75 பேருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை; அதிர்ச்சியில் உலக மக்கள்!

34shares

எகிப்து நாட்டில் கலவரத்தில் ஈடுபட்ட 75 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

எகிப்து நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக அதிபராகவும், ராணுவ ஆட்சியாளராகவும் இருந்த ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சி கடந்த 2011-ம் ஆண்டு வீழ்ச்சியடைந்தது.

இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் முகமது மோர்ஸி அதிபரானார். அதோடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் என்ற பெருமையினையும் பெற்றார்.

ஆனால் அவரது ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களில் சிலர் போராட்டம் நடத்த ஆரம்பித்தனர். இதனால் அவரது ஆட்சி கலைக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மோர்ஸி கட்சி தொண்டர்கள் கலவரத்தை கையில் எடுத்தனர். இதனால் ராணுவத்தினருக்கும், கலவரக்காரர்களை இடையே நடைபெற்ற மோதலில் 600 பேர் கொல்லப்பட்டனர். இதனை விசாரித்த நீதிமன்றம் கலவரத்தில் ஈடுபட்ட ஆயிரம் பேருக்கு பல்வேறு தண்டனைகளை வழங்கியது.

ஆனால் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் தற்போது, குற்ற செயல்களில் ஈடுபட்ட 75 பேருக்கு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பினை வெளியிட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!