போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முள்ளிவாய்க்காலில் உருவாகும் வீடுகள்

231shares

போரினால் பாதிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் மேற்கினை சேர்ந்த 25 குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் நடைபெற்றுள்ளது.

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் 2018ஆம் ஆண்டுக்கான மாதிரி கிராம வேலைத்திட்ட தொடக்க நிகழ்வாக இந்த 25 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் புள்ளிவிபரங்களின் ஊடாக வீட்டினை பெற்றுக்கொள்ள முடியாத குறைந்த புள்ளிகளை பெற்றவர்களுக்கும், இந்த வீட்டிற்கு விருப்பம் தெரிவித்தவர்களுக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 ஆவது இடமாக உள்ள முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் வீடுகள் அமைக்கப்பட உள்ளன.

இதற்கு தலா 5 இலட்சம் ரூபா செலவில், 25 வீடுகளை அமைத்துக்கொடுக்க தேசிய வீடமைப்பு அதிகார சபை முன்வந்துள்ளது.

தனிமையில் வாழும் வயோதிபர்கள், இளம் குடும்பங்கள் என பலதரப்பட்டவர்கள் இந்த வீட்டுத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.

இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் முகாமையாளர் விஜிதகமகே, கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் இ.பிரதாபன் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் பிரதேசசபை உறுப்பினர் பூலோகராசா, கிராம அலுவலகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வீட்டிற்கான அடிக்கல்லினை நாட்டி வைத்துள்ளதுடன் கருத்துரைகளையும் நிகழ்த்தியுள்ளனர்

இதையும் தவறாமல் படிங்க
கேரளாவுக்கு உதவ வேண்டாமென பதிவிட்ட நபர் ; வேலையைவிட்டு தூக்கிய ஓமன் நிறுவனம்.!

கேரளாவுக்கு உதவ வேண்டாமென பதிவிட்ட நபர் ; வேலையைவிட்டு தூக்கிய ஓமன் நிறுவனம்.!

26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

கருணாநிதிக்கு ஓர் நியாயம்.. வாஜ்பாய்க்கு ஒரு நியாயமா - தமிழிசை ஆவேசம்.!

கருணாநிதிக்கு ஓர் நியாயம்.. வாஜ்பாய்க்கு ஒரு நியாயமா - தமிழிசை ஆவேசம்.!