ராஜாஜி ஹாலில் ஸ்டாலினின் ரௌத்திரம்.. மிரட்சியில் எடப்பாடி - ஓபிஎஸ் - எக்ஸ்குளூசிவ் ரிப்போர்ட்.!

20shares

கடந்த 7 ஆம் தேதி உடல்நலக்குறைவின் காரணமாக காலமான திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதியின் உடலை சென்னை, மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய இடமளிக்க வேண்டும் என்பது அக்கட்சியினரின் சார்பில், பொதுமக்களின் சார்பிலும் வைக்கப்பட்ட முக்கியமானதோர் கோரிக்கை.

நீண்ட பொதுவாழ்வுக்கு சொந்தக்காரர், ஐந்து முறை தமிழக முதல்வர், தமிழுக்கு, தமிழகத்திற்கு அதிகப்படியான பங்களிப்பினை செய்தவர் என்ற அடிப்படையிலேயே மெரினாவில் இடம் கோரப்பட்டது. முதலில் கட்சியின் முன்னணியினர் சார்பிலும் பின்பு கலைஞரின் குடும்பத்தினர் சார்பிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இந்த கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால், மேற்கண்ட கோரிக்கையினை கிஞ்சித்தும் கேளாமல் மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது என அறிவித்தது அரசு. இது நடுநிலையாளர்கள், பொதுமக்களையும் கூட கொந்தளிக்க செய்த நிலையில் கலைஞருக்கு மெரினாவில் இடமளிக்க வேண்டும் ராகுல் காந்தி தொடங்கி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரிசையாக அறிக்கை விட துவங்கினர்.

அதே சமயம், நீதிபதிகள் குலுவாடி ரமேஷ், சுந்தர் ஆகியோர் மெரினாவில் இடமளிப்பது தொடர்பான வழக்கினை விசாரித்து இடமளிக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.

மேற்கண்ட உத்தரவு திமுகவினரை சற்று ஆசுவப்படுத்தினாலும் ஸ்டாலின் உள்ளிட்ட முன்னணியினர் கொதிப்புடனேயே இருந்துள்ளனர். கலைஞர் மறைவு ஒருபுறமும், மெரினாவில் அடக்கம் செய்ய முடியுமா என்ற தவிப்பு ஒருபுறமும் ஸ்டாலினை நெருக்கிய நிலையில், தான் அத்துணை முறை தார்மீக அடிப்படையில் அனுமதி கோரிய போதிலும் மத்திய - மாநில அரசுகள் இப்படி நடந்துகொண்டது அவரின் ஆதங்கத்தை கிளறியிருந்தது.

இந்த நிலையில், 8 ஆம் தேதி காலை கலைஞரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோரை ரௌத்திரத்துடனேயே எதிர்கொண்ட ஸ்டாலின் "எல்லாத்துக்கும் சேத்து அனுபவிப்பீங்க" என கொந்தளித்திருக்கிறார்.

இதனை எதிர்பாராத இபிஸ் - ஓபிஎஸ் அமைதியாக அங்கிருந்து கிளம்பிவிட்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போதும் அவர்களின் முகம் மிரட்சியுடனேயே காணப்பட்டது.

மேற்கண்ட தகவல்கள் யாவும் திமுக முன்னணி நிர்வாகிங்கள் நம்மிடம் தெரிவித்தவை. ஆக, இனி அரசுக்கு எதிராக திமுகவின் அதிரடிகள் தொடரும் என தெரிகிறது.

இதையும் தவறாமல் படிங்க
'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்!'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி!!

'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்!'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி!!

மட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா?- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்!!

மட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா?- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்!!

கணவனை பாய்ந்து பாய்ந்து பந்தாடிய மனைவி; முல்லைத்தீவில் அதிர்ச்சி!

கணவனை பாய்ந்து பாய்ந்து பந்தாடிய மனைவி; முல்லைத்தீவில் அதிர்ச்சி!