பாரத் பந்த் ; மோடி ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் இது - மன்மோகன் காட்டம்.!

16shares
Image

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது ரூ.84ஐ நெருங்கி விட்ட பெட்ரோல் விலை விரைவில் ரூ.90ஐ தொடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பெட்ரோல் - டீசல் விலையுயர்வினை எதிர்த்து இன்று நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது.

காங்கிரஸ் கட்சியின் பாரத் பந்த் அழைப்பிற்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. சுமார் 60% அதிகமான பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இந்த நிலையில், டெல்லியில் காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்றுவரக்கூடிய போராட்டத்தில் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

போராட்டத்தில் பேசிய மன்மோகன் பிரதமர் மோடியையும், பாஜகவையும் மிக கடுமையாக சாடினார். "அனைத்து கட்சிகளும் தங்களுக்கு இடையே இருக்கும் வேறுபாடுகளை தள்ளி வைத்துவிட்டு தற்போதைய அரசுக்கு எதிராக போரிட வேண்டும். தற்போது அனைத்து கட்சியினரும் ஒன்றுசேர்ந்து இருப்பது முக்கியமான ஒன்று. இந்த சக்தியை மோடி அரசை தூக்கி எறிய பயன்படுத்த வேண்டும்.

பொதுமக்கள் கோபமடைந்தும், சோர்வடைந்தும் உள்ளனர். உழவர்கள் வருத்ததில் இருக்கின்றனர். இளைஞர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். மோடி அரசு அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

தற்போதைய நிலவரம் சூழ்நிலை கைமீறி போய்விட்டதை காட்டுகிறது. தொழிலதிபர்கள், விவசாயிகள், இளைஞர்கள் அவர்களின் துறையில் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். மத்தியில் ஆட்சி மாற்றம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. அது விரைவில் நடக்கும். நாட்டின் ஒருமைப்பாட்டை காப்பாற்ற வேண்டும். நமது ஒற்றுமையை அவர்களுக்கு காட்ட வேண்டும்" என காட்டமாக பேசினார்.

இதையும் தவறாமல் படிங்க
வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை என்ன?!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!

தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கற்பிணிப் பொலிஸ் அதிகாரியின் கொடூரம்!