ஏழு தமிழர் விடுதலை விவகாரம் ; இன்று கூடுகிறது அமைச்சரவை.!

24shares
Image

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நெடுங்காலமாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசே முடிவெடுக்கலாம் என கடந்த 6 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. அது தொடர்பாக விவாதிக்க இன்று மாலை தமிழக அமைச்சரவை கூடவுள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை செய்யக்கூடாது என மத்திய அரசு 2014 ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த 6 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது, அதில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு தெரிவித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக முடிவெடுத்து தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் எனவும் உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று மாலை தமிழக அமைச்சரவை கூடவிருக்கிறது. இந்த கூட்டத்தில் 7 பேரின் விடுதலை குறித்து ஆலோசித்து தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு பரிந்துரைக்கப்படலாம் என தெரிகிறது.

முன்னதாக, ராஜீவ் கொலையாளிகளை விடுவிப்பது ஏற்புடைய செயலே அல்ல என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!