7 பேர் விடுதலைக்கான பரிந்துரையை ஆளுநர் நிராகரிப்பார் - சர்ச்சையை கிளப்பும் சு.சாமி.!

43shares
Image

ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட எழுவரை விடுவிப்பது குறித்த முடிவினை மாநில அரசே எடுத்து ஆளுநருக்கு பரிந்துரைக்கலாம் என உச்ச நீதிமன்ற உத்தரவினை தொடர்ந்து மேற்கண்ட எழுவரை விடுவிக்கலாமென மாநில ஆளுநருக்கு நேற்றைய தினம் பரிந்துரை செய்தது தமிழக அமைச்சரவை.

தமிழக அமைச்சரவையின் பரிந்துரையினை அடுத்து ஆளுநர் என்ன மாதிரியான முடிவினை மேற்கொள்ளப்போகிறாரென தமிழகம் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கிற சூழலில், ராஜீவ் கொலையாளிகளை விடுவிப்பது குறித்த பரிந்துரையை ஆளுநர் நிராகரிப்பார் என அதிரடி கிளப்பியுள்ளார் பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணிய சாமி.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரத்தில் அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரிப்பார். ஆளுநரை இத்தகைய முடிவினைதான் மேற்கொள்ள வேண்டுமென எவரும் நிர்பந்திக்க முடியாதெனவும் அதிரடி காட்டியுள்ளார் சு.சாமி.

முன்னதாக, ராஜீவ் கொலையாளிகளை விடுவிப்பது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடுமென புதுவை முதல்வர் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!