மோடியை கட்டிப்பிடித்த ராகுல்.. நடந்தது என்ன?

23shares

மக்களவையில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மீது நம்பிக்கையில்லா தீர்மானமானது எதிர்கட்சிகளால் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பானது இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

முன்னதாக, பாஜக அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தற்போது நடைபெற்றுவரக்கூடிய சூழலில், மக்களவையில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல், மத்திய பாஜக அரசு மீதும், பிரதமர் மோடி மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பேசினார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது, தேர்தலில் வெற்றிபெற்றால் ஒவ்வொரு வாக்காளருக்கும் அளிப்பதாக தெரிவித்த ரூ. 15 லட்சம் எங்கே என கேள்வியெழுப்பிய ராகுல், நான் பிரதமரில்லை, பிரதம சேவகன் என்று கூறி அரியணை ஏறிய மோடி, நாட்டு மக்களுக்காக உழைக்கவில்லை, நாட்டிலுள்ள குறிப்பிட்ட சில தொழிலதிபர்களுக்காக உழைக்கிறார் என்று கடுமையாக விமர்சித்தார் ராகுல்.

மேலும், பொய்களின் மொத்த உருவமே அமித்ஷாவும் - மோடியும் தான் என விளாசிய ராகுல், தான் கடுமையாக விமர்சித்த மோடியை கட்டித்தழுவினார்.

அரசியல் ரீதியிலான விமர்சனங்களை முன் வைத்தாலும், தனி நபர்கள் இடையேயான உறவினை பேணுதல் பண்பட்ட அணுகுமுறை என ராகுலின் செயற்பாட்டை வரவேற்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

இதையும் தவறாமல் படிங்க
திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!