ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க கூடாது - புதுவை முதல்வர் நாராயணசாமி.!

108shares
Image

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நெடுங்காலமாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்து மாநில ஆளுநருக்கு பரிந்துரைக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளமை இந்திய அரசியல் களத்தில் பலத்த அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.

நெடுங்காலமாக சிறைவாசம் அனுபவித்துவருகிற பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோமென தமிழக அரசு தரப்பு தெரிவித்திருந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியிலிருந்து அதிருப்தி குரல்கள் வரிசையாக கிளம்ப துவங்கியுள்ளது.

கருணை அடிப்படையில் தேசத்தின் தலைமைப்பொறுப்பினை வகித்த ராஜீவை கொன்றவர்களை விடுவிப்பதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என அதிருப்தியை வெளியிட்டுள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும், புதுவை மாநில முதல்வருமான நாராயணசாமி.

முன்னதாக, ராஜீவ் கொலையாளிகளை விடுவிப்பது குறித்து முடிவெடுக்க இன்று தமிழக அமைச்சரவை கூடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

திருகோணமலையில் இறந்த விரிவுரையாளர் வாழ்க்கையில் விரக்தியுற்று இருந்தாரா!!? இறுதிக்கவிதை சொல்லவருவது என்ன??

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

வன்னியூர் செந்தூரனின் மனைவியின் மரணத்துக்கான காரணம் என்ன?; வெளியானது உண்மை!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!