கிம் ஜாங் உன் மற்றும் டிரம்ப் சந்திப்பின் போது இடம்பெற்ற முக்கிய சம்பவம்!

24shares
Image

சிங்கப்பூரில் கிம் ஜாங் உன் மற்றும் டிரம்ப் ஆகிய இருவரும் வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்புக்கு பின்னர் முக்கிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர்.

குறித்த ஒப்பந்தம் தொடர்பில் தற்போது முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆகிய இருவரும் சிங்கப்பூரில் வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு ஒன்றை நடத்தி முடித்துள்ளனர்.

குறித்த சந்திப்பானது எதிர்பார்த்ததை விடவும் சிறப்பாக நடந்து முடிந்தது என இருநாட்டு தலைவர்களும் வெளிப்படையாக தெரிவித்த நிலையில்,

இருவரும் கையெழுத்திட்ட ஒப்பந்தம் தொடர்பில் தற்போது 4 முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதில், வடகொரியா மற்றும் அமெரிக்கா பொதுமக்களின் அமைதி மற்றும் வளத்தை கருத்தில் கொண்டு இருநாடுகளும் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கொரியா தீபகற்பத்தில் நிலையான அமைதியை உருவாக்க அமெரிக்கா மற்றும் வடகொரியா இணைந்து செயல்படும்.

இந்த ஆண்டு ஏப்ரல் 27 ஆம் திகதி வடகொரிய தலைவர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ள படி, அணு ஆயுதமற்ற கொரியா தீபகற்பத்தை நோக்கி நடவடிக்கை எடுக்கவும் உறுதி ஏற்கப்பட்டுள்ளது..

இறுதியாக போர்க்கைதிகள் எவரேனும் அடையாளம் காணப்பட்டால் அவர்களை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த ஒப்பந்தங்கள் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆகிய இருவருக்கும் மகிழ்ச்சி அளிப்பதாக கூட்டாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை துடிக்கத் துடிக்க படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை துடிக்கத் துடிக்க படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கையின் எதிர்கால நிலை என்ன?!

வடக்கிற்கும் உலகளவில் விடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை; இலங்கையின் எதிர்கால நிலை என்ன?!