இன்று அறிமுகப்படுத்தப்படும் சட்ட திருத்த மசோதாவிற்கு ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு!

13shares
Image

தகவல் அறியும் சட்டமான ஆர்.டி.ஐ சட்டத்தில் திருத்தம் செய்யப்படுவதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சமுக வலைத்தளமான டுவிட்டரிலேயே ராகுல் காந்தி எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.

தகவல் பெறும் உரிமைச்சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

அதனடிப்படையில் மாநிலங்களவையில், இந்த சட்ட திருத்த மசோதா இன்று, அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

தலைமை தகவல் ஆணையர், இதர ஆணையர்கள், மாநில தகவல் ஆணையர்கள் உள்ளிட்டோரின் சம்பளம் மற்றும் பணி தொடர்பான விதிமுறைகள், 2005 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இடம்பெறவில்லை.

எனவே, அந்த விதிமுறைகளை உருவாக்குவதற்காக குறித்த சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான முன்மொழிவை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

ஆர்.டி.ஐ சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்யும் திட்டம் தொடர்பாக மாநிலங்களவையில் அறிவித்தலும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மத்திய அரசு முன்மொழிந்துள்ள தகவல் ஆணைய சட்ட திருத்த வரைவுக்கு ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு இந்தியனும் உண்மையை தெரிந்து கொள்ள நினைக்கும் வேளையில், பாரதிய ஜனதா கட்சி உண்மைகளை மறைக்க வேண்டும் என நினைக்கிறது.

அத்தோடு தகவல் பெறும் உரிமைச்சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள், அச்சட்டத்தை பயனற்ற சட்டமாக்கும் என ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தகவல் பெறும் உரிமைச்சட்டத்தை நீர்த்து போகச்செய்யும் எந்த ஒரு திருத்தத்தையும் தாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்