிறுத்திய காவ்யா, அதை செயல்படுத்தும் திட்டத்தை கையில் எடுத்தார்.

மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த காவ்யா, கர்நாடக மாநிலம் ஜக்கூரில் உள்ள மத்திய அரசின் விமான பயிற்சி மையத்தில் சேர்ந்தார்.

அரசின் உதவித் தொகையோடு விமான பயிற்சியை தொடங்கிய காவ்யா, முழு கவனத்தையும் அதில் செலுத்தினார்.

இரண்டரை ஆண்டு பயிற்சிக்கு பிறகு 200 மணி நேரம் வானத்தில் பறந்து தன் இலக்கை எட்டினார். தற்போது விமானியாவதற்கான உரிமத்தையும் மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளார் இந்த சாதனைப் பெண்.

நடுத்தர குடும்பத்தில் பிறந்த உனக்கு எதற்கு இந்த வீண் கனவு? என ஏளனம் பேசியவர்கள் எல்லாம் இன்று காவ்யாவை நிமிர்ந்து பார்க்கிறார்கள்.

விடா முயற்சியும் கடின உழைப்பும் இருந்தால் எதுவும் சாத்தியம் ஆகும் என்பதற்கு விமானியான காவ்யாவும் ஒரு உதாரணமே.

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மக்களுக்கு செக் வைத்த இராணுவம்; என்ன செய்யப்போகிறார்கள் ஈழத்தமிழர்கள்?!

யாழ் மக்களுக்கு செக் வைத்த இராணுவம்; என்ன செய்யப்போகிறார்கள் ஈழத்தமிழர்கள்?!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை கதறக் கதற படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை கதறக் கதற படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

வவுனியாவில் காட்டுக்குள் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி; ஊரே சோகத்தில்!

வவுனியாவில் காட்டுக்குள் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி; ஊரே சோகத்தில்!