குமரி ஆனந்தனுக்கு பிறந்த மகளா நீங்கள்? தமிழிசையை விளாசிய வேல்முருகன்.!

56shares
Image

மத்தியில் ஆட்சியிலுள்ள பாஜக அரசு மற்றும் மாநில எடப்பாடி அரசு ஆகியவற்றின் மக்கள் விரோத செயற்பாடுகளை தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வந்த மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உ.பா சட்டம் பாய்ச்சப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மத்திய அரசின் அழுத்தத்தின் காரணமாகவே அவர் மீது இந்த சட்டம் பாய்ச்சப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்றைய தினம் திருமுருகன் காந்தி கைதினை கண்டித்து சென்னையில் அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக சக்திகள் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கலந்துகொண்டார்.

நிகழ்வில் பேசிய அவர், தமிழகத்தின் மீது திணிக்கப்படும் மக்கள் விரோத செயற்பாடுகளை வெளிப்படுத்தினால் நாங்கள் தேச விரோதிகளா, உள்ளாட்சி அளவில் கூட ஒரு வார்டு உறுப்பினராக வெல்ல முடியாத பாசிச பாஜகவினர் இந்த மண்ணிலே எத்தனை அப்பட்டமான உரிமை மீறல்களை நிகழ்த்திவருகிறார்கள். இப்போது சொல்கிறேன் எங்கள் மண்ணில் உங்களை கணக்கு தீர்க்கும் காலம் விரைவில் வரப்போகிறது என ஆவேசமாக பேசினார்.

மேலும், இலக்கிய செல்வர் குமரி அனந்தனுக்கு பிறந்த மகளா நீங்கள்? அவர் பிள்ளை என்ற காரணத்தினால் தான் தமிழ்நாட்டில் நீங்கள் இன்னும் நடமாடி வருகிறீர்கள் எனவும் காட்டமாக விமர்சித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்