28 ஆண்டு கால காத்திருப்புக்கு பின் கிடைத்த ஆசுவாசம் - அற்புதம்மாள் நெகிழ்ச்சி.!

48shares
Image

பேரறிவாளன் உள்ளிட்ட ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எழுவரை விடுவிப்பது குறித்த முடிவினை மாநில அரசே எடுத்து ஆளுநருக்கு பரிந்துரைக்கலாம் என உச்ச நீதிமன்ற உத்தரவினை தொடர்ந்து மேற்கண்ட எழுவரை விடுவிக்கலாமென மாநில ஆளுநருக்கு நேற்றைய தினம் பரிந்துரை செய்தது தமிழக அமைச்சரவை.

தமிழக அமைச்சரவையின் பரிந்துரையினை அடுத்து ஆளுநர் என்ன மாதிரியான முடிவினை மேற்கொள்ளப்போகிறாரென தமிழகம் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கிற சூழலில், நேற்றைய தினம் மாலை முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள்.

சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், " சுமார் 28 ஆண்டுகால காத்திருப்புக்கு பின்னர் எங்களுக்கு கிடைத்த ஆசுவாசம் இது. இந்த முடிவினை மேற்கொண்ட தமிழக அரசுக்கு நன்றி. மேலும், பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க பாடுபட்ட அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்" என நெகிழ்சியாக பேசினார்.

இதையும் தவறாமல் படிங்க
வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!