காத்திரமான தலைவராக வெளிப்பட்டிருக்கிறார் ராகுல் ; கலக்கத்தில் மோடி.!

53shares

பப்பு, பேபி என இந்துத்துவ மற்றும் பாஜக தலைவர்களால் விமர்சிக்கப்பட்டுவந்த காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் வைத்து பாஜக அரசையும் - மோடியையும் கேள்விக்கணைகளால் விளாசியுள்ளார். ஆம், ராகுலின் பேச்சைக்கேட்ட பாஜகவினரும், பிரதமர் மோடியும் கலங்கித்தான் போயுள்ளனர் என்பதுதான் உண்மை.

வளர்ச்சி முழக்கத்தினை முன் வைத்து கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான பாஜக, அதற்கு பிறகு முன்னெடுத்த செயற்பாடுகள் யாரும் அவர் தேர்தல் நேரத்தில் முன் வைத்த வாதங்களுக்கு ஒத்ததாக இல்லை. தான் பிரதமராக அல்லாமல் - பிரதம சேவகனாக இருப்பேன் என்றவர், கார்ப்பரேட் பெருநிறுவனங்களுக்கு விளம்பர மாடல் போன்று செயல்பட்டுவந்தார்.

மத ரீதியிலான மோதல் போக்குகளை தூண்டிவிடும் இந்துத்துவ சக்திகளை கண்டிக்கவோ, அவர்களை கட்டுப்படுத்திடவோ துளியளவும் முனைந்திடவில்லை மோடி. ஜிஎஸ்டி, டீமானிஸ்டேஷன் என அவர் முன்னெடுத்த திட்டங்களால் எளிய மக்கள் அடைந்த இன்னல்கள் ஏராளம்.. ஏராளம்.

தேசம் இந்த நிலையில் சென்றுகொண்டிருந்தால் என்னாவது என கவலைக்குள்ளாகும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயலாற்றிட வேண்டிய இந்த நேரத்தில், நேற்றைய தினம் மோடி அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையின்மை தீர்மானத்தின் மீது பேசிய ராகுல் ஒட்டு மொத்த இந்திய மக்களின் உணர்வுகளை பிரதிபலித்துள்ளதுடன், தான் பப்பு இல்லை சூறாவளி என்பதனையும் பதிவு செய்துள்ளார்.

பாஜக அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது பேசிய ராகுல், வளர்ச்சி முழுக்கத்தினை முன் வைத்து ஆட்சிக்கு வந்த மோடி இதுவரை கொண்டுவந்த வளர்ச்சி என்ன என துவங்கி மோடி அரசின் பொய், பித்தலாட்டங்கள் அனைத்தையும் கிழித்தெறிந்துள்ளார். மோடியின் கார்ப்பரேட் ஆதரவு நிலை, பொய் வாக்குறுதிகள் என எல்லாவற்றையும் விவரித்த ராகுல், தாங்கள் அதிகாரத்தினை இழந்த மறுநாளே தண்டிக்கப்படுவீர்கள் என வெளிப்படையான எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

காத்திரமானதோர் தலைமை பண்பினையும், தனி நபர் உடனான பழகும் பண்பாட்டினையும் கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ள ராகுலின் பின்னே எதிர்க்கட்சிகள் அணி திரளுமேயானால் நிச்சயம் மோடி அரசு கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாவதுடன், அதன் பொய் பிம்பங்கள் வெளிப்படும் என்பதுவே மக்களின் கருத்தாக உள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

காட்டுக்குள் சென்றவர் கண்ட பயங்கரக் காட்சி! ஊர் மக்கள் பதறல்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சாந்தன் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!