தமிழ் மண்ணின் பெருமைமிகு அடையாளம் மக்களிசை - செந்தில் கணேஷ், ராஜலட்சுமி பேட்டி.!

26shares

தமிழ் மண்ணின் பெருமை மிக்கதோர் அடையாளங்களுள் ஒன்றான நாட்டுப்புறப்பாடல் - மக்களிசையை நோக்கி உலகத்தின் பார்வையை மீண்டும் திருப்பியுள்ளது செந்தில் கணேஷ், ராஜலட்சுமி தம்பதி.

ஆம், மாறிவரும் நவீன உலகத்தினில் தொண்மைசார் விழுமியங்கள் அதிக கவனக்குவிப்பினை ஏற்படுத்துவதில்லை என்றே கூறலாம். உணவு, உடை உள்ளிட்ட எல்லாவற்றிலும் மேலைநாட்டு கலாச்சார பேய் நம்மை பிடித்து ஆட்டிவரக்கூடிய சூழலில், தமிழகத்தின் சிற்றூர்களில் உழைத்த களைப்பு நீங்க, குழந்தையின் அழுகையினை நிறுத்த, காதலுனுக்கு, கணவனுக்கு, மனைவிக்கு தனது குறிப்புகளை, உணர்வுகளை வெளிப்படுத்த பாடப்படக்கூடிய மக்களிசையை கொண்டு கர்நாடக சங்கீதம் கற்றவர்களுடன் போட்டியிட்டு விஜய் தொலைக்காட்சி நடத்தும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் முதல் பரிசினை வென்றுகாட்டியிருக்கிறார் செந்தில். அவருக்கு எப்போதும் ஊக்கமாக இருந்துவருவதுடன் முன்னோக்கி உந்தித்தள்ளும் சக்தியாகவும் உள்ளார் ராஜலட்சுமி.

ஆம், மக்களிசை என்பது தாயினுக்கும் பிள்ளைக்கும் இடையே உள்ள பிரிக்க இயலாத உணர்வினை - உறவினைப் போன்றது. அப்படியான பாடல்களின் வழியே சமூகம் சார்ந்த கருத்துக்களை தெரிவிப்பது உன்னதமானது, இவை இரண்டையும் அபரிமிதமாக நிகழ்த்திக்காட்டியிருக்கிறது செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி தம்பதி.

நேர்காணலுக்காக நமது அலுவலகத்திற்கு வந்த செந்திலை கணேஷ் தம்பதியிடம் சில கேள்விகளை முன் வைத்த போது, "தொன்மை சார்ந்த நம் மக்கள் இசையை பாடிய எங்களுக்கு ஆதரவளித்த தமிழர்களுக்கு நன்றி. மக்களிசை கலைஞர்கள் மட்டுமல்ல ; தமிழகத்தில் விவசாயத்தினை, நெசவுத்தொழிலை இன்னும் எண்ணற்ற உழைப்புசார் தொழில் செய்து வாழும் மக்கள் வாழ்வில் முன்னேறிட வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை" என்று கூறி அசரடித்தனர்.

மக்களிசையை உரத்து ஒலிக்கும் செந்தில் கணேஷ் தம்பதி இன்னும், இன்னும் எண்ணற்ற உயரங்களை எட்டிப்பிடிக்க வாழ்த்துக்கள்.

இதையும் தவறாமல் படிங்க
யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்