அணு ஆயுதங்களை கைவிடவேண்டும் என வற்புறுத்தினால் டிரம்ப்புடனான பேச்சுவார்த்தை ரத்து; வடகொரியா எச்சரிக்கை!

6shares
Image

அணு ஆயுதங்களை கைவிடவேண்டும் என அமெரிக்கா வற்புறுத்தினால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புடன் இடம்பெறவுள்ள உச்சி மாநாட்டிலிருந்து தாம் வெளியேறவுள்ளதாக வடகொரியா எச்சரித்துள்ளது.

டிரம்ப் மற்றும் வட கொரியத்தலைவர் கிம் ஜோங்-உன்னுடனான சந்திப்பு ஜூன் 12 ம் திகதி நடைபெற தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் வடகொரியா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அமெரிக்கா பொறுப்பற்ற அறிக்கைகளை விடுப்பதாகவும் கெட்ட எண்ணங்களை வளர்ப்பதாகவும் வட கொரியாவின் துணை வெளிநாட்டமைச்சர் அறிக்கையொன்றில் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் மீதே இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

அவர் மீதான தமது உணர்வுகளை தாம் ஒளித்து வைக்க முடியாது என்றும் கிம் கீ-க்வான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெள்ளை மாளிகை கருத்துத் தெரிவிக்கையில்..,

தீர்மானித்ததைப் போல சந்திப்பு இடம்பெறும் என நம்புவதாகவும், கூட்டம் நடைபெறுமாயின், ஜனாதிபதி சந்திக்கத் தயாராக உள்ளார் என்றும் இல்லாவிட்டால் தாங்கள் கொடுத்துவரும் அதிகபட்ச அழுத்தம் தொடரும் என்றும் பேச்சாளர் சாரா சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

கொரிய தீபகற்பத்தில் அணுத் திட்ட நடவடிக்கையை வடகொரியா கைவிட விரும்பம் தெரிவித்திருந்ததை அடுத்தே கிம் முக்கும் டிரம்புக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இடம்பெறுவது சாத்தியமானது.

சரியாக என்னநடவடிக்கை மேற்கொள்ளப்டும் என்பது தெளிவாக தெரிவிக்கப்படவில்லை எனினும் வட கொரியா இந்த மாத இறுதியில் அதன் முக்கிய அணு சோதனை தளத்தை நீக்குவதாகவும் அந்த நிகழ்வைக் காண வெளிநாட்டு ஊடகங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தேசிய ஊடகத்தில் வெளிவந்த கிம்மின் அறிக்கையில், வடகொரியாவை மூலைக்குத் தள்ளி, அணு ஆயுதங்களைக் கைவிடவேண்டும் என்று ஒருதலைப்பட்சமாக வலியுறுத்தினால், பேச்சுவார்த்தைகளில் ஆர்வம் காட்டமுடியாது என்றும் சிங்கப்பூரில் இடம்பெறவுள்ள 12 ஜூன் உச்சிமாநாட்டில் கலந்துகொள்வது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kim Kye-gwan வட கொரியத் தலைமைகளிடையே பெருமதிப்பு வாய்ந்தவர் என்பதும் அமெரிக்காவுடனான சமரசப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டவர் என்பத்தும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு கிம் ஜாங் உன்னின் தனிப்பட்ட வார்த்தைகள் இவை அல்ல என்பதற்கும் குறுகிய வாய்ப்பே உள்ளதாகவும் நோக்கர்கள் கருதுகின்றனர்.

கிம்மின் இந்த அறிவிப்புக்கு சில மணிநேரங்கள் முன்னதாக அமெரிக்க - தென்கொரிய கூட்டு இராணுவ பயிற்சிகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் அந்தக் கோபத்தின் காரணமாக வட கொரியா இன்றைய தினம் தென்கொரியாவுடனான திட்டமிடப்பட்ட சந்திப்பிலிருந்து இருந்து வெளியேறியதும் சுட்டிக்காட்டத்தக்கது.

வட கொரியா முன்னதாக கூட்டு இராணுவப் பயிற்சிகளை முன்னெடுக்க அனுமதித்த போதும் தமது இராஜதந்திர முயற்சிகளைக் குறைத்து மதிப்பிட்டுள்ளதாகவும் இது ஒரு ஆத்திரமூட்டும் குழப்பம் மிக்க செயல் எனவும் விமர்சித்திருந்தது.

பியோங்யாங்கிலிருந்து வெளிவந்துள்ள கடுமையான தொனியிலான அறிக்கை அமெரிக்க அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால் வட கொரியா பேச்சுவார்த்தைக்கு முன்னர் தனது தரப்பைப் பலப்படுத்தும் நோக்காகவே இதனைப் பார்ப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை துடிக்கத் துடிக்க படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை துடிக்கத் துடிக்க படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கையின் எதிர்கால நிலை என்ன?!

வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கையின் எதிர்கால நிலை என்ன?!