முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சிங்கள ஊடகவியலாளர்கள் போர்க்கொடி; அமைச்சரவைப் பேச்சாளரின் அதிரடி பதில்!

16shares
Image

தமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் கொடூரத்தை நினைவுகூறுவதற்கு தமது எதிர்ப்பை பதிவுசெய்வதற்கான மேடையாக இன்றைய (16.05.2018) தினம் காலை கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பை தென்பகுதி சிங்கள ஊடகவியலாளர்கள் பயன்படுத்திக் கொண்டுள்ளதாக அறியமுடிகிறது.

சர்வதேச ரீதியாக தடை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளை நினைவுகூறுவது உட்பட சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள யுத்தத்தின் போது அப்பாவித் தமிழ் மக்களும் கொல்லப்பட்டதை நிராகரிக்குமாறும் சிங்கள ஊடகவியலாளர்கள் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளருக்கு கடும் அழுத்தங்களை பிரயோகித்தனர்.

எனினும் சிங்கள ஊடகவியலாளர்களின் கோரிக்கைகளை நிராகரித்த ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன, யுத்தத்தின் போது கொல்லப்பட்டவர்களை நினைவுகூறுவதற்கு அனைவருக்கும் உரிமை இருப்பதாக பகிரங்கமாக ஏற்றுக்கொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள ஊடகவியலாளர்களுக்கும் அமைச்சரவைப் பேச்சாளருக்கும் இடையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் இடம்பெற்ற இந்த விவாதம் இவ்வாறு அமைந்திருந்தது.,

இனப்படுகொலை வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் வடக்கில் போரில் உயிர்நீத்தவர்களை உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பாக இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் ஊடகவியலாளர்கள் பல கோணங்களில் கேள்விக் கணைகளைத் தொடுத்தனர்.

ஊடகவியலாளர் - ‘மே 18ஆம் திகதியை இனப்படுகொலை தினமாக அறிவிக்குமாறு வடமாகாண சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருப்பது தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு எனன் என்பது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

ராஜித சேனாரத்ன (அமைச்சரவை பேச்சாளர்) - பிரச்சினையில்லை. இவ்வளவு காலமாக ஜே.வி.பியினர், மாவீரர்களின் தினத்தை அனுஷ்டித்து வந்தனர். இரண்டு விதமான அனுஷ்டிப்புக்களை அவர்கள் நடத்திவருகின்றனர். தமிழ் மக்கள் உயிரிழந்தார்கள் என்பதா உங்களது பிரச்சினை? சிங்கள மக்கள் உயிரிழந்தது பற்றி பிரச்சினையில்லையா? வடக்கில் உயிரிழந்தவர்கள் தமிழ்நாட்டில் இருப்பவர்களா? இல்லை. எமது மக்களே பலியானார்கள். இங்கும் பிள்ளைகள் உயிரிழந்தார்கள். அங்கும் பிள்ளைகள் மரணித்தார்கள். உள்ளகப் பிரச்சினை இது. சிவில் யுத்தமே தவிர, வெளிநாட்டு ஆக்கிரமிப்பு மோதல் இடம்பெறவில்லை. ஆனால் வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளரை தோற்கடித்த வகையில் காண்பிக்க முயற்சிக்கிறார்கள்.

ஊடகவியலாளர் - தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது பயங்கரவாத அமைப்பு என்று சர்வதேசமே பெயரிட்டிருக்கிறதே?

ராஜித சேனாரத்ன (அமைச்சரவை பேச்சாளர்) - ‘அன்று ஜே.வி.பி அமைப்பு எவ்வாறு இருந்தது? ஜே.வி.பியும் பயங்கரவாத அமைப்பு என்று தடைசெய்யப்பட்டிருந்தது. தடை செய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்தவர்களே உயிரிழந்தவர்களை நினைவுகூருகின்றனர். எமக்கு ஆயுததாரிகள் என்றாலும் வடபகுதி மக்களுக்கு அவர்கள் அம்மா, அப்பா, சகோதரர்கள், சகோதரிகள், பிள்ளைகளாவர். ஜே.வி.பியினருக்கு அனுஷ்டிப்பு நடத்த ஏன் அனுமதியளித்தீர்கள் என்று நீங்கள் முன்னரே கேட்டிருந்தால் அதற்கு நியாயமான பதிலை அளித்திருப்பேன்”

ஊடகவியலாளர் - மே 18ஆம் திகதி ஆயுதப்போர் முடிவுறுத்தப்பட்ட போது ஒவ்வொரு வீடுகளிலும் விளக்கு ஏற்றி இராணுவத்தினம் கொண்டாடப்பட்டது. காலி முகத்திடலில் மிகப்பெரிய விழா முன்னெடுக்கப்பட்டது. ஆனால் இன்று அது நிறுத்தப்பட்ட நிலையில் வடக்கில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதால் நாங்கள் எதனை செய்ய வேண்டும்?

ராஜித சேனாரத்ன (அமைச்சரவை பேச்சாளர்) - தெற்கில் கொண்டாடுவதன் மூலம் என்ன செய்தார்கள்? இராணுவத்தினரால் பலியானவர்கள் யார், எமது பிள்ளைகள் தானே. அதன்படிதான் ஐக்கியம் என்ற பெயரில் அதனை கொண்டாடாமல் நிறுத்தினோம்.

ஊடகவியலாளர் - அமைச்சரே இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டது ஆயுததாரிகள்தானே.

ராஜித சேனாரத்ன (அமைச்சரவை பேச்சாளர்) - ஆயுததாரிகள் மட்டுமா கொலை செய்யப்பட்டார்கள்?

ஊடகவியலாளர் - அமைச்சரே வேறு தரப்பினரும் கொலை செய்யப்பட்டார்கள் என்றா நீங்கள் கூறுகிறீர்கள்?

ராஜித சேனாரத்ன (அமைச்சரவை பேச்சாளர்) - மிகத்தெளிவாக, போர் ஒன்றில் எவ்வாறு அப்படி கொலை செய்யப்படுவார்கள்? நான் அல்ல, அனைவரும் அறிவார்கள். 79-களிலும், 88-களிலும் ஜே.வி.பி வன்செயலில் கொலை செய்யப்பட்டது அனைவரும் வன்முறையில் ஈடுபட்டவர்களா? அவர்கள் சிங்களவர்கள், இவர்கள் தமிழர்கள் என்பதாலா? விஜேவீரவுக்கும், விடுதலைப் புலிகளின் தலைவருக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை கூறமுடியுமா? எந்த படைகள் வந்தாலும், ஸ்ரீலங்கா இராணுவத்திலுள்ள எந்தவொரு சிப்பாயும் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்வார்கள். கேள்வி கேட்கின்ற உங்களுக்கு மூளை இருக்கிறது தானே? இராணுவத்தினரால் உங்களுக்கு மூளையை கொடுக்க இயலாது. உலகில் ஒரு போரில் அப்பாவி மக்கள் கொலைசெய்யப்படாத சந்தர்ப்பம் இருக்கிறதா?

ஊடகவியலாளர் - சர்வதேச மட்டத்தில் ஸ்ரீலங்கா படையினருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்ற நிலையில் உங்களது கருத்து தாக்கத்தை ஏற்படுத்தும் அல்லவா?

ராஜித சேனாரத்ன (அமைச்சரவை பேச்சாளர்) - நாங்கள் வேண்டும் என்றே மக்களை கடத்திச்சென்றோம் என்ற குற்றச்சாட்டே சர்வதேச மட்டத்தில் காணப்படுகிறது. போரின்போது மக்களும் கொலை செய்யப்படுவார்கள். இன்று சிரியாவில் ஐ.எஸ். ஆயுததாரிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படுகையில் உயிரிழக்கும் அனைவரும் ஆயுததாரிகளா? சர்வதேசத்திற்குச் சென்று சரியான முறையில் தெளிவுபடுத்தினால் எந்தக் குழப்பமும் இருக்காது. மஹிந்த ராஜபக்ச சென்று ரைம்ஸ் ஊடகத்திற்கு என்ன சொன்னார்? ஆயுததாரிகளே தவிர வேறு எவரும் கொல்லப்படவில்லை என்று என கூறி அவர் சிங்கள ஊடகவியலாளர்களின் வாயையடைத்ததாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
கறுப்பு யூலை தடங்கள்…..  முகாமில் மௌனமாகிய பிரபாகரனும்! ஒருவரை ஒருவர் பார்த்த கிட்டுவும் பண்டிதரும்.

கறுப்பு யூலை தடங்கள்….. முகாமில் மௌனமாகிய பிரபாகரனும்! ஒருவரை ஒருவர் பார்த்த கிட்டுவும் பண்டிதரும்.

தங்கப்புதையல் கப்பல் கண்டுபிடிப்பு! 5,500 பெட்டிகளில் 200 தொன் தங்கம்!!

தங்கப்புதையல் கப்பல் கண்டுபிடிப்பு! 5,500 பெட்டிகளில் 200 தொன் தங்கம்!!

இயற்கையாக மரணிக்கவில்லையா ஜெயலலிதா ; வெளியாகும் பகீர் உண்மைகள்.!

இயற்கையாக மரணிக்கவில்லையா ஜெயலலிதா ; வெளியாகும் பகீர் உண்மைகள்.!