மஹிந்த ராஜபக்சவின் சிங்கள பௌத்த பேரினவாதக் கொள்கையை பின்பற்றும் மைத்திரி!

7shares
Image

ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ச கடைபிடித்த மிகவும் மோசமான சிங்கள பௌத்த பேரினவாதக் கொள்கையையே பின்பற்றுவதாக தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்றுவதற்கு முன்னின்று உழைத்த இடதுசாரிக் கட்சியின் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனால் நாட்டில் மீண்டும் மோதல்கள் தீவிரமடைவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சுயநிர்ணய உரிமை, சுயாட்சி, சம அந்தஸ்த்து ஆகிய மூன்று விடையங்களையும் அடிப்படையாகக் கொண்டு தேசியப் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற அடிப்படை அறிவுகூட ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவிற்கு இல்லை என கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன கடுமையாக சாடியிருக்கின்றார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்ட நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன, தமிழ் மக்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோட்பாட்டை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துவரும் ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடைபிடித்த மிகவும் மோசமான சிங்கள பௌத்த பேரினவாதக் கொள்கையையே பின்பற்றுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜனாதிபதி அவர்கள் சம அந்தஸ்த்தை ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் தேசியப் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக கூறி வருகின்றார். இதன்மூலமே அவருக்கு தேசியப் பிரச்சனையை தீர்ப்பதற்கான அடிப்படை தெளிவே இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது.

லெனின் முன்வைத்த சம உரிமை, சுயாட்சி அதிகாரம், சுய நிர்ணய உரிமை ஆகிய மூன்று அடிப்படைக் கோட்பாடுகளுக்கு அமையவே தேசியப் பிரச்சனையொன்று தீர்க்கப்பட வேண்டும் என்ற கொள்கையை ஐக்கிய நாடுகள் சபையும் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் சம உரிமை அடிப்படையிலேயே தேசியப் பிரச்சனைக்கு தீர்வு காணப்போவதாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி கூறுவதன் மூலமே சுயாட்சி அதிகாரத்தை தான் அங்கிகரிக்கப்போவதில்லை என்பதை தெளிவாக கூறியிருக்கின்றார். இதன்மூலம் மைத்ரிபால சிறிசேன மஹிந்த ராஜபக்சவிடமிருந்து பிரிந்து வந்துவிட்டதாக கூறினாலும் மஹிந்தவின் மிகக் கொடூரமான படுகொலை கலாசாரத்திற்கு எதிராக இருக்கின்றார் என்பது உண்மை. ஆனால் மஹிந்த ராஜபக்சவின் இனவாத மதவாத கொள்கைகள் ஊடாக அரசியலை கொண்டு செல்வது என்ற நிலைப் பாட்டில் மைத்ரி மிகத் தெளிவாக இருக்கின்றார்.

ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவின் சிங்கள பௌத்த கடும்போக்கு இனவாத கொள்கைகள் காரணமாகவே அவர் புதிய அரசியல் யாப்பை தயாரிக்கும் பணிகளையும் முடக்கி வைத்திருப்பதாகவும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன கடுமையாக சாடினார்.

தற்போது முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியல் யாப்பையும் தயாரிக்க முடியாது. புதிய அரசியல் யாப்பிற்கு எதிராக சுதந்திரக் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவிக்கும் போது ஜனாதிபதி மௌனமாக இருந்தாலும், அவரது முழுமையான ஆதரவுடனேயே இந்த எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்படுகின்றன என்பதே உண்மை.

மைத்ரிபால சுயாட்சி அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள ஒருபோதும் தயாரில்லை. அதேவேளை சுய நிர்ணய உரிமையையும் ஏற்றுக்கொள்ள அவர் தயாரில்லை. இவ்வாறான நிலைப்பாட்டில் இருந்துகொண்டே புதிய அரசியல் யாப்பை தயாரிக்கும் பணிகளை மைத்ரிபால சிறிசேன குழப்பி வருகின்றார். புதிய அரசியல் யாப்பை தயாரிப்பதாக கூறினாலும் இன்னமும் அதற்கான பேச்சுவார்த்தைகள் மீள ஆரம்பிக்கப்படாதுள்ளது. ஏனைய தரப்பினர் புதிய அரசியல் யாப்பு குறித்த நிலைப்பாட்டை கூறியிருக்கின்ற போதிலும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் தமது நிலைப்பாட்டை எழுத்துமூலம் தெரிவிக்காததன் காரணமாகவே அந்தப் பணிகள் முடங்கிக் கிடக்கின்றன. புதிய அரசியல் யாப்புத் தயாரிக்கும் பணிகள் முடக்கப்பட்டுள்ளது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

ஸ்ரீலங்கா அரச தலைவர் மாத்திரமன்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தேசியப் பிரச்சனையான இனப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்பது தொடர்பில் உறுதியான நிலைப்பாடு இல்லை என்றும் நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் குற்றம்சாட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தேசியப் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று கூறினாலும் தற்போது பொருளாதார விடையங்களுக்கே முன்னுரிமை கொடுத்து செயற்பட்டு வருகின்றார். தொழிற்சாலைகள், கைத்தொழில் பேட்டைகள் அமைப்பது குறித்தே ரணில் கதைக்கின்றார். ஆனால் தேசியப் பிரச்சனைக்கு தீர்வு காணப்படாது மீண்டும் மோதல்கள் வெடித்தால் நாட்டில் பொருளாதா அபிவிருத்தியை எப்படி ஏற்படுத்துவது. அதனால் தேசியப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் பயணத்தை மீள ஆரம்பிக்குமாறு நாம் பிரதமர் உட்பட இந்த அரசாங்கத்திடம் தெளிவாக கேட்டுக்கொள்கின்றோம்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி; ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்காத அளவிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டது!

தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி; ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்காத அளவிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டது!

வெளியானது மருத்துவமனையில் இருந்தபோது ஜெ பேசிய உரையாடல்.!

வெளியானது மருத்துவமனையில் இருந்தபோது ஜெ பேசிய உரையாடல்.!

தமிழர்களை பிளவுபடுத்தும் சதி- திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு

தமிழர்களை பிளவுபடுத்தும் சதி- திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு